இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணவனை விட்டுவிட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா?

படம்
மகாபெரியவா சொன்ன தீர்ப்பு! கணவனை விட்டுவிட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா? என்றால், கூடாது என்கிறது சாஸ்திரம். ஆனால், அப்படிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது? பல வருடங்களுக்கு முன் மகாபெரியவா, தன்னை தரிசிக்க வந்த தம்பதிகளுக்குத் தீர்ப்பு சொன்ன சம்பவம் இதோ: ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு அனுகிரஹம் செய்து கொண்டிருந்த மகாபெரியவரை, நமஸ்கரித்து எழுந்தனர் ஓர் இளம் தம்பதியர். கணவருக்கு சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 வயது இருக்கலாம். இருவரும் பக்தி நிறைந்தவர்கள் என்பது அவர்கள் தோற்றத்திலேயே தெரிந்தது. கை உயர்த்தி ஆசிர்வதித்த மகாபெரியவா, அவர்களைப் பார்த்து, "இருவரும் ஒற்றுமையாக சௌக்கியமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டார். உடனே, "உங்க அருளால, ரொம்ப சௌக்கியமாக இருக்கோம் பெரியவா!" சொன்னார், கணவர். பெரியவா விடவில்லை. "நீ சொல்லிவிட்டாய். உன் ஒய்ஃப் வாயே திறக்கலையே!" என்று சிரித்தார். உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக்கொண்டு, "எம் பெரு அலமேலு பெரியவா...நாங்க ஒற்றுமையா சந்தோஷமாகத்தான் இருக்கோம்..!" சொன்னார். "இல்லை. சந்தோஷமா இருக்கறதா உன்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வடக்கநாதர்திருக்கோயில் .

படம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வடக்கநாதர்திருக்கோயில் .  அமர்நாத் பனிலிங்கம் பனியால் ஆனது போல் இந்த லிங்கம் முழுக்க முழுக்க நெய்யால் உருவானது . 12 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த நெய் லிங்கம் கல்லை போல் கெட்டியாக இறுகி உள்ளது. நெய் எப்போதாவது உருகி வெளிப்பட்டாலும் அதிசயமாக உருகி மறைந்து விடுகிறது . இங்குள்ள மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்கின்றனர். மூலவருக்கு பன்னீர் சந்தனம் போன்றவற்றை அபிஷேகம் செய்தாலும் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இங்குள்ள தீபத்தின் வெப்பமோ வேறு எந்த சூடோ இந்த நெய்யை உருக்கி விடுவதில்லை .பூச்சிகளாலும் இதற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை . இந்த லிங்கத்தை பாதுகாக்க பெரிய கவசத்தை அணிவித்திருக்கிரார்கள் . இங்கு உள்ள நந்தீஸ்வரர் தனி சந்நிதியில் விலகி இருக்கிறார் . மேலும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய பயன்படுத்திய வாசுகி என்கிற பாம்பு இங்கு வாயிலில் கோயில் மணியாக இருக்கிறது. இதை அர்ச்சகர் மட்டும் பிரதோஷ காலங்களில் பூஜையின் போது அடிப்பார். பக்தர்கள் யாரும் தொட அனுமதி இல்லை. இத்தலம் காசிக்கு நிகரான தலம் என்று கூறப்படுகிறது . இங்குள்ள வட

அருள்மிகு சொரிமுத்து ஐய்யனார்

படம்
சொரிமுத்து அய்யனார் கோயில் செல்லும் பக்தர்களே கவனியுங்கள்..  நீங்கள் கோயிலுக்கு செல்லும் முன்பு அங்குள்ள புனிதத்தை தெரிந்து கொள்ளுங்கள். வனத்தை அசுத்தம் செய்யாதிர்கள்  முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது.  சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது.  இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம்.  குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள். மகாலிங்கம், சொரிமுத்தைய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மரட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடிமாடசாமி, மொட்டை

