இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உத்தவ கீதை | Uttava Gita | Uttava Geethai | Mahabharatham Story

படம்
குருஷேத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பி னான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவனை அழைத்து, ‘உத்தவா! உனக்கு வேண்டியதைக்கேள் ’’ என்றான். உத்தவனோ, நீண்ட நாட்களாகவே தனக்கிருந்த சந்தேகங்கள் சிலவற்றை கண்ணனிடம் கே ட்டான்: ‘‘பரந்தாமா! ராஜசூய யாகத்துக்கு தருமனை வரவழைத்த துரியோதனன் விருந்துக்குப்பிறகு தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தான்.  சூதாட்டத்தின் போது முக்காலமும் உணர்ந்த நீ, தருமனை வெற்றிய டையச் செய்திருக்கக் கூடாதா ? சரி, போகட்டும். பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களை தருமன் பணயம் வைத்து ஆடும் போதா வது காப்பாற்றி இருக் கலாமே? விடு… அபலைப் பெண்ணான உன் சகோதரி திரௌபதி என்ன பாவம் செய்தாள்? ‘திரௌபதி அதிர்ஷ்டக்காரி. அவளைப் பணயம் வைத்து ஆடு. நீ உறு தியாக வெற்றி பெறுவாய்!’ என்று துரியோதனன் செருக்கோடு சபையில் கூறியபோ தாவது, பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டுமாறு செய்திரு க்கக்கூடாதா? ஆனால், திரௌபதியை கூந்தலை ப் பிடித்து இழுத்து வந்து துச்சா தனன் துகில் உரித்த போது காப்பா ற்றினாயே! ஏன் அப்படி?’’ என்றான் உத்தவன்.  அதற்குப்பரந்தாமன், ‘‘அப்படிக்கேள்

Mahabharatham Story | பார்பாரிக்கா மாவீரன் மகாபாரதம் கதை

படம்
பீமனின் மகன் கடோத்கஜன் -- கடோத்கஜனின் மகன் பார்பாரிகன்* பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன். கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிக்கா. தாய் கம்கன்கட, மகன் பார்பாரிக்காவிற்கு தானே பயிற்சி அளித்து சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள். சிவ பெருமான் பார்பாரிக்காவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.  முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.  இரண்டாவது அம்பு, தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.  மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்து விடும். மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்து விட்டு பார்பாரிக்காவிடம் திரும்பி விடும்.  இது தவிர அக்னி பகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார் இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.  பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான். தாயிடம் ஆசிப் பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான். புறப்படும் முன்,

நாராயணவனம் | Tirupathi Temple

படம்
நாராயணவனம் என்னும் ஊர் ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருப்பதி - ஊத்துக்கோட்டை - சென்னை வழியில் உள்ளது. நாராயணவனம் திருப்பதியிலிருந்து 39 கி.மீ. தொலைவிலும், புத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்குதான் அருள்மிகு கல்யாண வெங்கடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக் கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கு சுரைக்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது. திருமலை வேங்கடவன் பத்மாவதி திருமணம் நடைபெற்ற இடமே நாராயணவனம் ஆகும். இந்த கல்யாண வெங்கடேஸ்வரர் ஆலயம் ஆகசராஜன் என்ற அரசனால் தன் மகள் பத்மாவதி, ஸ்ரீனிவாசன் திருமண வைபவத்தை கொண்டாடும் வகையில் கட்டியுள்ளார். இங்கு வேங்கடவன் , பத்மாவதியுடன் திருமண கோலத்தில்  காட்சியளிக்கின்றார். தொண்டை நாட்டு மன்னன் ஆகாசராஜன் குழந்தை இன்றி மனம் வருந்தினார். பிள்ளை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். ஒருநாள் அருணி நதிக்கரையில் அழகான குழந்தையாக பத்மாவதி ஒரு பெட்டியில் கிடைக்கப்பெற்றார். குழந்தை கிடைத்ததில் ஆகசராஜனும், அவர் மனைவி தாரிணியும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். குழந்தை தாமரை மலர்மே

Miracle of Indian Temples

படம்
#நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாற்றி தரும் லிங்கம்! பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம். கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர். ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள். அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும். இன்றைய அறிவு ஜீவிகளால் இதற்கு சரியான விளக்கம் தர முடியுமா? ஒருமுறை போய் அனுபவித்து பாருங்கள். #பெருமாளே சிவனாக மாறும் விந்தை! திருப்பதி என்று கேட்டவுடன் பெருமாளும், வைஷ்ணவத்தின் உச்ச ஸ்தலம் என்பதும் எல்லோர் எண்ணத்திலும் உதிக்கும். அங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்

பாம்புக்கு பால் வார்த்த கதை | Mahabharatham Story

*ஸ்ரீகிருஷ்ணின் தந்திரம்*  இதுவரை கேட்டிராதது. பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள்.  துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், *ஐவரின் பத்தினியே. இன்று யாருடைய முறை?என்று கேட்டான். *திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள்.*  *கண் கலங்கினாள்.* அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.  *கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.* நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, *'ஏன் பதில் கூறவில்லை?’* என்பான்.  உடனே நீ, *'தக்ஷகன் முறை’* என்று சொல். *அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்க ம

பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்

படம்
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள். பூமாதேவியே கோ மாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியது பசு. கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும் பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள். கடைசியாக வந்த கங்கையும் – லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம். தோஷத்தை போக்கும் கோமாதா.... கோயிலுக்கு பல பேர் வருவதால் அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்து விடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரையிலும் சில கோய

கஞ்சமலை ரகசியங்கள் | The Secrets of Kanjamalai

படம்
கஞ்சமலை இது ஒர் அதிசயமலை பலருக்கும் தெரியாத ஒரு மலை. சித்தர்கள் வாழ்ந்த மலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை. கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலைத்தொடரை சார்ந்த ஒன்றாகும். சேலம் மாவடத்திலுள்ள சின்னசீரகபாடி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மலை அதிகம் சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது. இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும் இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மை யானவர்களான திருமூலர், காலங்கிநாதர், அகத்தியர், கோரக்கர் ஆகியோர் வாழ்ந்த மலையாகும் மேலும் இது பல சிறப்புகளை யுடையதாகும் . பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும். கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர். எங்களுக்காக சீனாவிலிருந்து வந்து இங்கே சித்தர் தங்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் இன்றளவும் கூறிவருவதைக் கேட்கலாம். கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இர

Madurai Chithirai thiruvizha உண்மை வரலாறை உறக்க சொல்வோம்

# அழகர்  வரும் முன்பே  # மீனாட்சி  கல்யாணம் முடிஞ்சுருச்சாம் அதான் கோபத்தில்  # ஆற்றில்  இறங்கிவிட்டு வண்டியூர் தாசி வீட்டுக்கு செல்கிறாராம். அடபாவிகளா மண்ணின் வரலாறையே மாத்தீட்டீங்களே....... # உண்மை  வரலாறை   # உறக்க  சொல்வோம் சொக்கர் காசு அக்கறை போகாது.... அழகர் இக்கரை வரமாட்டார். ஆம் இந்த வசனம் அனைவரும் கேள்விபட்டுருப்போம்.இதன் உண்மை பொருள் இதோ... மதுரைக்கு மேற்கே வைகை பாயும்;  தேனூர் கிராமத்தில் முதலில் கள்ளழகர் திருவிழா சித்திரையில் நடந்தது அனைவரும் அறிந்ததே. பின்பு அக்காலத்தில் மதுரையை ஆண்ட திருமலைமன்னர் மாசியில் மீனாட்சி அம்மைக்கு தேரோட்டம் ஆரம்பிக்கப்பட்டது.மாசி அறுவடைக்காலம் என்பதால் தேர் இழுக்க கூட யாரும் வரவில்லை.மன்னருக்கு மிகவும் வருத்தம்,தேரோட்டம் பாதியில், நின்றது. பின் சித்திரையில் மக்கள் கூட்டம் தேனூர் செல்வதை அறிந்தார்.அப்படி என்ன விழா நானும் பார்க்க வேண்டும் என்று தேனூர் புறப்பட்டார். அங்கு கள்ளழகர் மண்டூக மஹிரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் திருவிழா வெகு விமர்சையாக நடந்ததை கண்டு வியந்தார்.சாமி தரிசனம் செய்தார்.  பின் மீனாட்சி திருக்கல்யாணத்துடன் இ

