Showing posts with label Siddhar temple. Show all posts
Showing posts with label Siddhar temple. Show all posts

Thottichi Amman Palani malai | தொட்டிச்சி அம்மன் பழநிமலை

சித்தர்கள் வணங்கிய தொட்டிச்சி அம்மன்! பழநிமலை !


அனேக அதிசயங்களை கொண்டது பழநிமலை இதன் அடிவாரத்தில் அதில் வடக்குகிரி வீதியில் உள்ளது, பலநுாறு ஆண்டுகளுக்கு முன் சித்தர்கள் போகர், புலிப்பாணி வணங்கிய தொட்டிச்சியம்மன் கோயில்.

தொட்டிச்சி அம்மனை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதனால் செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகின்றனர்.

புலிப்பாணி ஆசிரமம் சிவானந்த பாத்திர சுவாமிகள் கூறியதாவது:

இவ்வுலகின் காவல் தெய்வமாக தொட்டிச்சியம்மன் வணங்கப்படுகிறார்.

பழநி நவபாஷாண சிலையை வடிவமைத்த போகர் மற்றும் அவரது சீடர் புலிப்பாணி சித்தர்களால் இக்கோயில் உருவாக்கப்பட்டது.

மலைக்கோயில் மூலவர் ஞான தண்டாயுதபாணி அம்மனின் முகங்கள் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு.

நவராத்திரிவிழா, பவுர்ணமி, செவ்வாய், வெள்ளியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் பால், பன்னீர், சிவப்பு மலர்களால் அபிஷேகம் அர்ச்சனை செய்து அம்மன் அருள்பெறுகின்றனர், என்றார்.

அம்மனுக்கு புலிபாணி
ஆசிரமத்தின் சந்நிதி உள்ளது.



A temple where more than 200 saints are enshrined in one place | 200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்

200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்!


சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்து வைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம், இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது. ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்த வீட்டை விற்று கிடைத்த பணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை. ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது. நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன. அதில் ஒரு சிற்பம் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறப்பை காட்டுகிறது, அப்புறம் குழந்தை நிலை தடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.

அதனை தொடும்போது நமது மூச்சு நிலை பிராணாயாமத்தை உணரலாம் ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை விளக்கும் அரிய சிற்பம் உள்ளது. ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங்கி பிராணயாமம் இயல்பாகவே நடக்கிறது. இது சத்தியமான உண்மை.

இன்னும் பல சிறப்புகள் கொண்டுள்ள சிவாலயம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இப்பவும் பௌர்ணமி யாகபூஜை சிறப்பாக செய்யபடுகிறது. யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாக கிடைத்துள்ளது. Photo ஆலய பராமரிப்பு செய்யும் சிவனடியாரிடம் தொகுப்பாக இருக்கு. பாக்கியமுள்ளவர்கள் பௌர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம் முடிந்தால் காணிக்கை செலுத்தலாம். கட்டாயமில்லை.

ஆலய அமைவிடம்:- தென்காசி To மதுரை மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4Km தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம் என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே அமைந்துள்ளது.

கடையநல்லூரிலிருந்து Auto வசதியுள்ளது. சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம். திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் சூரியன் மறைந்துவிட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.



Alwarkurichi Athrimalai Gorakanath Temple | ஆழ்வார்குறிச்சி அத்ரிமலை கோரக்கநாதர் ஆலயம்

ஆழ்வார்குறிச்சி அத்ரிமலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.

உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் ஒருவர் ‘அத்ரி மகரிஷி’. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர்.

தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு ‘அத்ரிமலை’ என்றும் பெயருண்டு.

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி தபோவனத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.

அத்ரியின் முதன்மை சீடராக விளங்கிய கோரக்கர், பதிணென் சித்தர்களில் ஒருவராவார். இங்குள்ள மலையில் இன்றும் கோரக்கர் உலாவருவதாக நம்பப்படுகிறது. அதனால் ‘கோரக்கர் மலை’ என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது. (கோ+இரக்கன் = கோரக்கன். பசுவை போன்ற கருணை உள்ளவன் என்று பொருள்).

அத்ரி-அனுசுயா இருவரும் தவம் இயற்றியபடி வாழ்ந்த இடம், மும்மூர்த்திகளையும் குழந்தையாக தவழச் செய்து, தத்தாத்ரேயரை பெற்ற இடம். பிருகு முனிவர், சிவனையும், சக்தியையும் வழிபட்ட இடம். பதிணென் சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் பல்வேறு காலங்களில் அத்ரி மகரிஷியிடம் ஆசிபெற்று தங்கிச் சென்ற இடம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது அத்ரி மலை. இந்த மலை ராமாயணம், மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தவத்தில் ஈடு இணையற்றவர் அத்ரி மகரிஷி என்றால், அவரின் துணைவியார் அனுசுயா தவத்திலும், பதிவிரதையிலும் ஒப்பில்லாதவர். இவர்களின் சிறப்புத் தன்மையை உலகுக்கு உணர்த்த இறைவன் சித்தம் கொண்டார்.

