இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tiruvotu tan enru elanamaka enna ventam | திருவோடு தானே என்று எளனமாக எண்ண வேண்டாம்:

படம்
திருவோடு தானே என்று எளனமாக எண்ண வேண்டாம்:  இதைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை. இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய அளவு, தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். அடேங்கப்பா அங்கு இருந்து எப்படி இங்கு வந்தது..? இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது. இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும். மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. இவற்றின்விதை பரவும்முறை கடல் நீரோட்டத்தின் மூலமே.. விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இ

Chakra Garuda Karvam | சக்கர கருட கர்வம்

படம்
ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார். அது சவுகந்தி என்ற மலரின் மணம். அவ்வகை மலர் குபேரனின் அழகாபுரி நந்தவனத்தில் மட்டுமே இருப்பது அவருக்குத் தெரியும்.  அந்த சூழ்நிலையில் அவருக்கு தன் வாகனமான கருடனின் மீதும், தன் ஆயுதமான சக்கரத்தின் மீதும் கவனம் சென்றது. அவைகள் இரண்டும் நீண்டகாலமாகவே ஆணவம் கொண்டு ஆர்பாட்டம் செய்து வந்தன. பரமாத்வையே ஏற்றிச்செல்வதால் தானே உயர்ந்தவன் என்று கருடன் நினைத்தது.  அதைப்போலவே சக்ராயுதமும் தான் இல்லையென்றால் பரமாத்மாவே செயல்பட முடியாது. என்னால்தான் பலரும் பரமாத்மாவைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்ற கர்வத்துடன் இருந்தது. கிருஷ்ணனுக்கு இவர்களின் தம்பட்டமும் கர்வமும் தெரிந்தே இருந்தது.  தக்க சமயத்தில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டி பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார். இப்போது அவருக்கு அந்த சமயம் கிட்டிவிட்டது. இதைத்தான் நேரம் வருவது என்பார்கள். இப்போவெல்லாம் ஆட்டம் போடத்தாண்டா செய்வே.  உனக்கும் ஒரு நேரம் வரும் பாரு, என சாதாரண மனிதர்களான நாம் பேசிக் கொள்வது போல, தெய்வத்தை சுமக்கும் கருடனுக்கும், தெய்வமே சுமக்கும் சக்கர

Pandiya Naadu Kudaivarai Kolunticar | பாண்டி நாட்டுப் பழங் குடவரைக் கொழுந்தீசர்

படம்
பாண்டி நாட்டுப் பழங் குடவரைக் கொழுந்தீசர் 'சாமி கூப்பிட்டாத் தான் சாமியைப் பாக்க முடியும்' - உண்மை! எத்தனையோ முறை எந்தத்தக் கோயிலுக்கோ போக வேண்டும் என்று நினைக்கிறோம்! முடிவதில்லை. கோயிலுக்குச் சென்றாலும் இறைவனைக் காணும் வாய்ப்பு கிட்டாமல் போய் விடும். கண்டாலும் மனம் ஒன்றி வணங்காமல் நின்று விடுகிறோம். சென்ற வாரம் நினைக்காமல் கொள்ளாமல், திடீரென்று ஒரு அழகிய திருக்கோயிலுக்குச் செல்லும் பேறு கிடைத்தது. மரங்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சி நிற்க, அமைதியான அழகான சூழலில், பாண்டியநாட்டின் பழமையான குடவரையில் அமர்ந்திருக்கும் ஈசன் எங்களை வரவழைத்து அருளினார். 'மூவரை வென்றான்' - இ்ந்த ஊரையோ, இங்கிருக்கும் மொட்டமலை என்ற குன்றில் பாண்டியர் காலக் குடவரைக் கோயில் பற்றியோ நான் கேள்விப் பட்டது கூட இல்லை. அதுவும் வரலாறு, பாரம்பரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், சுற்றுலாத்துறை வழிகாட்டியுமான திருமதி வாணி செங்குட்டுவன் அவர்களுடன் சென்று காண்பேன் என்று ஞாயிறன்று நினைக்கக் கூட இல்லை. திடீரென்று இரவில் என் சகோதரி, வாணி இவர்களுடன் இராசபாளையம் அருகிலுள்ள இடங்களைக் காணலாம் என்று திட்டமிட்டு, மறுநாள் த

Thottichi Amman Palani malai | தொட்டிச்சி அம்மன் பழநிமலை

படம்
சித்தர்கள் வணங்கிய தொட்டிச்சி அம்மன்! பழநிமலை ! அனேக அதிசயங்களை கொண்டது பழநிமலை இதன் அடிவாரத்தில் அதில் வடக்குகிரி வீதியில் உள்ளது, பலநுாறு ஆண்டுகளுக்கு முன் சித்தர்கள் போகர், புலிப்பாணி வணங்கிய தொட்டிச்சியம்மன் கோயில். தொட்டிச்சி அம்மனை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகின்றனர். புலிப்பாணி ஆசிரமம் சிவானந்த பாத்திர சுவாமிகள் கூறியதாவது: இவ்வுலகின் காவல் தெய்வமாக தொட்டிச்சியம்மன் வணங்கப்படுகிறார். பழநி நவபாஷாண சிலையை வடிவமைத்த போகர் மற்றும் அவரது சீடர் புலிப்பாணி சித்தர்களால் இக்கோயில் உருவாக்கப்பட்டது. மலைக்கோயில் மூலவர் ஞான தண்டாயுதபாணி அம்மனின் முகங்கள் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. நவராத்திரிவிழா, பவுர்ணமி, செவ்வாய், வெள்ளியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் பால், பன்னீர், சிவப்பு மலர்களால் அபிஷேகம் அர்ச்சனை செய்து அம்மன் அருள்பெறுகின்றனர், என்றார். அம்மனுக்கு புலிபாணி ஆசிரமத்தின் சந்நிதி உள்ளது.

