இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

படம்
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள். இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்

மகாபாரதம் இதை விட சுருக்கமாக சொல்ல முடியுமா?

படம்
மகாபாரதம் இதை விட சுருக்கமாக சொல்ல முடியுமா..! இது. என் மனதை தொட்ட ஒரு வரின் பதிவு பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். ‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’ பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன. அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், “உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான். புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே காவி உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது. “குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.” “நீங்கள்

உண்மையிலேயே உலகில் வாழ்ந்து வந்ததா புராண கால மர்ம மிருகமான யாளி

படம்
உண்மையிலேயே உலகில் வாழ்ந்து வந்ததா புராண கால மர்ம மிருகமான ‘யாளி’ ?! பழைமையான கோயில் சுதைச்சிற்பங்களில் காணப்படுகிறது சில அமானுஷ்ய வடிவம் கொண்ட மிருகங்களில் ஒன்று யாளி. கோயிலில் யாளி உருவத் தூண் இந்திய புராணங்களில் இறைவடிவங்கள், தேவநிலைகள் ஆகியவற்றிற்கு இணையாக விலங்கினங்களும் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. புராண காலகட்டங்களில் மட்டுமே உலாவந்ததாக கதைகள் கூறுகின்றன. பழைமையான கோயில் சுதைச்சிற்பங்களில் காணப்படும் இத்தகைய மிருகங்கள், ஒருவேளை டைனோசர்கள் போலவே நிஜத்திலும் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்படாமல் இல்லை. அத்தகைய சில அமானுஷ்ய வடிவம் கொண்ட மிருகங்களில் ஒன்றுதால் ‘யாளி’ என்னும் மிருகம். ’இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி...’ என்று அகநானூறு பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் புலவர் நக்கண்ணையார். அதாவது, வாள் போன்ற வரிகளை உடலில் உடைய புலியானது தான் அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கம் விழுந்தால் அதை ஒருபோதும் சீண்டாத வெற்றியை உடையது. அத்தகைய புலியே பயந்து நடுங்கும் அளவிற்கு ஆளி அதாவது யாளியானது பாய்ந்து வந

20 types of pradosha | 20 வகை பிரதோஷங்கள்

படம்
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் 1. தினசரி பிரதோஷம் 2. பட்சப் பிரதோஷம் 3. மாசப் பிரதோஷம் 4. நட்சத்திரப் பிரதோஷம் 5. பூரண பிரதோஷம் 6. திவ்யப் பிரதோஷம் 7. தீபப் பிரதோஷம் 8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் 9. மகா பிரதோஷம் 10. உத்தம மகா பிரதோஷம் 11. ஏகாட்சர பிரதோஷம் 12. அர்த்தநாரி பிரதோஷம் 13. திரிகரண பிரதோஷம் 14. பிரம்மப் பிரதோஷம் 15. அட்சரப் பிரதோஷம் 16. கந்தப் பிரதோஷம் 17. சட்ஜ பிரபா பிரதோஷம் 18. அஷ்ட திக் பிரதோஷம் 19. நவக்கிரகப் பிரதோஷம் 20. துத்தப் பிரதோஷம் *1.தினசரி பிரதோஷம்* தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். *2. பட்சப் பிரதோஷம்* அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லி

ஏகாதசி விரதம்

படம்
ருக்மாங்கதன் நாரதர் ஒருசமயம் எமபட்டினம் சென்றிருந்தார். அவ்வூர் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாய் இருந்தது. அதற்கான கரணத்தை அவர் எமதர்மனிடம் கேட்டார். சுவாமி! பூலோகத்தில் பெரும்பாலானவர்கள் ஏகாதசி விரதம் இருக்கின்றனர். குறிப்பாக, ருக்மாங்கதன் என்பவனின் நாட்டில் எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அங்கிருந்து யாருமே இங்கு வரவில்லை. இறப்பவர்கள் அனைவரும் நேராக வைகுண்டத்திற்கு சென்று விடுகின்றனர். அதனால் அந்நாட்டைப் பொறுத்தவரை எனக்கு அறவே வேலை இல்லை, என வருத்தத்தோடு சொன்னான். நாரதர் அவனை பிரம்மனிடம் அழைத்து சென்றார். தந்தையே! இது மிகப்பெரிய அநியாயமாக இருக்கிறது. நியாயம் செய்பவர்களும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்களும் பரமபதத்தை அடைந்துவிட்டால் எமலோகத்தில் இருப்பவர்களுக்கு என்ன வேலை? எனவே அந்நாட்டில் விரதம் இருப்பதை தடுக்க வேண்டும், என்று கூறினார். பிரம்மன் பயந்துபோனார்.நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது. பகவான் நாராயணன் தனது பக்தர்களுக்கு அபச்சாரம் செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டார். இந்த