அத்ரி கடுமையான தவம் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அனுசுயாவிடம் பிச்சை கேட்டு மும்மூர்த்திகளும், மூன்று துறவி களாக உருமாறி வந்தனர். வந்தவர்களை வரவேற்ற அனுசுயா, மூவரையும் உணவு ஏற்றிட வேண்டினாள். அதற்கு சம்மதித்த துறவிகள், நாங்கள் நிர்வாணமாக இருந்துதான் உணவு ஏற்போம் என்று நிபந்தனை விதித்தனர்.

அத்ரி பரமேஸ்வரர், அத்ரி பரமேஸ்வரி சரியென்று சம்மதித்த அனுசுயா, தனது பதிவிரத சக்தியால் மும்மூர்த்திகள் மீது தண்ணீரைத் தெளித்து, அவர்களை குழந்தையாக மாற்றினாள். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி மகிழ்ந்தாள். அப்போது இருப்பிடம் திரும்பி வந்த அத்ரி மகரிஷி நடந்ததை அறிந்தார். மும்மூர்த்திகளும், குழந்தையாக உருமாறி இருப்பதை பார்த்தார். 

இந்த நிலையில் கணவர்களை தேடி வந்த முப்பெரும் தேவியர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தை களாக இருந்த மூன்று தெய்வங் களையும் மீண்டும் உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அனுசுயாவின் வேண்டுதலை ஏற்று, முப்பெருந் தேவர்களும், முப்பெரும் தேவியரும் அங்கு அமர்ந்து உணவருந்தினர். பின் அவர்களிடம் வேண்டி, முப் பெரும் தேவர்களையும் தன் மகனாகும் வரம்கேட்டுப் பெற்றாள் அனுசுயா. அதன்படி மூவரும் ஓருருவாக தத்தாத்ரேயர் வடிவில் பிறந்தனர் என்பது புராண வரலாறு.

சதுரகிரியில் தங்கியிருந்த கோரக்கரின் மனம், அத்ரி மகரிஷியின் தரிசனம் காண விரும்பியது. இதனையடுத்து அங்கிருந்து அத்ரி மலைக்கு வந்தார். மலையில் கடனா நதிக்கு கீழ் புறம் தங்கியிருந்து தவம் செய்தார். அந்த நேரத்தில் சிவசைலநாதர் அங்கு வந்தார். அவரை அத்ரி மக ரிஷி என்று நினைத்து வணங்கினார் கோரக்கர். ஆனால் சிவசைலநாதர், கோரக்கருக்கு அத்ரி மகரிஷியை காட்டி அருளினார்.

குருபக்தியில் சிறந்து விளங்கிய கோரக்கர், அத்ரியின் பிரதான சீடரானார். ஒரு சமயம் பூஜைக்கான மலர்களை பறிப்பதற்காக வனத்திற்குள் சென்றார் கோரக்கர். அப்போது அத்ரி தபோவனத்தில் இருந்து கிழக்கே சிவசைலத்தில் எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சிவனை தரிசித்தார். தான் கண்ட காட்சியை குருநாதர் அத்ரியிடம் கூறினார். அத்ரி மகரிஷியும், பரமேஸ்வரனை அங்கேயே வேண்டி எழுந்தருள செய்து வழிபட்டார். அத்ரியால் வந்ததால் இறைவன் ‘அத்ரி பரமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘அத்ரி பரமேஸ்வரி’ என்றும் அழைக்கப்பட்டனர். கோரக்கர் விருப்பத்தில் வந்ததால் இந்த ஆலயம் ‘கோரக்கநாதர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது.

பிருகு முனிவர் ஒருமுறை இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்தார். அத்தருணம் சிவன் தோன்றி, தம்முடன் சக்தியையும் சேர்த்து பிரார்த்தித்து தவம் செய்யுமாறு கூறினார். அதன்படியே பிருகு முனிவர் தவம் செய்தார். 8 பட்டை வடிவ லிங்க திருமேனியுடன் சக்தி காட்சி அளித்தாள். சிவனும், சக்தியும் ஒரே சன்னிதியில் லிங்க வடிவில் காட்சி தருவது அத்ரி மலையில் மட்டுமே. சக்தி லிங்கத்தில் எட்டு பட்டை வடிவுடன் சூலம் காணப்படும். 8 பட்டைகள், அஷ்டமா சித்திகளை குறிப்பதாகும்.

இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கடைசி வெள்ளி மற்றும் தமிழ் வருடப்பிறப்பாகிய சித்திரை முதல்நாள், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு-கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.

அத்ரி மகரிஷியின் பிரதான சீடர், கோரக்கர். சித்தர்களின் வரிசையில், பிறப்பிலேயே விசேஷத் தன்மை கொண்டவர் இவர். விபூதி என்றால் ‘சாம்பல்’ என்றும், ‘ஞானம்’ என்றும் பொருள் உண்டு. சிவ ஞானத்துடன் பிறந்தவர் மச்சேந்திரர். இவர் கடும் தவம் செய்து சித்தரானார். மச்சமுனி என்று அழைக்கப்பட்டார்.

மச்சமுனி ஒருநாள் பிச்சை கேட்டு ஒரு வீட்டின் முன்பு வந்து நின்றார். அந்த வீட்டுப் பெண், மச்ச முனிக்கு பிச்சையிட்டாள். அப்போது அவளது முகம், அவளுக்கு ஏதோ மனக்குறை இருப்பதை உணர்த்தியது.

அதைக் கண்ட மச்சேந்திரர், ‘உனக்கு துன்பம் யாது?’ என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், தனக்கு மகப்பேறு இல்லாததைக் கூறி வருந்தினாள். இரக்கம் கொண்ட மச்சேந்திரர், சிறிது திருநீற்றை அள்ளி அவளிடம் கொடுத்தார். ‘இந்த திருநீற்றை, சிவநாமம் கூறி உண்பாயானால், உனக்கு பிள்ளைப்பேறு உண்டாகும். அந்த பாலகனை காண நிச்சயம் ஒருநாள் வருவேன்’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.

மச்சமுனி சென்றதும், அந்தப் பெண் பக்கத்து வீட்டுக்காரியிடம் நடந்த சம்பவத்தைக் கூறினாள். பக்கத்து வீட்டுப்பெண்ணோ, ‘உன்னிடம் பிச்சை வாங்கி சென்றவர் மாயாவியாக இருக்கலாம். விபூதியை கொடுத்து உன்னை மயக்கி அடையலாம். எனவே அந்த விபூதியை சாப்பிடாதே’ என்று கூறினாள்.

பயந்து போன அந்தப் பெண், மச்சமுனி கொடுத்து விட்டு சென்ற விபூதியை அடுப்பில் போட்டாள். ஆண்டுகள் சில சென்றன. திருநீறு கொடுத்த மச்சேந்திரர் மீண்டும் அந்தப் பெண்ணை வந்து சந்தித்தார். ‘திருநீற்றால் பிறந்த பாலகன் எங்கே? அவனை நான் பார்க்க வேண்டும்’ என்று கேட்டார். மச்சமுனியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அந்தப் பெண், முடிவில் நடந்த அனைத்தையும் கூறினாள்.

பின்னர், ‘சிவ சித்தர்தானே? அடுப்பில் போட்ட சாம்பலில் இருந்தும் குழந்தையை உருவாக்கலாமே?’ என்று சந்தேகக் கண்கொண்டு கேள்வியை எழுப்பினாள்.

அவளது கேள்வியால் கோபம் கொண்ட மச்சமுனி ‘அடுப்பு சாம்பல் எங்கே?’ என்றார். ‘கோபத்தில் குப்பை மேட்டில்தான் கொட்டினேன்’ என்றாள் அந்தப் பெண்.

உடனே மச்சேந்திரர், ‘குழந்தை உன் கருப்பைக்குள் வளர உன் கர்மா இடம் கொடுக்கவில்லை. ஆனால் கோசலையாகிய இது, அதற்கு இடம் கொடுத்து விட்டது. நான் சிவசித்தன் என்பது சத்தியமானால் இந்த கோவகம், ஒரு கோவகனைத் தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல.. கோரக்கனும்கூட. கோவாகிய பசுவின் இரக்கம் இவனிடம் இருக்கப்போவது சத்தியம். கோரக்கனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்தார்.

கோரக்கனும் அந்த குப்பை மேட்டில் கொட்டிய சாம்பலில் இருந்து வெளிவந்தார். திருநீறு கொடுத்த காலம் முதல் அப்போது வரை என்ன வளர்ச்சியோடு இருக்க வேண்டுமோ அதே வளர்ச்சியோடு இருந்தான் அந்த பாலகன். அவரே கோரக்கர்.