நாலம்பல யாத்திரை

படம்
இராமாயணம் மாதம் ! ராமர், பரதன், லட்சுமணன், சத்துருக்கனன் ஆகிய நான்கு சகோதரர்களுக்கும் அமைக்கப்பட்ட தனித்தனிக் கோவில்களை ஒன்றாகச் சேர்த்து, நான்கு கோவில்கள் எனப் பொருள்படும் வகையில் மலையாள மொழியில் ‘நாலம்பலம்’ என்று சொல்கின்றனர். கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த நான்கு கோவில்களில், ராமர் கோவில் திருப்பிரையார் என்னுமிடத்திலும், பரதன் கோவில் இரிஞ்சாலக்குடா என்ற இடத்திலும், லட்சுமணன் ஆலயம் மூழிக்குளம் என்ற பகுதியிலும், சத்துருக்கனன் கோவில் பாயம்மல் என்னும் இடத்திலும் அமைந்திருக்கின்றன. திருப்பிரையாரில் உள்ள ராமர் கோவிலில் தொடங்கி, பாயம்மலில் உள்ள சத்துருக்கனன் கோவில் வரை ஒரே நாளில் நிறைவடையும் வகையில் புனிதப் பயணமாகச் சென்று வழிபடுவதை மலையாளத்தில் ‘நாலம்பல யாத்திரை’ என்கின்றனர். இந்தப் புனிதப் பயணத்தை மலையாள நாட்காட்டியின்படி கர்க்கிடக மாதத்தில் (தமிழ் மாதம் ஆடி) மேற்கொண்டு ராம சகோதரர்களை வழிபடுவது மிகவும் சிறப்பானது என்கின்றனர். ராமர், லட்சுமணன், பரதன், சத்துருக்கனன் ஆகிய நால்வரும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை ஆகிய நான்கு உயர் லட்சியங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றனர். ராமரை மற்

அழிந்து வரும் வைகை ஆறின் பிறப்பிடமாக விளங்கும் மேகமலை

படம்
அழிந்து வரும் வைகை ஆறின் பிறப்பிடமாக விளங்கும் மேகமலை இங்கிருந்து மூலவைகை ஆறு உருவாகி வைகை அணைக்கு வைகை ஆறாக வந்து சேர்கிறது.. தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்த மலைகள் என்று சொல்லப்படும் பச்சைக்கூமாச்சி மற்றும் வெள்ளிமலைகள் மீது ஏறியிறங்கிய அனுபவங்கள் ஏராளம். ”பச்சை மரகதப் பட்டு உடுத்தி படுத்துக் கிடக்குது இயற்கை”… என்ற வையம்பட்டி முத்துச்சாமியின் பாடல் வரிகளின் உயிர்ப்பை அங்குதான் கண்டேன்.  பச்சைமலைகளின் மீதான பயணங்களில் நாங்கள் அனைவரும் மனசெல்லாம் பசுமை பூசிக்கொண்டது போலொரு உணர்வில் வாழ்ந்த காலமது. பெயர் தெரியாத மரங்களின் பூக்கள்…… காய்கள்….. கனிகள்………. சில்லென்ற அருவிகளின் குளிர்தென்றல்…… என அணி நிழல்காடுகள் கொண்டது எனது பூமி……. ஆனால் தற்போது அழிந்து வருகிறது. வருசநாட்டு மலைப் பகுதிக்குற்பட்ட மேகமலை வனப்பகுதியில் 26 ஆயிரத்து 910 எக்டேர் வனநிலம், வனவிலங்குகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு வகை வனப்பகுதியிலும், ஏதாவது ஒரு வகை அபூர்வ வகை விலங்குகள் காணப்படும். ஆனால் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் எல்லா வகை அபூர்வ விலங்குகளும் உள்ளன.