அழிவிடைதாங்கி பைரவர் | சொர்ண ஆக்ஷன பைரவர்

உலகத்தில் ஒரு சில கோவில்கள் உண்டு. அதாவது நாம் நினைத்தவுடன் ஓரு கோவிலுக்கு செல்ல முடியும். ஆனால் ஒரு சில கோவிலுக்கு அந்த தெய்வம் அனுமதி கொடுத்தால் தான் நாம் அந்த கோவிலுக்கு செல்ல முடியும். அப்படிப்பட்ட கோவில் தான் இந்த திருக்கோவில். உலகிலேயே முதல் சொர்ண ஆக்ஷன பைரவர் இவர் தான். உலகிலேயே இந்த பைரவருக்கு மட்டும் நந்தி முன்னே இருக்கும். ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பைரவர் இவர். முதலில் பைரவரின் வாகனமான நாய் உள்ளே சென்றவுடன் தான் பக்தர்கள் அனுமதிக்கபடுவர். இந்த ஒரு பெரும் அழிவில் இருந்து காப்பாற்றியாதால் இத்திருத்தல பைரவருக்கு அழிவிடைதாங்கி பைரவர் என பெயர் வந்நது. அழிவிடைதாங்கி பைரவர் தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இது போன்று கிடையாது. பழங்காலத்தில் தொண்ட மண்டலம், தொண்ட காருண்யம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பெளத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.3 ஆம் நூற்றாண்டில் இங்கு கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது. வடஇந்திய மாணவர்கள் இங்கு கல்வி பயின்றனர். ஹிம சீதன மன்னர் அசுலங்கர் என்ற சமண அறிஞர் பெளத்தர்களை வாதிட்டு வென்

தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் சிவன் கோவில்

குஜராத் மாநிலத்திலுள்ள சிவன் கோயில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது! குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில். இந்தக் கோயில் கடலுக்குள் கட்டப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் கடலில் முங்கியே காணப்படும். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே உள்ளது. இரவு 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த கோயில் கடலுக்குள் மறைந்திருக்கும். பின்னர், கடல் உள்வாங்கி கோயிலுக்குச் செல்ல பாதை உருவாகும்! ஆனால், கோயிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிக்குள் கோயிலுக்கு சென்று திரும்புகிறார்கள். இந்நேரத்திற்குப் பிறகு கோயிலை கடல்நீர் சூழ்ந்துகொள்கிறது. இந்தக் கோயிலை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் கட்டியதாக நம்பப்படுகிறது. மகாபாரதப் போரில், தங்கள் சகோதரர்களான கௌரவர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க பாண்டவர்கள் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. கடலுக்குள் ஐந்து சிவலிங்கங்களை அமைத்து அவற்றைச் சுற்றி கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கடல் சீற்றங்கள் மூலம் கோயில் படிப்படியாக சிதிலமடைந

பெரிய பெருமாள் அணிந்து கொண்டு தேய்மான பின்?

படம்
ஓம் நமோ நாராயணாய கீழே உள்ள படத்தில் காலணிகளுக்கு, பூ வைத்து உள்ள காரணம் உங்களுக்கு தெரியுமா !! ஸ்ரீ ரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள, பெரிய பெருமாள் அணிந்துகொண்டு, தேய்மானத்திற்கு பின், கழட்டி வைக்கப்பட்டு, ஸ்ரீரங்கம், திருக்கொட்டாரம் எனும் இடத்தில், தூணில் மாட்டி வைக்கப்படும். புதிய பாதணிகள் செய்ய, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரத்யோக, பாதணிகள் அரங்கனுக்காக, செய்பவர்கள் இருக்கிறார்கள். வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடம், செய்ய கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். பாதணிகள் தனித்தனியாக, செய்வார்கள். 48 நாட்கள், உணவு கட்டுப்பாடு இருந்து, விரதம் மேற்கொண்டு பாதணிகளை செய்வார்கள். இவைகள், 6 மாதத்திற்கு ஒரு முறை, செய்யவேண்டும். இவர்கள், பாதணிகளை, கொண்டு வந்து, அரங்கனுக்கு, சமர்ப்பிக்கும்போது, கோயில் மரியாதையை செய்வார்கள். பழைய பாதணிகளை அரங்கன் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு எடுத்துள்ள, பழைய பாதணிகளில் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும். இவ்வாறு, மாற்றி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான் சதுரவடிவில் அமைந்த கோவில்

படம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நாசா வியந்தது ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்.. ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.. கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது. நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது.. ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால். 1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.! ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தன

பன்னீர் இலை விபூதி

படம்
திருசெந்தூர் முருகன் கோவில் "பன்னீர் இலை விபூதி" திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்.... என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை. ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக் கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன். அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம

Lepakshi Temple | லேபக்‌ஷி கோவில் | One Day Trip from Bangalore

படம்
அற்புதம் நிறைந்த லேபக்‌ஷி கோவில் பற்றிய தகவல்கள் ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ளது லேபக்‌ஷி எனும் சிறிய கிராமம் . இது பெங்களுரில் இருந்து சுமார் 120 கி.மி தொலைவில் அமைந்துள்ளது . அகத்தியரால் கட்டப்பட்டதாக சொல்லப்படும். இக் கோயிலில் நிறைய அதிசயங்கள் நிறைந்துள்ளன . ராமாயணத்தில் வரும் ஜடாயு மோட்ச சம்பவம் இந்த இடத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது. இங்கு சிவன் விஷ்ணு வீரபத்ரர் ஆகியோருக்கு கோயில்கள் உள்ளன . இங்கு உள்ள வீரபத்ரர் கோயிலில் உள்ள தூண் அந்தரத்தில் பூமியை தொடாதவாறு இருப்பது ஒரு அதிசயமாகும் . விஜய நகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் மெருகேற்றப்பட்ட கலை வடிவங்கள் இக் கோயிலில் உருவாக்கப்பட்டன. இக்கோயிலின் ஒவ்வொரு தூணிலும் ஆச்சர்யமான சிற்ப வேலைபாடுகள் பிரம்பிக்கதக்க வகையில் உள்ளன. இந்தியாவிலேயே உயரமான நந்தி இங்கு தான் உள்ளது . சுமார் 70 தூண்கள் உள்ள இக்கோயிலில் 7 தலையுடன் உள்ள நாகத்தின் குடையில் கீழ் இருக்கும் லிங்கம் எல்லோரையும் கவரும் வகையில் உள்ளது. இந்த நாக சிற்பத்தை பற்றி சுவாரஸ்யமான ஒரு கதை உள்ளது . ஆதாவது இந்த சிலையை செதுக்கிய சிற்பி, காலையில் தன் தாயிடம் உணவு சமைக்குமாறு பணித