மச்சமுனி, சாம்பலில் இருந்து வந்த பாலகனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் சிறுவன் கோரக்கனோ, தாயிடம் போகாமல், மச்சேந்திரநாதரை பின் தொடர்ந்தான். கோரக்கரும் பெரிய சித்தராகி குருவை மிஞ்சும் சீடராக விளங்கினார். அதன்பிறகே அவர் அத்ரி மகரிஷியை சந்தித்தார்.
முதலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கடைசி வெள்ளி மற்றும் தமிழ் வருடப்பிறப்பாகிய சித்திரை முதல்நாள், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் இன்று அவையெல்லாம் தடுத்து நிறுத்தப்பட்டு வெறும் அமாவாசை மற்றும் பெளர்ணமி அன்று மட்டுமே அனுமதி தரப்படுகிறது. இதில் வேதனை என்ன என்றால் இந்த சிவராத்திரிக்கு இந்த வருடம் அனுமதி இல்லை நித்திய பூஜை இல்லை

தற்போது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.

விரைவில் நித்திய பூஜை நடைபெற இறைவன் அருள் செய்யட்டும்
ஓம் நமசிவாய

Alwarkurichi Athrimalai Gorakanath Temple


Siddha Samadhi | சித்தர்கள் சமாதி

தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறை உணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணர முடியும்.

நம் மனதில் கோபம் ஆக்ரோஷம் குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் எனக் கூறுகின்றனர்.

நாம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் எனக் கூறுகின்றனர்.

அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது, எட்டு ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து தீட்டா வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான்.

பதினெட்டுச் சித்தர்கள் அடங்கியிருக்கும் ஜீவ சமாதிப் பீடங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன.

உதாரணமாக சென்னையில் திருவெற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம்.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், பாம்பன் சுவாமிகள் ஆலயம், அருகில் பறவை சித்தரம்மா எனும் சக்கரை அம்மாள் ஆலயம்.

கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் ஆலயம், திருமுல்லை வாயில் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு ஆலயம்.

திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளஹஸ்த்தி, திருப்பதி இவையாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்பு மிகு தலங்கள்.

இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரும், சீர்காழி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சட்டமுனியும் (சீர்காழி சட்டநாதர்), சிதம்பரம், திருவாவடுதுறை முதலிய இடங்களில் திருமூலத் தேவரும் இருந்து அருள்புரிகின்றனர்.
திருவாவடுதுறை நரசிங்கம் பேட்டைக்கு அருகில் (மயிலாடுதுறை –கும்பகோணம் மார்க்கம்) உள்ளது.

இங்குதான் சிறப்பு மிகு திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இங்கே ஸ்ரீ சமாதி பீடமும் உள்ளது.

இதற்கு அருகிலேயே திருவிடைமருதூர் உள்ளது. இங்கு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இங்கு ரோமரிஷி, நாரதர் ஜீவசமாதியில் இருந்து அருள்கின்றனர். இங்கு தல விருட்சமாக உள்ள மருத மரத்தினருகில் இருந்து வாசி லயம் செய்தால் உணரலாம்.

இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் உள்ளது.
இங்கே கும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இங்கு அகத்தியப் பெருமான் அருளுகின்றார்.
இதற்கு அருகிலேயே சாதார வீதி என்று இருக்கிறது.
இங்கே சிவவாக்கியராக இருந்த திருமழிசைஆழ்வாராகிய பெருமான் ஜீவ சமாதி கொண்டுள்ளார்.
குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடாலயத்திலும் சித்தர்கள் ஜீவ சமாதியிலிருந்து அருள்கிறார்கள்.
இதற்கு அருகில் திருபுவனம் இருக்கிறது. இங்கு விராலிமலைச் சித்தர்கள் ஜீவசமாதியுள்ளது.
திருவிடைமருதூருக்கு அருகிலிருப்பது கோவிந்தபுரம். இங்கு ஸ்ரீ போதேந்திராள் ஜீவ சமாதியுள்ளது.

ஆடுதுறை, குத்தாலம் கதிராமங்கலத்தில் வன துர்க்கை ஆலயமுள்ளது. இங்கு அகத்தியர் அருள்கிறார்.

மயிலாடுதுறையில்மயூரநாதர் ஆலயத்தில் காளங்கி நாதரும் மற்றும் பல சித்தர்களும் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள். திருக்கடையூரிலும் காளங்கிநாதர் அருள்கின்றார்.

மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர், முத்துக் குமாரசுவாமி ஆலயம் இருக்கிறது. இங்கே தல விருக்ஷமாகிய வேப்ப மரத்தினடியில் தன்வந்தரியின் ஜீவ சமாதியும், ஆலயத்தினுள் வசிஷ்டரின் ஜீவ சமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது.

சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் கொள்ளிடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் ஆச்சாள்புரம் உள்ளது. இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர்அருள்கின்றார். திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்த ஆலயம் இங்குள்ளது.

வடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மேட்டுக்குப்பம் உள்ளது. இங்கே அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம். தவறாது கண்டு களித்து அருள்பெற வேண்டிய இடம்.

நெய்வேலிக்கு அருகில் விருத்தாசலம் இருக்கிறது. இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது.

திருவாரூர், நாகை சாலைக்கு அருகில் எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் ஸ்தல விருக்ஷத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும், இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சன்னதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும் மற்றும் பல சித்தர்களும் அருளாட்சிசெய்கிறார்கள்.

அகப்பேய் சித்தர் எட்டுக்குடி, தஞ்சைக்கு அருகில் திருவையாற்றில் அருள் புரிகின்றார்.

திருச்சியை அடுத்த கரூரில் கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்பட்டினத்தில் நாகைநாதர் ஆலயத்தில் அழுகண்ணரும், காசிபரும், வரதரும் அருள் புரிகின்றனர்.

நாகைக்கு அருகில் பொய்கை நல்லூரில் ஸ்ரீகோரக்க நாதரும், அருகில் புஜண்டவனத்தில்
ஸ்ரீ காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர்.

மதுரையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் சுந்தரானந்தர் அகத்தியரும், அருகிலே அழகர்மலையில் பதஞ்சலியும், இராமதேவர், யாக்கோப்பு என்ற தேரையரும், பழமுதிர்ச் சோலையில் ஸ்ரீபோகநாதர், கமலமுனியும், மதுரைக்கு அருகில் கிண்னிமங்கலத்தில் அருளாநந்தா் எனும் ஏகநாதரின் ஐீவசமாதியும் இவரின் சீடர்கள் 18-சித்தர்களின் ஜீவசமாதியும் அங்கேயே உள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீபோகநாதரும், மலை உச்சியில் மச்சமுனியும், அருள் புரிகின்றனர்.

திருச்செந்தூரில் புண்ணாக்கீசர், காசிபர் ஆகியோர் திருவருள் புரிகின்றார்கள். இங்கே எம்பெருமான் சுப்ரமண்யர் சன்னதிக்கு அருகில் இடதுபுறத்தில் சிறிய கதவுண்டு. இதன் வழியே உள்ளே சென்றால் குகையினுள் பஞ்சலிங்க வடிவாக ஐந்து சித்தர்கள் இருப்பதையும், அக்குகைக்குள் சூரிய ஒளி உள்ளே புகுவதையும் கண்ணாரக் கண்டு அருள் பெறலாம்.

திருச்செந்தூருக்கு அருகில் காயல்பட்டினம் உள்ளது. இங்கு பல சித்தர்களும் அருள் வழங்குகின்றனர்.

கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்தில் விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பிருகு முனிவர் ஆகியோரும் அருள் புரிகின்றனர். பழனியில் உள்ளது போல் இங்கு நவபாஷாணத்தால் உள்ள சிவலிங்கம் உள்ளது. சுசீந்திரத்திற்கு அருகில் மருந்து மலை உள்ளது. இங்கு காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர்.

இராமேஸ்வரத்தில் பதஞ்சலி முனிவர் அருள்கிறார். இங்கிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் கோசமங்கை உள்ளது. இங்குள்ளதலவிருக்ஷம் இலந்தைமரத்தடியில் காகபுஜண்டர் ஜீவ சமாதியும் மற்றும் திருக்கழுக்குன்ற ஆலயத்தில், உச்சியில் ஸ்ரீ கோரக்கரும், காஞ்சிபுரத்தில் கடுவெளிச்சித்தர், காளங்கி நாதர் மற்றும் பல சித்தர்களும் இருந்து ஞானச் செல்வத்தை வாரிவழங்குகின்றனர்.

திருவாரூரில் கமலமுனி, சுந்தரானந்தர், இடைக்காடரும், திருவண்ணாமலையில் தேரையர், இடைக்காடர், கௌத மகரிஷி, நந்தீஸ்வரர், சுப்ரமணியர், அகப்பேய்ச்சித்தர் மச்சமுனி, குகை நமச்சிவாயர் மற்றும் எண்ணிடலங்கா சித்தர்களும் ஜீவ சமாதியில் இருந்து அருள்புரின்றனர்.