களவு போன சுவடி

படம்
காஷ்மீரத்தில் இருந்தது போதாயண உரையின் முழு வடிவமல்ல. இரண்டு லட்சம் படிகள் (படி என்பது எழுத்தைக் குறிக்கும் பழைய அளவு) கொண்ட உரையின் சுருக்கப்பட்ட வடிவம் மட்டுமே. அந்தச் சுருக்கம் இருபத்தி ஐயாயிரம் படிகள் கொண்டது. எப்போது வந்து சேர்ந்தது என்பதே தெரியாமல் பலப்பல காலமாக காஷ்மீரத்தில் காப்பாற்றப்பட்டு வந்த ஓலைச்சுவடி அது. சரஸ்வதி பீடத்தில் இருந்த அந்தச் சுவடிக்கட்டை காஷ்மீரத்து மன்னன் கண்ணேபோல் காத்து வந்தான். அங்கே அதை எடுத்துப் படிக்கிறவர்களோ, சிந்திக்கிறவர்களோ, அதன் முக்கியத்துவம் உணர்ந்தவர்களோ யாரும் இருக்கவில்லை. புராதனமான ஓர் ஓலைச்சுவடிக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே தவிர, அதில் மூழ்க யாருமில்லை. சீடர்களோடு காஷ்மீரத்தை அடைந்த ராமானுஜர் மன்னரைச் சந்தித்துத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். 'அடியேன் ராமானுஜன். தென் திருவரங்கத்தில் இருந்து வருகிறேன்.' மன்னனால் நம்ப முடியவில்லை. ஓர் ஓலைச்சுவடிக்காக அத்தனை தூரத்தில் இருந்து ஒருவர் வருவாரா! அவனால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. 'அது அவசியம் மன்னா. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயண விருத்தியை அடியொற்றி உரை எழுத

சுந்தர காண்டம்

படம்
சூடாமணிக்கு அபிமான தேவதை வாயு பகவான். சீதாதேவி சூடாமணியை அனுமனிடம் கொடுத்தார். இந்த ரூபத்தில் எப்படி கடல் தாண்டி வந்தார் என சீதம்மைக்கு சந்தேகம். விசுவரூபம் எடுத்துக் காட்டுகிறார். சீதம்மா சிரஞ்சீவியாக இரு என அனுக்கிரகம் செய்தார்கள்* *வந்த காரியம் நல்ல படியாக முடிந்தது. இராம தூதனானத் தனக்கே எவ்வளவு பலம் எனக் காட்ட விரும்பினார். இராமனின் தாஸனான எனக்கே இவ்வளவு பலம் என்றால் இராமனுக்கு எவ்வளவு பலம் உள்ளது என்பதை உணர்த்த எண்ணினார். இராம சீதாதேவியரின் அருட்கடாக்ஷம் அனுமந்தனுக்கு உண்டு. ஹரி ஸ்மரணை லக்ஷ்மி கடாக்ஷத்தைக் கொடுக்கும்.*  *அசோகவனத்தை நாசம் செய்ய வேண்டும். கோடிக் கணக்கான படைகளை இராவணன் அனுப்ப அடித்து துவம்சம் செய்தார். பஞ்ச பிராணராக நம்முள் இருந்து வேலை செய்பவர், ஆயுதங்கள் ஏதுமின்றி அனைவரையும் அழித்தார். மந்திரி புத்ரர்கள், சேனாதிபதிகள் என்று அடித்து துவம்சம் செய்தார். மரங்களை பிடுங்கி எறிகிறார். இராவணனின் படைகளை மூன்றில் ஒரு பங்கைத் தானே அழித்தார். இராவணனின் மைந்தன், ராவணனுக்கு சமமானவன் என எண்ணப்படும் அக்ஷகுமாரனை தரையில் தேய்த்து அழிக்கிறார். இதன்மூலம் தன்னால் ராவணனையும் கொல்ல முடிய

புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பெரியவா சொல்கிறார்கள்

படம்
ஒரு முறை மஹா பெரியவா பூஜை எல்லாம் முடிந்து விட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஒரு பந்தளில் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் புகைப்படம் எடுத்தார். பெரியவா உடன் இருந்த ஒருவரை அழைத்து அவர் காதில் ஏதோ சொன்னார். உடனே அவர் அங்கிருந்து புகைப்படம் எடுப்பவரிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பெரியவா சொல்கிறார்கள் தயவு செய்து புகைப்படம் எடுக்காதிர்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். புகைப்படம் எடுத்தவர்கோ பயம். நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்று உள்ளுர பயம் வந்து விட்டது.  சிறிது நேரம் கழித்து பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவரை அழைத்த மஹா பெரியவா மீண்டும் அவரிடம் ஏதோ சொல்ல அவர் விரைந்து சென்று இரண்டு பெரிய துணியை கீத்து கொட்டாய் மீது போட்டார்கள். எல்லோரும் பெரியவாளுக்கு வெயில் அதிகமாக இருப்பதால் தான் மேலே துணி விரிக்கிறார்கள் என்று நினைத்தார்கள்.  மீண்டும் பெரியவா அவர்கள் கைங்கர்யம் செய்பவரை அழைத்து ஏதோ சொல்ல அவர் சுற்றும் முற்றும் ஏதோ தேடினார். ஆம் அதோ தெரிகிறாரே அவர் தான் என்று ஓடி வந்து அவரிடம் பெரியவா உங்களை கையோடு அழைத்து வர சொன்னார்கள் எ

ராமனின் தரிசனம் கிடைக்க வழி செய்வதாக வாக்களியுங்கள்

படம்
இலங்கைக்கு பாலம் கட்ட முடிவெடுத்த ராமர். வானரங்களை அழைத்து, மலைகளில் உள்ள பாறைகளை வெட்டி எடுத்து வர கட்டளையிட்டார். வானரங்களும் அவ்வாறே பெயர்த்து வந்து சேர்த்தன. கடலில் பாலம் கட்டுவதற்கான பணியை நளன், நீலன் என்னும் இருவரிடம் ராமர் ஒப்படைத்தார்.  வானரங்களில் பலசாலியான அனுமன் வடக்கு நோக்கி பயணித்து ஒரு மலையை அடைந்தார். அடியோடு அதைப் பெயர்க்க முயற்சித்தார். ஆனால், அசைக்க முடியவில்லை. அப்போது அந்த மலை,“ஆஞ்சநேயரே! எனக்கு சத்தியத்தின் வடிவமான ராமனின் தரிசனம் கிடைக்க வழி செய்வதாக வாக்களியுங்கள். இப்போதே நானாகவே வந்துவிடுகிறேன்,” என்றார். ஆஞ்சநேயரும் அவ்வாறே வாக்களித்தார்.  மகிழ்ச்சியுடன் ஆஞ்சநேயர் கையில் மலை அமர்ந்து கொள்ள, அணை கட்டும் இடம் நோக்கிப் புறப்பட்டார். பிருந்தாவனம் பகுதிக்கு மேலாக ஆஞ்சநேயர் வந்த சமயத்தில், அணை கட்டும் பணி முழுமையாக முடிந்து விட்டது. எனவே, ஆஞ்சநேயர் மலையை ஒரு இடத்தில் வைத்து விட்டார். வருத்தம் கொண்ட அந்த மலை, “கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் செல்கிறீர்களே! இது தான் ராமனின் தொண்டர் செய்யும் வேலையா?” என்று வருத்தமும் கோபமும் கலந்து கேட்டது. ஆஞ்சநேயரின் பாடு திண்டாட்

ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது யார்?

படம்
வடநாட்டில் பிரஸித்தமாக வழங்கி வரும் ஹனுமத் புராணத்திலிருந்து ஒரு கதை! நாரதர் கலகம் ஒரு முறை ஹனுமான் தன் அன்னை அஞ்சனா தேவியை தரிசிக்க ஆவலுற்று ராமரிடம் அனுமதி பெற்றுக் கிளம்பினார். அதே தருணத்தில் காசி மஹாராஜன் ராமரின் தரிசனத்திற்காகக் கிளம்பினான். வழியில் நாரதர் காசிராஜனைப் பார்த்து,” நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.” நான் ராமசந்திர மஹாபிரபுவைத் தரிசிக்கச் சென்று கொண்டிருக்கிறேன்” என்றான் காசிராஜன். “எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டுமே!”என்றார் நாரதர். “தங்கள் கட்டளை என் பாக்கியம்” என்றான் காசி ராஜன். அங்கு அரச சபையில் எல்லோருக்கும் வந்தனம் செய். ஆனால் அங்கு இருக்கும் விஸ்வாமித்திரருக்கு மட்டும் வந்தனம் செய்யாதே. அவரைக் கண்டு கொள்ளாதே!” என்றார் கலக நாரதர். காசிராஜனுக்குத் தூக்கி வாரிப் போட்ட்து. மஹாமுனிவரான விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா! ஐயோ! இது என்ன கோரம்!! விக்கித்து நின்ற அவன் நாரதரை நோக்கி,”மஹரிஷி விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா?ஏன், ஸ்வாமி” என்றான். “ஏன் என்பது பின்னால் தெரியும். சொன்னதைச் செய்வாயா?” என்று கேட்டார் நாரதர். கலக்கமுற்ற காசிராஜன் இருதலைக் கொள்ளி எறும்பானான