15 ஆகம குறிப்புகள்

படம்
1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது. 2. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.)  3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.  4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல் கூடாது சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.  5. கற்பூர ஹாரத்தி : (சூடம்காண்பித்தல் பற்றி)  சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.  தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்க வேண்டும் முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.  6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.  7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.  8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்  • விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்  • விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்  • பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்  இவை

அத்தி மரத்தால் ஆன தெய்வச் சிலைகள்

1) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் அம்மன் முழு உருவச்சிலை அத்தி மரத்தால் ஆனது. 2)  உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது. 3) சேலம் மாவட்டம் பட்டை கோவில் அத்தி வரதர் இருக்கிறார் 4) புதுவைக்கு அடுத்த வீராம்பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரத்தை செங்கேணி அம்மன் சிலையாக வடித்து வழிபடுகிறார்கள். இவ்வூரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றது. 5) திருமலையில் (திருப்பதி) தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளிஉள்ளார். 6) வானமுட்டிப் பெருமாள் ஆலயம், மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் அத்தி மரத்தைக் கொண்டு 15 அடி உயரத்தில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். சங்கு, சக்கரம், கதை, அபயசீதம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி விளங்க சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வரூபமாக இருந்ததால் ‘வானமுட்டிப் பெருமாள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இக்கிராமத்தின் இயற்பெயர் ‘பாப விமோசனபுரம்’ என்பதாகும். 7) அத்தி, ஆறாவது கிரகமான சுக்ரனி

நவராத்திரி ஸ்பெஷல் | Navaratri Special

! புராணங்களில் பலரால் செய்யப்பட்ட நவராத்திரி விரதங்களும் அதன் பலனாக அவர்கள் அடைந்தவைகளும் மட்டுமே. கீழே கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தேவி பாகவதத்தில் வேத வியாசர் கூறியவை : இராமாயணத்தில் நவராத்ரி: வனவாசத்தில் சீதா தேவியை இழந்த ராமர் சுக்ரீவனுடன் எற்பட்ட தொடர்பில் சுக்கீரவனது உதவியை நாடி, அவனுக்காக வாலியை வதம் செய்கிறார், பின்னர் சுக்ரீவனுக்கு அரசுப்பட்டத்தை அளிக்கிறார். அவ்வாறு அரசுரிமை பெற்ற சுக்ரீவன் ராமனுக்கு செய்ய வேண்டிய உதவியினை மறந்து சுக போகங்களில் மூழ்கிவிடுகிறான். அப்போது ராமர் வருந்தியிருக்கையில் அங்கு வந்த நாரதர் ராமனது கலக்கத்தை போக்கும் விதமாக அவனிடத்திலே தேவியின் நவராத்ரி விரதத்தை கடைபிடித்து வெற்றியை கைப்பற்ற கூறுகிறார். ராமனோ, தானிருப்பதோ கானகம், அங்கே எப்படி இம்மாதிரி விரதம்/விழா போன்றவற்றை கடைபிடிக்க இயலும் என்று கேட்க, நாரதர் 'வன்ய நவராத்ரி' பற்றி கூறி அதனை கடைபிடிக்க கூறுகிறார். வனத்தில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு செய்வது வன்ய நவராத்திரி என்று பெயர். கூறியதுடன் நில்லாத நாரதர், தாமே முன்னிருந்து அவ்விரத பூஜைகளை ராமனுக்கு செய்து கொடுக்கிறார். இந்த நவ