திருவண்ணாமலைக் கார்த்திகை மாத பௌர்ணமியன்று உள்ளன்போடு சென்றால், மானிட வடிவில் வந்து இன்றும் சித்தர்கள் காட்சி கொடுத்துக் காத்து இரக்ஷிக்கின்றனர்.

சத்குருநாதர் ஸ்ரீ காகபுஜங்கரின் ஜீவ சமாதிகள் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.

சேலம், நாமக்கல் (வழி சேந்தமங்கலம்) சாலைக்கு அருகில் கொல்லிமலை என்னும் சதுரகிரி அமைந்துள்ளது.

தென்காசிக்கு அருகில் திருக்குற்றாலமலை அமைந்துள்ளது.

பாபநாசத்திற்கு அருகில் பொதிகைமலைஅமைந்துள்ளது

மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைக்கு அருகில் (தானிப்பாறை வழி) சுந்தரமகாலிங்கம் என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. பக்தியோடு, உள்ளுணர்வோடு இம்மலைகளுக்குச்சென்று தங்கி வந்தால் சித்தர்களின் அருளையும், சிவனருளையும் முழுமையாகப் பெறலாம்.

கொல்லி மலையில் ஸ்ரீ அறைப்பள்ளீஸ்வரர் ஆலயம் (குகையில் குடிகொண்ட ஈசன்), பெரியண்ணசாமி ஆலயம், சோரமடையான் ஆலயம், எட்டுக்கை அம்மன் ஆலயம் முதலிய ஆலயங்களும், காகபுஜங்கர் குகை, அகத்தியர் குகை, பாம்பாட்டிச் சித்தர், புலிப்பாணி குகை, காளங்கிநாதர் குகை, கன்னிமார் குகை, கோரக்கர் குன்றம் முதலிய இடங்கள் சித்தர்கள் வழி செல்லும். நாமும் தரிசித்து தங்கியிருந்து அருள்பெற வேண்டிய இடங்களாகும்.

குற்றாலமலையில் அருள்மிகு செண்பகாதேவி ஆலயமும், வாலைக்குகை என்று வழங்கும் தெட்சிணாமூர்த்தி குகை, (பொதிகையில்) அகத்தியர் குகை, ஔவையார் குகை, கோரக்கர் குகை, புஜண்டர் குகை (தேனருவியில் உட்புறத்தில் உள்ளது), பரதேசிப்பாறை முதலியவை தரிசித்துத் தங்கி அருள்பெற வேண்டிய இடங்களாகும்.

வள்ளிநாயகம் சுவாமிகளின் ஜீவசமாதி தரிசனம் திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே உள்ளது அங்கே பதஞ்சலி முனிவர் சூட்சுமமாக இருக்கின்றதை இந்த சிலை உணர்த்தும்.


கடுவெளி சித்தர் ஜீவ சமாதி

வெட்டவெளியினை தியானித்து சித்தி பெற்றவர் ஸ்ரீ கடுவெளி சித்தர்.அவரது ஜீவ சமாதி காஞ்சிபுரத்தின் மையப் பகுதியிலே, ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருகோவிலில் இருந்து சிறிது தொலைவிலே, இஸ்லாமிய மக்கள் மிகுந்து வாழக் கூடிய பகுதியிலே கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

முற்காலத்திலே இந்த இடத்திலே பெரிய சிவாலயமும், இந்த ஜீவ சமாதியைச் சுற்றி, மேலும் பல சமாதிகளும் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்த ஆலயம் முற்றிலும் அழிக்கப் பட்டு, பிற சமாதிகளும் அழிக்கப் பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்த கடுவெளி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள சிவ லிங்கத்தினை மட்டும், யானையைக் கொண்டு இழுத்தும் அசைக்க முடியவில்லை எனவும் கூறுகின்றனர். நீண்ட கால போராட்டங்களுக்குப் பிறகு, இன்று இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றி சிறிய அளவிலே இடத்தை மீண்டும் கையகப்படுத்தி, முள் வேலி அமைத்துள்ளனர் உள்ளூர் அன்பர்கள்.


Siddhar



1200 வருட சக்தி வாய்ந்த பழமையான சித்தர்.

