இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Govardhana Girivalam | கோவர்தன கிரிவலம்

படம்
கோவர்தன கிரிவலம் நாம் கோவர்தன கிரிவலம் மேற்கொள்வதன் மூலமாக கிருஷ்ணர்மீதான அன்பை வளர்த்துக்கொள்ள முடியும். கோவர்தன மலையை வழிபட விரும்புபவர்கள் அதனைச் சுற்றி வலம் வர வேண்டும். கோவர்தன கிரிவலம் 26 கி.மீ. பாதையைக் கொண்டது.  ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.  சைதன்ய மஹாபிரபு இம்முறையைக் கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவர்தன மலையை சுற்றி பல கோயில்களும், குளங்களும் இருப்பதால் கிரிவலத்தை முடிப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகலாம். அப்பாதையில் இருக்கின்ற சில முக்கிய இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். மானஸ கங்கை: கிரிவலத்தை இவ்விடத்தில் தொடங்கி இறுதியில் இங்கேயே முடிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது. விருந்த

Thiruvannamalai idaikattur siddhar samadhi | திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் சமாதி பற்றிய சிறப்பு பதிவு

படம்
திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் சமாதி பற்றிய சிறப்பு பதிவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார். பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் தனது ஜனன சாகரத்தில் கூறியுள்ளார். சிலர் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் இடைக்காடர் சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதாக சொல்கிறார்கள

You and me are one | நானும் நீயும் ஒண்ணுதான்

படம்
நானும் நீயும் ஒண்ணுதான்" ("மூன்று மணி நேரம் பேசியும் 'தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரைக்கு' 'சரியான விளக்கம் சொல்லாத பண்டிதருக்கு பெரியவாளின் எளிமையான விளக்கம்) வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும். ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார். அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?" என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!" என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.. .எல்லாரும் புரிஞ்சிண்டாளா?" என்றார். "புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?" என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை சரியாக புரிந்து கொள்கிறார்களா, இல்லையா என்பதைக் கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம். அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை. கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல் பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார். அதன் பிறகு, "நீ இப்ப சொன

Tirupati Poga Vendum Endru Ninaithale Thadaigal Varukiratha? | திருப்பதி போக வேண்டும் என்று நினைத்தாலே தடைகள் வருகிறதா?

படம்
திருப்பதி போக வேண்டும் என்று நினைத்தாலே தடைகள் வருகிறதா? எந்த இடையூறும் தடையும் இல்லாமல் பெருமாளை தரிசனம் செய்வது எப்படி? அந்த காலத்தில் திருப்பதிக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்றால் அது ஒரு பெரிய விஷயமாக பேசப்படும். இப்போதெல்லாம் நினைத்தால், நினைத்த உடனேயே திருப்பதிக்கு சென்று விட்டு வருகிறோம். ஆனால் பெருமாளை தரிசனம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.  நாம் நினைத்தால் நம் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கோ அல்லது மற்ற கோவில்களுக்கும் செல்லலாம். ஆனால் பெருமாளே நினைத்தால் மட்டும் தான், நாம் அவரை தரிசனம் செய்ய முடியும் என்ற ஒரு கூற்றும் முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நிறைய பேருக்கு திருப்பதி செல்வதற்கு நேரம் காலம் கைகூடி வராது. எப்போது திருப்பதி யாத்திரைக்கு செல்ல வேண்டுமென்று நினைத்தாலும் தடை வரும். எந்த தடையும் இல்லாமல் திருப்பதி பெருமாளை எப்படி தரிசனம் செய்வது. திருப்பதி யாத்திரைக்கு செல்ல முடியவில்லை, பெருமாளை தரிசனம் செய்ய நேரமும் காலமும் கைகூடி வர வேண்டும் என்றால், ஒரு சிறிய மண் உண்டியலை வாங்கி வையுங்கள். அந்த உண்டியலுக்கு மேலே ஒரு நாமத்தை போடுங்கள். அதில் தினம

Antikal Kooti Matam Kattiya Kathai | ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை

படம்
"ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை" என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !.. உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில் தான் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !. திருச்செந்தூர் விவரங்க

Thanjavur To kumbakonam Kovil | தஞ்சாவூர் கோயில்

படம்
List out some important Kovil in Thanjavur to Kumbakonam குழந்தை பாக்கியம் கிடைக்க - அகஸ்தீஸ்வரர் கோயில்.கருவளர்ச்சேரி- கும்பகோணம் தஞ்சாவூர் சுகப்பிரசவம் ஆக- முல்லைவனநாதர் கோயில் .திருக்கருக்காவூர் - தஞ்சாவூர் கல்வியில் சிறக்க சரஸ்வதி கோயில் கூத்தனூர் - திருவாரூர் முயற்சியில் வெற்றி கிடைக்கதேனுபுரீஸ் வர ர் கோயில் பட்டீஸ்வர ம் கும்பகோணம் தஞ்சாவூர் பதவி உயர்வுபெற-பிரம்மன் கோயில் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்வம் உயர-ஒப்பிலியப்பன் கோயில் திருநாகேஸ்வரம் - தஞ்சாவூர் கடன் பிரச்சனை தீர-சாரபரமேஸ் வர ர் கோயில் திருச்சேறை கும்பகோணம் - தஞ்சாவூர் இழந்த செல்வத்தை மீண்டும் பெற-மகாலிங்கேஸ் வர ர் கோயில் திருவிடைமருதூர் தஞ்சாவூர் பெண்கள் நற்சமயத்தில் ருதுவாக-காசி விஸ்வநாதர் கோயில் கும்பகோணம் - தஞ்சாவூர் திருமணதடை அகல-உத்வாகநாதர் சுவாமி கோயில் திருமணஞ்சேரி மயிலாடு துறை நல்ல கணவரை பெற-கும்பமேஸ்வர ர் கோயில் கும்பகோணம் தஞ்சாவூர் தம்பதி ஒற்றுமைக்கு-சிவக்கொழுந்தீசர் கோயில்திருச்சத்திமுற்றம் தஞ்சாவூர் பிரிந்த தம்பதி ஒன்றுசேர-திருவலஞ்சுழிநாதர் கோயில் திருவலஞ்சுழி தஞ்சாவூர் செய்வினை கோளாறுகள் அகல-பிரத்யங்கராதேவி க