15 ஆகம குறிப்புகள்

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.
2. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.) 
3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும். 
4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல் கூடாது சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும். 
5. கற்பூர ஹாரத்தி : (சூடம்காண்பித்தல் பற்றி) 
சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.  தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்க வேண்டும் முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும். 
6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது. 
7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது. 
8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும் 
• விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும் 
• விநாயகருக்கு = அருகம்புல் ஆகும் 
• பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும் 
இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது. 
9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள். 

10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்.
• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்
• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
• ஆனி – தேன்
• ஆடி – வெண்ணெய்
• ஆவணி – தயிர்
• புரட்டாசி – சர்க்கரை
• ஐப்பசி – உணவு, ஆடை
• கார்த்திகை – பால், விளக்கு
• மார்கழி – பொங்கல்
• தை – தயிர்
• மாசி – நெய்
• பங்குனி – தேங்காய். 

11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும். 
12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது. 
13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது ) 
14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது. 
15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது. 

16.இழந்த சொத்துக்களை மீட்டு தரும் நெல்லிக்காய்_விளக்கு:

விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை_சக்தியினை கொண்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

அதிலும் நெல்லிக்காயில் நெய்_விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம். ஏன் தெரியுமா?

நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம். எவ்வாறு நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவது.

முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புரமாக சற்று பள்ளமாக தோண்டி கொள்ளுங்கள்.

அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் காட்டன் திரி கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுங்கள். இவ்வாறு விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம். 


உங்கள் வீட்டில் மகிழ்ச்சி என்னும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? 

அப்போது தினந்தோறும் இரவு 6 மணிக்கு இப்படி செய்யுங்கள்!! 

⚜அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது,மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

⚜அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள்.

இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.

⚜அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.

⚜சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

⚜ சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்.

⚜ சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.

⚜ சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.

⚜ சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

⚜ சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

⚜ சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

⚜ சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

⚜ சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

⚜ சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.

⚜ சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

⚜ சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும். என்றும் நம் முன்னோர்கள் வழி தகவல்கள்.

நாம் யார் யார் பின்னால் செல்ல வேண்டும் தெரியுமா?

யார் பின்னால் போக வேண்டும், யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லியிருக்கிறது. 

பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து வகை யாகங்களை தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்ல வேண்டும். 

கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் செல்லலாம். 

பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் செல்லலாம். 

யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட. 

தலையில் கனமான பொருளை எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல்லலாம். 

இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சில் சுத்தம், மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம். 


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...