மதுரையில் பழமையான மகாவீரர் சிலை மற்றும் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

படம்
மதுரையில் பழமையான மகாவீரர் சிலை மற்றும் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகில் உள்ள காரைக்கேணி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜசோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. செங்கமேடு பகுதியில் உள்ள பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அங்குள்ள கற்களில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இந்தக் கல்வெட்டுகள் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு என்பதும் தெரியவந்தது. இது மட்டுமன்றி சத்திரத்தின் தரையிலும், கிணற்றின் உள்ளேயும் 8 வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருதுப் பெயருடன் தொடங்கும் முதலாம் இராஜராஜசோழனின் 13-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. மேலும் 3¼ அடி உயரமும், 2¼ அடி அகலமும் கொண்ட மகாவீரர் சிலையும் கண்டறியப்பட்டுள்ளது. மூன்று சிங்கங்கள் கொண்ட பீடத்தில் அர

உடல் என்னும் ஓட்டை வீடு ஒன்பது வாசல்

  உடல் என்னும் ஓட்டை வீடு ஒன்பது வாசல்  மறம் சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர் அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆள் செய்யாதே புறம் சுவர் கோலஞ் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே.  'மறம்' - அற வழியில்லாத செயல்கள் எல்லாமே மறம் எனப்படும். காமம், குரோதம், பொறாமை, ஆணவம் எல்லாம் நிறைந்தவனிடம் அணுகவே பயப்படுவார்கள் எல்லோரும்.  'சுவர் மதிள்' - தீய குணங்களையும் பண்புகளையும் ஓர் அரண் போலத் தன்னைச் சுற்றி எழுப்பியுள்ள மனிதனுக்கு நல்லவர்கள் அறிவுரை சொல்லப் போனால், அவர்களை மிரட்டி ஒதுக்குவான்.  ராவணன், மாரீசன், மால்யவான், கும்பகர்ணன், விபீஷணன் எல்லோரும் சொன்ன அறிவுரையை சிறிதும் ஏற்கவில்லை. பாவம், மாரீசனும், கும்ப கர்ணனும் மடிந்தே போனார்கள். மால்யவானும், விபீஷணனும் துரத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். வீர சுந்தர பீம ராயன் என்னும் அரசன், அண்டை நாட்டவர்களோடு போர் புரிந்து, எல்லோருக்கும் எதிரியாகி, தன்னுடைய ஊரைச் சுற்றி, பெரிய மதிள் எழுப்பி, இயற்கைச் சீற்றத்தில், வெளி உதவி எதுவும் கிடைக்காமல் இறந்து போனான்.  'மறுமைக்கே வெறுமை பூண