கண்ணை மூடி உட்கார்ந்தால் ஒளி அதிர்வாக காட்சி அளிக்கும் 1200 வருட சக்தி வாய்ந்த
பழமையான சித்தர், (ஜீவ சமாதி-பூதக்கல் ஸ்ரீ சர்ப சித்தர் பீடம்) 

1200 வருடத்திற்கும் பழமையான ஜீவ சமாதி


இருக்கும் இடம் அசிரிரி மூலம் சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் போன ஜென்மத்தில், சித்தர் தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே தேடி சென்று பார்க்க கூடிய ஜீவா சமாதி என்பதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. மற்ற ஜீவா சமாதிகள் போல் அல்லாமல் பூதக்கல் போல் காட்சி அளிக்கும் இந்த சமாதியை சுற்றி பாம்புகள் வருமாம், மேலும் இவை மக்களை இதுவரை எதுவும் செய்ததில்லை.

சூழ்ட்சும ரகசியம்:
இந்த சமாதியின் மேல் உள்ள பூதக்கல் பஞ்சபூத சக்திகளை கட்டுபடுத்தும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளதால் சகல வித தோஷங்களை போக்கும் சக்தி வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது.


இன்னுமொரு அற்புதம் என்னவென்றால் சமாதி அருகே கண்ணை மூடி தவம் செய்தால், ஒளி உருவமாக சித்தர் காட்சி அளித்து வருகிறார். இந்த சித்தர் காளஹஸ்தியில் இருந்து வந்தாக
கண்டறியப்பட்டுள்ளது. 1200 வருடங்களுக்கு முன் உருவான சமாதி என்பதால் பல இயற்கை
சீற்றங்களை தாண்டி இன்றும் நிலையாக உள்ளது,

முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது. 15 நாட்கள் ஒரு புறம் சாய்ந்தும் 15 நாட்கள் ஒரு புறம் சாய்ந்தவாறும் காட்சி அளிப்பது அற்புதத்தின் எல்லை என்றே கூறலாம், பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பதிவை படிக்கவும், இந்த சமாதிக்கு செல்ல முடியும் என்பது சித்தர் வாக்கு. 

பஞ்ச பூதங்களை கட்டுபடுத்தும் கல் என்பதால் எந்த சேதமும் இன்றி இன்றும் நிலையாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் அம்மன் அருகே உள்ள சிலை, அசிரிரி மூலம் கனவு வந்ததன் மூலம் ஏரியில் இருந்து எடுக்கப்பட்டது, இந்த கல்வெட்டிலும், அற்புத விஷயங்கள் அடங்கி இருப்பது ஆச்சர்யமே! நேரில் சென்று பார்த்தால் அற்புதத்தை உணர முடியும். பிராதான அல்லது சமாதியாக காட்சி அளிக்கும் கல்வெட்டில், மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் உள்ளது இதற்கு அடியில் தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார் அந்த லிங்கத்தின் மீது சந்திரன் /சூரியன் உருவம் பதிக்க பட்டு உள்ளது

பிரணவ மந்திரம் பதிக்க பட்டு உள்ளது பஞ்ச பூதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது நியாயமாக எதை வேண்டியதை தரும் சர்ப சித்தரை காண கீழ் கொண்ட முகவரிக்கு செல்லவும்.


சமாதிக்கு செல்லும் பொது முகவரியை விலாவரியாக எழுதி கொண்டு எடுத்து செல்லுங்கள்.
ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்
கோவிந்தராஜ் நகர், மாங்காடு,
சென்னை-122.
கைப்பேசி எண்:9789826263.

மாங்காடு தாண்டி செல்லும் போது பட்டு மாங்காடு ரோடு இடது புறமாக வரும், உள்ளே சென்று வலப்புறத்தில் வாழை தொப்பை ஒட்டிய சிமெண்ட் ரோடு (கோவிந்தராஜ நகர்) உள்ளே செல்லவும், அங்கு இருப்பவர்களிடம் ஜீவ சமாதி என கேட்டால் வழி சொல்லுவார்கள்.


63 சீடர்களுடன் ஒரு சித்தர் தலம்

63 சீடர்களுடன் ஒரே இடத்தில் 

ஐக்கியமான ஒரு சித்தர் தலம்


மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது.



சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.



சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.


முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர். 

இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.

பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார். 

அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார்.

கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது. 

இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம். 

அமைவிடம்:


நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.





சித்தர் ஜீவ சமாதி

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.  சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.

அதனால்தான், இதுவரை கோவில் கோவிலாக சென்றவர்கள் கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.

உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே. அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.

இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் 
இதோ:-
  1. அகஸ்தியர் – திருவனந்தபுரம்
  2. கொங்கணர் – திருப்பதி
  3. சுந்தரனார் – மதுரை
  4. கரூவூரார் – கரூர்
  5. திருமூலர் – சிதம்பரம்
  6. தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
  7. கோரக்கர் – பொய்யூர்
  8. குதம்பை சித்தர் – மாயவரம்
  9. இடைக்காடர் – திருவண்ணாமலை
  10. இராமதேவர் – அழகர்மலை
  11. கமலமுனி – திருவாரூர்
  12. சட்டமுனி – திருவரங்கம்
  13. வான்மீகர் – எட்டிக்குடி
  14. நந்திதேவர் – காசி
  15. பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
  16. போகர் – பழனி
  17. மச்சமுனி – திருப்பரங்குன்றம்
  18. பதஞ்சலி – இராமேஸ்வரம்

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

1) அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்கு பெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

2) பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. 

3) கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

4) ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. 

5) மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். 

6) திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. 

7) புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

8) பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

9) ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. 

10) மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். 

11) பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

12) உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. 

13) அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

14) சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

15) சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. 

16) விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. 

17) அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.


18) கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். 

19) மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. 

20) பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.


21) உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். 

22) திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. 

23) அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. 

24) சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

25) பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

26) உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். 

27) ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்

27 நட்சத்திரங்களும் சித்தர்களும்
* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
.
*பரணி(மேஷம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
.
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
.
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
.
* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.
.
மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.
.
மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.
.
மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.
.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,
.
புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
.
பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
.
ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
.
மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
.
பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
.
 உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.
.
உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;
.
உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
.
 உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.
.
 அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.
.
சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.
.
சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
.
சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
.
விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை
.
விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
.
அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
.
கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்.
.
மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
.
பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.
.
உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
.
உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
.
 திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
.
 அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
.
சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
.
 பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.
.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
.
உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.
.
ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை மீனாட்சியம்மன் கோவில் எல்லாம் பல்லவ சிதத்தர் (ஏ) ஸ்ரீசுந்தரானந்தர்,
குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.
ஓம் நமசிவாய
ங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் :

1. அஸ்வினி நட்சத்திரம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :

2. பரணி நட்சத்திரம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :

3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :

4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :

5. ரோகிணி நட்சத்திரம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :

6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :

7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ரிஷப இராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :

8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

9. மிருகசீரிடம் நட்சத்திரம் 4ம் பாதம் – மிதுன இராசி :
ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

10. திருவாதிரை நட்சத்திரம் – மிதுன இராசி :
ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :

11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – மிதுன இராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :

12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – கடக இராசி :
ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :

13. பூசம் – நட்சத்திரம் கடக இராசி :
ஓம் ஸ்ரீம் – குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :

14. ஆயில்யம் நட்சத்திரம் – கடக இராசி :
ஓம் ஸ்ரீம் ம் -அம் – உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :

15. மகம் நட்சத்திரம் – சிம்ம இராசி :
ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

16. பூரம் நட்சத்திரம் – சிம்ம இராசி :
ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – சிம்ம இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் – ஸ்ரீ இராம தேவரே நம
18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – கன்னி இராசி :
ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – கன்னி இராசி :
ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :

20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – கன்னி இராசி :
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :

21. அஸ்தம் நட்சத்திரம் – கன்னி இராசி :
ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – கன்னி இராசி :
ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – துலாம் இராசி :
ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

24. சுவாதி நட்சத்திரம் – துலாம் இராசி :
ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – துலாம் இராசி :
ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – விருச்சிக இராசி :
ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

27. அனுஷம் நட்சத்திரம் – விருச்சிக இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

28. கேட்டை நட்சத்திரம் – விருச்சிக இராசி :
ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :

29. மூலம் நட்சத்திரம் – தனுசு இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :

30. பூராடம் நட்சத்திரம் – தனுசு இராசி :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :
31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – தனுசு இராசி :
ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – மகர இராசி :
ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

33. திருவோணம் நட்சத்திரம் – மகர இராசி :
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – மகர இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :

36. சதயம் நட்சத்திரம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :

37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :

38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – மீன இராசி :
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :

39. உத்திரட்டாதி நட்சத்திரம் – மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :

40. ரேவதி நட்சத்திரம் – மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம்

1. அகஸ்தியர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

2. பதஞ்சலி – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

3. கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

4. திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

5. குதம்பை சித்தர் – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

6. கோரக்கர் – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

7.தன்வந்திரி – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

8. சுந்தராணந்தர் – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

9. கொங்ணர் – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

10. சட்டமுனி – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

11. வான்மீகர் – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

12. ராமதேவர் – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

13. நந்தீஸ்வரர் – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

14.இடைக்காடர் – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

15. மச்சமுனி – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

16. கருவூரார் – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

17. போகர் – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

18.பாம்பாட்டி சித்தர் – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.



Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...