இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தான்தோன்றி மலை - கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவில்

படம்
கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தான்தோன்றி மலையில் அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள்.  திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், வயதானவர்களும், தான்தோன்றி மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது ஒரு குடைவரைக் கோயில் என்றும் கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் சோமசன்மா என்ற பக்தன் மிகவும் மனம் வருந்திக் கிடந்தான். அச்சமயத்தில் அந்த பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் தான்தோன்றி மலை என்ற பெயர் பெற்றது. இக்கோயிலில் அதிசயிக்கும் வகையில் பெருமாள் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறார். இங்கு தாயாருக்கு தனியாக சந்நிதி கிடையாது என்பதால் வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்த

அந்தப் புண்ணியம் 21 தலைமுறைக்கும் போய்ச் சேரும்

படம்
பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. 'எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன். இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். எல்லா அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன். அதுமட்டுமா? அதே சிரித்த முகத்துடன், திருமுகத்தில் உண்டான அத்தனைத் தழும்புகளுடன் இன்றைக்கும் நமக்குத் திருக்காட்சி தந்துகொண்டிருக்கிறார் திருவல்லிக்கேணி திவ்விய தேசத்தில்!  ஒருவேளை போர் முனைக்கு ஸ்ரீருக்மிணிதேவியும் வந்திருந்தால் என்னாகியிருக்கும்? அவனுக்கு முன்னே நின்றபடி, அத்தனை அம்புகளையும் தடுத்திருப்பாள் தழும்புகள் இல்லாத கிருஷ்ண பரமாத்மாவாக இருந்திருப்பார், பகவான்! ஸ்ரீருக்மிணிதேவி வராததும் ஒருவகையில் நல்லதுக்குத்தான்! அப்படி அவள்

Narasimha 8 sthalam | நரசிம்மர் 8 தலங்கள்

படம்
Narasimha 8 sthalam | நரசிம்மர் 8 தலங்கள் 1. அகோபில நரசிம்மர்: உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே. 2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.) 3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர். 4. சத்ரவத நரசிம்மர்: கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம். 5. க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வரு

Arulmigu Lakshmi Narasimha Swamy Kovil Sholinghur | சோளிங்கர் கோவிலில் உள்ள நரசிம்மர்

படம்
கார்த்திகை மாதம் கண் திறப்பதாக ஐதீகம் உள்ளது. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம். மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர். ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்மரையும் யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். இந்த கடிகாசல மலையை தரிசித்தாலேயே பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்றவை அண்டாது. ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்

மந்த்ராலயத்தில் நடந்த நிஜம்கதை

படம்
இது  கதையல்ல  கற்பனை  அல்ல 1992 - 93 மந்த்ராலயத்தில் நடந்த   நிஜம் . தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். நன்றாக அவள் படித்தாலும் மேற்கொண்டு அவள் தந்தையால் படிக்க வைக்க முடியவில்லை. படிப்புக்கு ஏற்றபடி வரன் பார்க்க வேண்டுமே என்பதை காட்டிலும் வறுமையே முதல் காரணமாய் அங்கு நர்த்தனம் ஆடியது. பெண் பருவ வயது வந்ததும் தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர்.நாட்கள் கடந்தது. நல்ல வரன். குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாமென்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர். எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த சமயத்தில் அவர்களின் அடுத்த வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெ

அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை

படம்
அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது.  இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை.  வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?” எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை பார்க்கிறான். அவரிடம் சென்று, “ஏய்… வானரமே… உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே… ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக. தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார்.  அவன் கர்வத்தை ஒடுக்க திருவுள்ளம் கொள்கிறார். “சரப்பாலம், என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும்போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும்?” “ஏன் முடியாது… நீ நின்றால் தாங்கும்படி இந்த நதியின் குறுக்கே நான் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல… எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கு

எந்த நல்ல காரியத்துக்கும் ராமாயண பாராயணம்

படம்
வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீமத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும், சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால் ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி பாயாஸதான பாராயண கட்டத்தை பாராயணம் செய்ய வேண்டும். சுகப்பிரசவத்திற்கு பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாவதாரத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ராமா ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். அரச காரியங்களiல் வெற்றி கிட்ட அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க சுந்தர காண்டத்தில் லங்கா விஜயத்தை மாலையில் பாராயணம் செய்ய வேண்டும். பித்தம் தெளிய சுந்தர காண்டத்தில் ஹுனுமத் சிந்தையை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். தரித்திரம் நீங்க சுந்தர காண்டத்தில் சீதா தரிசனத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். பிரிந்தவர் சேர சு

பூலோகம் வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

படம்
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம். சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே "பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி" என்றார் . அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது. என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார். பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார். சிறிது தூரம் சென்றதும் "பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார். பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார். வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார் உங்கள் வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்ல அந்த செல்வந்தரோ" யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது. தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திரு

தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு

படம்
மோர்க்   கிழவியின்   பக்தி தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?'ன்னு கேட்டா, எல்லோரும் யோசிக்காமல் "ராஜ ராஜ சோழன்னு..." பதில் சொல்லிடுவாங்க. ஆனா, ராஜ ராஜ சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...' ன்னு சொல்றாரே! தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது. கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். 'ராஜா ராஜா!' என்றழைக்க... ராஜ ராஜ சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம். தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது? இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்கு *'தஞ்சை பெரிவுடையார் கோயில்'* என்று பெயர் சூட்ட போகிறேன். மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம். ஒரு இடைச்சி மூதாட்டியின் காலட