அனுமனின் பார்வை

படம்
சமர்த்த ராமதாசர் ராமாயணம் எழுதிக் கொண்டே தனது சிஷ்யர்களுக்கு விளக்கமும் சொல்லி வந்தார். ராமாயணம் படிக்கும் இடங்களில் அனுமனும் அமர்ந்து கைகூப்பி கேட்டு மகிழ்வான் என்பது அனைவரும் அறிந்ததே, அவ்வாறு ராமதாசர் படித்து வருங்கால், எவர்க்கும் தெரியாமல் அதைக் கேட்டு மகிழ்ந்தான் அனுமன்.  ஒரு கட்டத்தில் ராமதாசர், அனுமன் அசோக வனத்தை அடைந்தபோது அங்கு வெண்ணிற மலர்கள் பலவற்றைக் கண்டான். எனப் படித்தார். இதைக் கேட்ட அனுமன், நேரில் வந்து, ஐயா, நான் கண்டது அனைத்தும் சிவப்பு மலர்கள்! தாங்கள் எழுதிப்படித்து வருவதைத் திருத்திக் கொள்ளுங்கள் என்றான்.  இதைக் கேட்ட ராமதாசர், நான் எழுதியிருப்பது சரியே எனக் கூறினார். அனுமனோ, நான் நேரில் சென்றவன். அங்கு நான் கண்ட மலர்கள் சிவப்பாக இருக்க, நீங்கள் எவ்வாறு வெள்ளை மலர்கள் என்று எழுதலாம். எனச் சற்று உரத்த குரலில் ஆட்சேபித்தார்.  முடிவில், இவ்வழக்கு ராமரிடம் சென்றது. ஸ்ரீராமர் அனுமனை விளித்து, ராமதாசர் படித்தவை அனைத்தும் உண்மையே! அசோகவனத்தில் நீ கண்ட மலர்கள் யாவும் வெண்மைதான்.  ஆனால், அப்போது உனது கண்கள் இரண்டும் கோபத்தால் சிவந்து காணப்பட்டன. அதனால் பூக்களின் நிறமும் உனக

கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி

படம்
குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான் ஒரு தபஸ்வி என்பதையும் மறந்து அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தார்.  கிருதாசீயும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டாள். தவசிரேஷ்டரின் மனதில் சபலம் ஏற்பட்டால், சாபத்திற்கு ஆளாவோமே என்ற பயத்தில் தப்பியோட முயன்றாள். நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தைப் பெறும் கிருதாசி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிளிகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்றன.  தானும் ஒரு பச்சைக் கிளியாக மாறினாள். கிளிக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள். அவள் கிளியாக மாறிய பின்னும்கூட, வியாசரால் அவளை மறக்க முடியவில்லை. அவரது அந்த நினைவே, அந்தக் கிளியை கர்ப்பமாக்கியது. மீண்டும் சுயவடிவமெடுத்த கிருதாசீ தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு கிளி முகத்துடன் ஒரு பிள்ளை பிறந்தான். (வேறு சில வழிகளில் ஹோமகுண்டத்தில் அவர் பிறந்தார் என்றும் சொல்வதுண்டு) அப்பிள்ளை தான் சுகபிரம்மர். சுகம் என்றால் கிளி.  தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர். குழந்தையை புனிதமா

கர்மாக்களை கழிக்க அகத்தியர் கர்மகாண்டம் நூலில் இருந்து

படம்
உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்... (1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-) தானியங்கள் வைத்தால் = 5 % (-) (2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-) (3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-) (4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-) (5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-) (6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-) (7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-) (8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-) (9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு கொடுத்தால் = 86% (-) (10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-) (11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-) (12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-) (13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-) (14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-) (15)நோயளிகளுக்கு = 93% (-) (16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-) (17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல். இவைகளுக்கு துன்பம்