Pandavarkalin Vetriyai Thedi Tantavanukku Thiruvila | பாண்டவர்களின் வெற்றியை தேடி தந்தவனுக்கு திருவிழா

படம்
பாண்டவர்களுக்கும் துரியோதனனின் கூட்டத்தாருக்கும் போர் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாகத் திகழ்ந்தவன் அரவான் என்று மகாபாரதம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். அரவான் களப்பலியானதால்தான் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றார்கள் என்பது புராண வரலாறு! பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கிருஷ்ணர் பல தந்திரங்களை கையாண்டார், பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனிடம், பாண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற என்ன வழி? எனக் கேட்கிறார். சகாதேவனும், ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து வெற்றிக்கான வழியை கூறுகிறார். போர் ஆரம்பிப்பதற்குரிய நாளைக் குறிப்பிட்டுச் சொன்னதுடன், சாமுத்ரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி உறுதி என கூறுகிறார். சகாதேவன் குறிப்பிட்ட லட்சணம் பொருந்தியவர்கள் கிருஷ்ணன். அர்ச்சுனன் அவனது மகன் நாக கன்னிக்குப் பிறந்த அரவான் ஆகிய மூன்று பேரே. அர்ச்சுனன் இல்லேயேல் போர் இல்லை. கண்ணன் இல்லையேல் வருங்காலமே இல்லை. மிஞ்சியிருப்பது அரவான். எனவே, அரவானைச் சந்த

Madurai Kovalan Pottal | கோவலன் பொட்டல்

படம்
சிலப்பதிகாரத்தில் வரும் கோவலனின் தலைவெட்டப்பட்ட இடம்தான் கோவலன் பொட்டல் என்று நம்பப்படுகிறது. கோவலன் பொட்டலில் அமைந்துள்ள ஒரு கல்லை வெட்டுப்பாறை என்று அழைக்கின்றனர். இங்குள்ள சிறு கோயிலிலுள்ள சிற்பங்களை கோவலன், கண்ணகி, மாதவி என்றும் கூறுகின்றனர். பழங்காநத்ததிற்கு மிக அருகில் கோவலன் பொட்டல் அமைந்துள்ளது. பழங்காநத்தம் என்னும் பெயரே இது பழங்காலத்திலேயே மக்களின் குடியிருப்புப் பகுதியாகத் திகழ்ந்ததைக் குறிக்கிறது. பழங்கால நத்தம் என்பதே பழங்காநத்தம் என மருவியுள்ளது எனலாம். கோவலன் பொட்டலில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை 1981 இல் அகழாய்வு நடத்தியது. அவ்வாய்வின் பயனாகப் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் சில வெளிக் கொணரப்பட்டன. கருப்பு, சிவப்பு வண்ண மட்பாண்டங்களும், புதிய கற்காலக் கைக்கோடாரி ஒன்றும், சில செப்புக்காசுகளும் இவ்வாய்வில் கிடைத்தன. கோவலன் பொட்டலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அகழாய்வின் மூலம் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சங்கப்பாண்டியர் காலச் செப்புக்காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதில் எவ்விதமான பெயர் அல்லது எழுத்துக்களும் இல்லை. நீங்கள் கோவலன் பொட்டலை பார்த்திருக

Nandi Bhagavan Parriya 50 Kurippukal | நந்தி பகவான் பற்றிய 50 குறிப்புகள்

படம்
நந்தி பகவான் பற்றிய 50 குறிப்புகள். 1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். 2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. 3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். 4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது. 5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார். 6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம். 7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை

மதுரை மீனாட்சி அம்மன் - பசுவனுக்கு மண் எடுத்தல்

படம்
மதுரை மீனாட்சி அம்மன் - ஐப்பசி கந்தசஷ்டி கோலாட்ட உற்சவம் 2020 - இரண்டாம் நாள் ஆறு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒரு விசேஷம் “பசுவனுக்கு மண் எடுத்தல்” என்ற சடங்கு !!! ஐப்பசி மாதம் அடைமழை பெய்து ஊர் செழிக்க வேண்டி, பெண்கள் (குறிப்பாக சிறுமியர்) ஆற்றங்கரை ஓரம் மண் எடுத்து அதில் பசுவன் (நந்தி) உருவம் செய்து அதனைச்சுற்றி கோலாட்டம் ஆடி, இறுதியாக அதனை ஆற்றிலோ குளத்திலோ விஸர்ஜனம் (கரைத்து) செய்து கொண்டாடுவார்கள் !!! இதன் தொடர்ச்சியாகத்தான் திருக்கோவிலில் இருக்கும் நந்தியைச்சுற்றி தொட்டி அமைத்து மழை வேண்டி நீர் நிரப்புதல் எல்லாம், என்று எண்ணுகிறேன் ... மதுரையிலே அம்பிகையே கோலாட்டம் ஆடுகிறாள் !!! உற்சவம் தொடங்கும் முன் இன்றும் பசுவனுக்கு மண் எடுக்கும் வைபவம் நடைபெறுகிறது !!! வீதி சுற்றி ஆடி வந்தபின்னர் அம்மன் சன்னதி திருவிழா செட்டி மண்டபத்தில் பத்தி உலாத்தலும் ஒருகாலத்தில் நடந்துவந்தது !! (இதில் மேலும் சிறப்பு யாதெனில் அம்பிகைக்கென்றே கொண்டாடப்படும் நான்கு உற்சவங்களிலும் பத்தி உலாத்தல் நடைப்பெற்றது !!! இன்றும் அதனை ஆடி உற்சவத்தில் நாம் கண்குளிர தரிசிக்கலாம் !!! ) எது எப்படியோ சர்வ லோகத்தையும