கிருஷ்ணன் கருணையால் உத்தராவின் கருகாக்கப்பட்டது

படம்
பாரதப் போர் முடிந்தது. வீமன் கதையினால் {கதாயுதம்} அடியுண்டு துரியோதனன் குற்றுயிராகக் கிடந்தான். அகிலமெல்லாம் ஆணை செலுத்திய அரசன், அனாதையாகக் கிடக்கக் கண்ட அசுவத்தாமன் மனம் வருந்தினான். "உன்னை அழித்தவர்களை இன்று இரவுக்குள் வேரோடு அழித்து, அவர்கள் தலையை உன் காலடியில் காணிக்கையாக வைக்கின்றேன்' என்று சபதம் செய்தான் அசுவத்தாமன். இதனை அறிந்த கண்ணன், பாசறையில் இருந்த பாண்டவர்களை வேறிடத்துக்கு அழைத்துச் சென்று விட்டான்.  பாண்டவர்களைக் கொல்லப் பாசறையுட் புகுந்த அசுவத்தாமன், பாஞ்சாலியின் புதல்வர்களைப் பாண்டவர் என்று கருதி, அவர்கள் தலையை அறுத்து விட்டான், போரில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பின் நாட்டை ஆள்வதற்கு இருந்த வாரிசுகளும் இறந்துவிட்டனரே! என்று தருமர் கவலையுற்றார். அபிமன்யுவின் மனைவி உத்தரை கருவுற்றிருந்தாள். அவள் நல்லமுறையில் குழந்தை பெற்றால், வாரிசு இல்லை என்ற கவலை தீரும் என நம்பினார் தருமர். “இடிஇடித்திடு சிகரிகள் ஆம் என எரிமருச்சுதன் முதல்இக லோர்தலை துடிதுடித்திட அவர் அவர் சேனைகள் துணிப் டப்பொருது எழுபுவி நீபெற ' விடிவ தற்குமுன் வருகுவென் யான்' என்ற சபதப்படி உத்தரையின

கோயில் பிராகாரத்தை சுற்றுவதின் பலன்கள்

படம்
கோயில் பிராகாரத்தை   எத்தனை   முறை   சுற்றினால்   என்ன  பலன்தெரியுமா ? கோயிலுக்குச் சென்று  கருவறையில் உள்ள  கடவுளை வணங்கிய  பின்னர் கோயில்  பிராகாரத்தை சுற்றி  வருவதே வழக்கம் . கோயில் பிராகாரத்தை  சுற்றுவதின் பலன்கள் ஒரு(1) முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் -  இறைவனை அணுகுதல்  என்று பொருள். மூன்று (3) முறை வலம் வந்தால் -  மனச்சுமை குறையும் . ஐந்து (5) முறை சுற்றி வந்தால் -  இஷ்டசித்தி_கிடைக்கும் . ஏழு (7) முறை வலம் வந்தால் நினைத்த   -  காரியம்_ஜெயமாகும் . ஒன்பது (9) முறை வலம் வருவதால் -  சத்துருநாசம் ( எதிரிகள் விலகுவர்) . பதினொரு (11) முறை சுற்றினால் -  ஆயுள்_விருத்தியாகும் . பதிமூன்று (13) முறை வலம் வந்தால் -  வேண்டுதல்கள் சித்தியாகும் பதினைந்து (15) முறை வலம் வந்தால் -  தன ப்ராப்தி உண்டாகும் . பதினேழு (17) முறை வலம் வருவதால் தானியம் சேரும் -  விவசாயம் செழிக்கும் . பத்தொன்பது (19) முறை சுற்றி வலம் வந்தால்   -  ரோகம் நிவர்த்தியாகும் . இருபத்தொரு (21) முறை வலம் வந்தால் -  கல்வி விருத்தியாகும் . இருபத்தி மூன்று (23) முறை சுற்றினால் சுக   -  சௌகர்யத்துடன் வாழ்வு கிட்டும் . நூற்றுயெட்

சடங்கு வழி பக்தியைவிட, பாச வழி பக்தியே பரமானந்தத்தில் எளிதில் சேர்க்கும்.

படம்
மகாபாரதப்போர் முடிந்த பிறகு ஒருநாள் அர்ஜுனன் நதிக்கரையில் தனியாக உலாவிக் கொண்டிருந்தான். வில் தரிக்காமல் சாதாரண உடையில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தான். அவன் மனத்தில் கர்வம் மிகுந்திருந்தது. தானே கிருஷ்ண பரமாத்மாவிற்கு ஒரே தோழன் என்றும், அவருக்கு அதிகபட்சம் நெருக்கமானவன் என்றும் அவன் பெருமிதம் கொண்டிருந்தான்.  எதிர் திசையிலிருந்து ஒரு அந்தணர் வந்து கொண்டு இருந்தார். மார்பில் துலங்கிய முப்புரி நூலுக்கு முரண்பாடாக அவரது இடுப்பில் தொங்கியது நீண்ட போர் வாள்! அர்ஜுனன் அவரை நிறுத்திக்கேட்டான். "தூய அந்தணரே! தங்களது தோற்றப்பொலிவு தேவ குருவே பூமிக்கு இறங்கி வந்துள்ளாரோ என்று பிரமிக்க வைக்கிறது. ஆனால், உங்கள் கையிலுள்ள வாள் குழப்பம் ஏற்படுத்துகிறது. சாத்வீகமான தாங்கள், ஏன் இந்த கொலை வாளினை வைத்துள்ளீர்கள்? யாரைக்கொல்ல இந்த ஏற்பாடு?"  அந்தணர் உறுமலுடன் பதிலளித்தார், "ஒருவரா, இருவரா? நான்கு பேரை தலையை சீவ வேண்டும். அதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை." "தங்களின் கடுங்கோபத்திருக்கு ஆளாகியிருக்கும் அந்த துரதிருஷ்டசாலிகள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?&quo