இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Thiruchendur Kodimaram History in Tamil | திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை

படம்
அப்படியென்றால் நீங்கள் அவசியம் திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா? திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும், மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடி மரத்துக்குத்தான் பூஜை நடைபெறும் . இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற சந்தன மரமாகும். இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது. இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா? திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை! முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. காரணம் அங்கு #கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். அம்

Thamirabarani river shiva Kovil | தாமிரபரணி கரையோர நவகைலாய சிவாலயங்கள்

படம்
தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவகைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை. பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார். பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார். அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன. பாபநாசம்: முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது. திருநெல்வேலி