தன் தந்தையாரின் இனிய நண்பர் ஜடாயு

படம்
சீதையைக் காணாமல் பரிதவித்த ராமன் அவளைத் தேடித் தேடி நொந்தான். எங்கே போயிருப்பாள், யார் செய்த சதி இது என்று எதுவும் புரியாமல் குழம்பிய அவன், தன் விழிகளில் சீதையைத் தேக்கியதால், தேடிய இடமெல்லாம் அவளே நிறைந்திருப்பது போன்ற பிரமை. அது தந்த ஏமாற்றத்தைத் தாங்கியபடி தளர் நடை பயின்றான். உடன் இளவல், அவனுக்கும் மேலான வேதனை, மர்மம் விலகா குழப்பம்... அதோ, அங்கே யார் தரையில் படுத்திருப்பது? அசைய முயன்றும் முடியாத முயற்சிகளினூடே முனகலும், அரற்றலுமாக, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியபடி திணறிக்கொண்டிருப்பவர் யார்? ராமன், தன் இயல்பான கருணைப் பெருக்கத்தோடு அந்த நபரிடம் ஓடோடிச் சென்றான். என்னவோர் அதிர்ச்சி! அங்கே வீழ்ந்துகிடந்தவர், தன் தந்தையாரின் இனிய நண்பர், ஜடாயு! பட்சிகளின் பேரரசனாக விளங்கி, தசாத சக்கரவர்த்திக்கே பல உதவிகள் புரிந்தவர். தசரதன் மரணமடைந்த செய்தி கேட்டதும் ‘என்னுயிரும் என்னைவிட்டு நீங்காதோ’ என்று அழுது நண்பனின் இழப்பை வருந்தித் தெரிவித்தவர். தசரதரும் தான் வெறும் உடல்தானென்றும், ஜடாயுவே தன் உயிர் எனவும் நட்பு மேலிட சொல்லி மகிழ்ந்திருக்கிறார். ‘உயிர் கிடக்க உடலை விசும்பேற்றினார் உணர்விறந்

திருவடிகளை நினைத்தே துவங்குவதால் ஸர்வ மங்களம் உண்டாகட்டும்

படம்
லக்னம் எதுவாயினும், தினம் எதுவாயினும், நக்ஷ்த்திர பலம் எதுவாயினும், சந்திர பல லக்னம் எதுவாயினும், வித்யா பலம், தெய்வ பலம் எந்த அளவாயினும் லக்ஷ்மி நாதனுடைய (ஸ்ரீமந் நாராயணனது) திருவடிகளை நினைத்தே துவங்குவதால் ஸர்வ மங்களம் உண்டாகட்டும். ஓம் அச்யுதாய நம: ( பர நிலை ) ஓம் அநந்தாய நம: ( வியூஹ நிலை ) ஓம் கோவிந்தா3ய நம: ( விபவ நிலை ) ஓம் கேசவாய நம: ( அந்தர் யாமித்வ நிலை ) ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: ( அர்ச்சா நிலை ) இதில் ஓம் அச்யுதாய நம: என்றதினால், பரமபத நாதனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன்னை அண்டியவர்களை அகலவிடாமல் ரக்ஷிப்பவன், அழிவற்றவன், அடியார்களை நழுவவிடாமல் மோக்ஷத்தை அளிப்பவன், ஸகல புவனங்களுக்கும் ஆதாரமாய் உள்ளவன் என்கிறபடி பரநிலை விவரிக்கப்படுகிறது. அடுத்ததாக ஓம் அநந்தாய நம: என்றதினால் பரமபதத்தில் எழுந்தருளியுள்ள பரவாஸு தேவனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன்னிடமிருந்து மூன்று வியூஹ மூர்த்திகளை தோன்றுமாறு ஸங்கல்பித்தார். அதன்படி ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய மூன்று பேரும் அவரிடமிருந்து தோன்றினர். அந்த பரம புருஷனின் ( அநிருத்தனிடமிருந்து ) நான்காவது ஹம்சம் இவ்வுலகில் திருப்பாற்கடலில் அவதரித்தது.

வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் பரமபதநாதர்

படம்
திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் பரமபதநாதர் (சிவப்பு வண்ண கட்டமிடப்பட்டிருப்பது), மற்றும் ஆனந்த நிலைய விமான வெங்கடேஸ்வரர்! ஆனந்த நிலைய விமான வெங்கடேஸ்வரர்! தரிசிக்க ஆனந்தம் கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார். அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரா! நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார். கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார். வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம். பரமபதநாதர் (சிவப்பு வண்ண கட்டமிடப்பட்டிருப்பது), அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரா! ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டு இருக்கும் இந்த திருக்கோலம் தான் பரமபதநாதர் எனப்படுகிறது. இது ஒரு வெள்ளை அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும். இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் ப

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

படம்
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான