உண்மையிலேயே உலகில் வாழ்ந்து வந்ததா புராண கால மர்ம மிருகமான ‘யாளி’ ?!
பழைமையான கோயில் சுதைச்சிற்பங்களில் காணப்படுகிறது சில அமானுஷ்ய வடிவம் கொண்ட மிருகங்களில் ஒன்று யாளி.
கோயிலில் யாளி உருவத் தூண் இந்திய புராணங்களில் இறைவடிவங்கள், தேவநிலைகள் ஆகியவற்றிற்கு இணையாக விலங்கினங்களும் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
புராண காலகட்டங்களில் மட்டுமே உலாவந்ததாக கதைகள் கூறுகின்றன.
பழைமையான கோயில் சுதைச்சிற்பங்களில் காணப்படும் இத்தகைய மிருகங்கள், ஒருவேளை டைனோசர்கள் போலவே நிஜத்திலும் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்படாமல் இல்லை. அத்தகைய சில அமானுஷ்ய வடிவம் கொண்ட மிருகங்களில் ஒன்றுதால் ‘யாளி’
என்னும் மிருகம்.
’இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி...’ என்று அகநானூறு பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் புலவர் நக்கண்ணையார்.
அதாவது, வாள் போன்ற வரிகளை உடலில் உடைய புலியானது தான் அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கம் விழுந்தால் அதை ஒருபோதும் சீண்டாத வெற்றியை உடையது.
அத்தகைய புலியே பயந்து நடுங்கும் அளவிற்கு ஆளி அதாவது யாளியானது பாய்ந்து வந்து, உயர்ந்த நெற்றியையையுடைய
யானையின் முகத்தில் தாக்கி அதன் வெண்மை நிறமான தந்தத்தையே பெயர்த்தெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது பொருள்.
அத்தகைய வலிமையுடய யாளி அல்லது யாழி எனப்படும் மிருகம் தென்னிந்தியக் கோயில்களின் சிற்பங்களில் பெருமளவில் காணக்கிடைக்கும் ஒரு விசித்திர உடலமைப்பு கொண்ட மிருகம்.
இவை வியாழம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அலி கிரகமான புதனின் வாகனமாக கூறுகின்றனர்.
இரு வேறு விலங்குகளில் உருவத்தையும், குணத்தையும் கொண்டது
சிங்க யாளி
கஜ யாளி
மகர யாளி
என மூன்று வகைகள் இருந்தன.
கோவில்களில் அதிக சிலைகளை பெற்றது யாளி லெமூரியா கண்டம் அழிந்து போது அழிந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment