இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் !

படம்
நீங்கள் பாக்கியசாலியாக இருந்தால் இந்தப் பக்கம் கண்ணில் படும் ********************************* 1952ம் ஆண்டு பிப்.23ல் நடந்த மகாசிவாராத்திரியன்று, காஞ்சி மகாபெரியவர் மயிலாடுதுறையை அடுத்த நாகங்குடி கிராமத்தில் 23.2.1952ல் தங்கி இருந்தார். அங்கு பக்தர்கள் மத்தியில் பரமசிவன் மகிமை குறித்து அவர் பேசியது எல்லாரையும் கவர்ந்தது. பெரியவருடன் 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன், புத்தகம் ஒன்றில் இருந்த இது குறித்து கூறினார். உருக்கப்பட்ட நெய் நிறமற்றதாக இருக்கும். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தை அடையும். கடவுளும் உருவமற்ற நிலையில் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.  ஆனால் அவரே பக்தர்களின் உள்ளத்தில் அன்பு பூரணமாகும் போது பக்திக்கு கட்டுப்பட்டு உருவம் தாங்கி வருகிறார். விஷ்ணு போல சிவன் அவதரிக்காவிட்டாலும், அநேகமான மோகன ரூபங்களை எடுத்து நம்மைக் காக்கிறார். ஆபரணம் ஏதும் அணியாமல் இயற்கையழகுடன் பிட்சாடன மூர்த்தியாக கோலம் கொண்டார். ஒருபுறம் அழகே வடிவெடுத்தது போல சுந்தரேஸ்வரராக காட்சியளிக்கிறார். பக்தர்களின் பயம் போக்கி அபயம் தரும் விதத்தில் பைரவ மூர்த்தியாக விளங்குகிறார். வீரத்தை சிறப்பிக்கும் வி