#அழகர் வரும் முன்பே #மீனாட்சி கல்யாணம் முடிஞ்சுருச்சாம் அதான் கோபத்தில் #ஆற்றில் இறங்கிவிட்டு வண்டியூர் தாசி வீட்டுக்கு செல்கிறாராம். அடபாவிகளா மண்ணின் வரலாறையே மாத்தீட்டீங்களே.......
#உண்மை வரலாறை #உறக்க சொல்வோம்
சொக்கர் காசு அக்கறை போகாது.... அழகர் இக்கரை வரமாட்டார்.
ஆம் இந்த வசனம் அனைவரும் கேள்விபட்டுருப்போம்.இதன் உண்மை பொருள் இதோ...
மதுரைக்கு மேற்கே வைகை பாயும்; தேனூர் கிராமத்தில் முதலில் கள்ளழகர் திருவிழா சித்திரையில் நடந்தது அனைவரும் அறிந்ததே.
பின்பு அக்காலத்தில் மதுரையை ஆண்ட திருமலைமன்னர் மாசியில் மீனாட்சி அம்மைக்கு தேரோட்டம் ஆரம்பிக்கப்பட்டது.மாசி அறுவடைக்காலம் என்பதால் தேர் இழுக்க கூட யாரும் வரவில்லை.மன்னருக்கு மிகவும் வருத்தம்,தேரோட்டம் பாதியில், நின்றது.
பின் சித்திரையில் மக்கள் கூட்டம் தேனூர் செல்வதை அறிந்தார்.அப்படி என்ன விழா நானும் பார்க்க வேண்டும் என்று தேனூர் புறப்பட்டார்.
அங்கு கள்ளழகர் மண்டூக மஹிரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் திருவிழா வெகு விமர்சையாக நடந்ததை கண்டு வியந்தார்.சாமி தரிசனம் செய்தார். பின் மீனாட்சி திருக்கல்யாணத்துடன் இத்திருவிழாவை இணைக்க நினைத்தார்.தேனூர் கிராம பெரியோர்களிடம் கலந்துரையாடினார்.சைவ வைணவம் நலன் பற்றி தேனூர் மக்களிடம் பேசி சம்மதம் வாங்கினார்.இதற்கு் பெரும் பங்களித்த தேனூர் மக்களுக்காக மதுரையில் மண்டபம் கட்டி ஊர் பெரியோர்களுக்கு மரியாதை செய்யபடுகிறது.மேலும் அழகரின் முக்கிய நிகழ்வான மண்டூகமஹிரிஷி (சதுபஸ் முனிவர்)க்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி இங்குதான் நடைபெற்று வருகிறது.
அழகர் அக்கறை தாண்டி வந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருமானம் குறைந்து விடும் என்று எண்ணினார் திருமலை. எனவே அழகர் மீனாட்சி கல்யாணத்திற்கு தாமதமாக வருகிறார், திருமணம் முடிந்தது என்று கோபத்தில் வண்டியூர் நோக்கி வேசி வீட்டிற்கு செல்கிறார் என திருமலை மன்னர் கட்டுகதை எழுதியுள்ளார்.
இதில் தேனூர் வரலாறு முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றத்தில் இருந்து பவழவாய்கனிபெருமாளே தமக்கை மீனாட்சியை தாரைவார்த்துகொடுக்கிறார்
பாண்டியமண்ணராக சுப்ரமணியசுவாமி உடன்வருகிறார் தேரோட்டமே திருவிழாவின் உச்சகட்டம். மதுரைக்கு வரும் அழகர் சதுபஸ் முனிவர்க்கு மோட்சம் கொடுக்க தான் வருகிறார் என்பதே உண்மை.
மறைக்கப்பட்ட வரலாறு விதைக்கப்படும்.
No comments:
Post a Comment