விநாயகரும் அருகம்புல்லும்

படம்
ஒரு சமயம் கெளண்டின்ய முனிவர் தன் மனைவியான ஆசிரியையுடன் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்த காலத்தில், அவர் அவ்வளவு செல்வம் பெற்றவராய் இருக்கவில்லை. கெளண்டின்யரோ விநாயகர் மேல் அளவற்ற பக்தியுடன் அவரைப் பூஜித்து வந்தார். தினமும் விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனைகளும் செய்து வந்தார். ஆசிரியைக்குக் கணவன் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும் நாடி பெரும் பொருள் ஈட்டி வரவில்லையே எனத் தாபம் இருந்து வந்தது. என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு உற்ற பணிவிடைகளைச் செய்து வந்தாள். என்றாலும் செல்வம் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே இருந்தது அவளுக்கு. மனைவியின் முகவாட்டத்தைக் கவனித்த கெளண்டின்ய முனிவர் காரணத்தை அறிந்திருந்தாலும், மனைவியின் வாயாலும் அதைக் கேட்டு அறிந்தார். மனைவியின் மாயையை அகற்றவும், அவளுக்கு அருகின் மகிமையையும், இறைவனின் மேன்மையையும் உணர்த்த வேண்டி, கெளண்டின்யர் அவளிடம், அருகு ஒன்றை விநாயகருக்குச் சமர்ப்பித்து விட்டு எடுத்துத் தந்தார். "இந்த அருகைத் தேவேந்திரனிடம் கொடுத்து இதன் எடைக்கு ஈடாகப் பொன் பெற்றுக் கொள்வாயாக!" என ஆசியும் வழங்கினார். ஆசிரியை திகைத்தாள். "என்ன? ஒர

தீர்த்தமலை

படம்
தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. திருவண்ணாமலை செங்கத்திலிருந்து மிக அருகில் உள்ள இந்த மலைமீது தற்போது இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது. டிரெக்கிங் செல்ல விரும்பும் வட தமிழக இளைஞர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்கின்றனர்.  பாண்டிய, சோழ மன்னர்களால் இக்கோவில் ஏழாம் நூற்றாண்டு கட்டப்பட்டதாகும். எங்குள்ளது? தர்மபுரி மாவட்டம் அரூரில் தீர்த்தமலையில் அமைந்துள்ளது சோழமன்னர்கள் தினந்தோறும் பூசித்த தீர்த்தமலை கோயில். தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தீர்த்தமலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது. தீர்த்தமலை வரலாறு ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் தீர்த்தமலை கோயில், சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுக்கள் மூலம் சோழ வம்சத்தின் பெரும் ரகசியங்கள் உலகுக்கு தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. ஆச்சர்யங்கள் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்ட ராஜேந்திரச் சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவாராம

ஒரே நாளில் ஆயிரம் பிறை தரிசனம்

படம்
ஒரே நாளில் ஆயிரம் பிறை! ஒரு வயதான தம்பதி, காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க வந்தார்கள். அவர்கள் மனதில் ஒரு சந்தேகம். அதை சுவாமியிடம் தெரிவித்தார்கள். 'சுவாமி! எங்களுக்கு எண்பது வயது பூர்த்தியாகி விட்டது. சதாபிஷேகம் செய்துகொள்ளுங்கள் என எங்கள் பிள்ளைகள் மூன்று பேரும் எங்களை ஓயாமல் வற்புறுத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குத் தான் மனம் ஒப்பவில்லை. 'சுவாமிகள் பரிவோடு கேட்டார்: 'ஏன் ஒப்பவில்லை?' ''சதாபிஷேக அழைப்பிதழில் ஆயிரம் பிறை கண்டவர் என்று போடுவார்கள் இல்லையா? நாங்கள் அப்படி ஆயிரம் பிறை காணவில்லையே? சிலர் தவறாமல் மூன்றாம் பிறையைப் பார்க்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாமோ என்னவோ! ஆனால் ஆயிரம் பிறையைப் பார்க்காத நாங்கள் 'ஆயிரம் பிறை கண்டவர்கள்' என்று போட்டுக் கொள்வது சரியாக இராதே! அப்படிச் செய்வது தப்பில்லையா?'' அவர்களுடைய வெகுளித்தனமான.. ஆனால் விவாதபூர்வமான பேச்சைக் கேட்டு சிரித்தார் பெரியவர். அவர்கள் சொல்கிறபடி பார்த்தால் உலகில் யாருமே சதாபிஷேகம் செய்து கொள்ள முடியாதே!  சற்று யோசித்த அவர் சொன்னார்: 'நல்லது. அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்