நாராயணவனம் | Tirupathi Temple

நாராயணவனம் என்னும் ஊர் ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருப்பதி - ஊத்துக்கோட்டை - சென்னை வழியில் உள்ளது. நாராயணவனம் திருப்பதியிலிருந்து 39 கி.மீ. தொலைவிலும், புத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்குதான் அருள்மிகு கல்யாண வெங்கடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக் கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கு சுரைக்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது.

திருமலை வேங்கடவன் பத்மாவதி திருமணம் நடைபெற்ற இடமே நாராயணவனம் ஆகும். இந்த கல்யாண வெங்கடேஸ்வரர் ஆலயம் ஆகசராஜன் என்ற அரசனால் தன் மகள் பத்மாவதி, ஸ்ரீனிவாசன் திருமண வைபவத்தை கொண்டாடும் வகையில் கட்டியுள்ளார். இங்கு வேங்கடவன் , பத்மாவதியுடன் திருமண கோலத்தில் காட்சியளிக்கின்றார்.


தொண்டை நாட்டு மன்னன் ஆகாசராஜன் குழந்தை இன்றி மனம் வருந்தினார். பிள்ளை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். ஒருநாள் அருணி நதிக்கரையில் அழகான குழந்தையாக பத்மாவதி ஒரு பெட்டியில் கிடைக்கப்பெற்றார். குழந்தை கிடைத்ததில் ஆகசராஜனும், அவர் மனைவி தாரிணியும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர்.

குழந்தை தாமரை மலர்மேல் இருந்ததால் பத்மாவதி என்று பெயர் சூட்டினார். பத்மாவதி நரயாணபுரம் ஆகாசராஜன் அரண்மனையில் அழகான பெண்ணாக வளர்ந்தார். ஒரு நாள் நாராயனபுரத்திற்கு அடுத்த நந்தவனத்தில் தொழியருடன் பத்மாவதி இருந்தார். அப்போது காட்டிற்கு வேட்டையாடத் திருமலையிலிருந்து வந்த ஸ்ரீனிவாசன் பத்மாவதியைக் கண்டு காதல் கொண்டார். இது பற்றி தன் வளர்ப்பு தாய் வகுள மாலிகையையிடம் கூற அவர் ஆகாசராஜன்,மகாராணி தாரிணியிடம் பெண்கேட்டு வந்தார். ஆகசராஜனும் சுகப்ரம்ம ரிஷியிடம் அறிவுரை கேட்க ரிஷியும் திருமணம் செய்ய ஆசி வழங்குகிறார். ஆகாசராஜன் பத்மாவதியை ஸ்ரீனிவாசனுக்கு திருமணம் செய்து தர சம்மதித்து திருமண ஓலையை ஸ்ரீ சுக முனிவரிடம் கொடுத்து திருமலைக்கு அனுப்பி வைக்கிறார். சுக முனிவர் திருமண உறுதி ஓலையை ஸ்ரீனிவாசன் மற்றும் வகுள மாளிகை ஆகியோரிடம் வழங்குகிறார்.


திருமணம் நடத்த வேங்கடவனிடம் போதுமான பணம் இல்லை.எனவே குபேரனிடம் மாதம் ஒன்றுக்கு 100 க்கு 1 தங்க நாணயம் வட்டிவீதமாக கலியுக முடிவில் கடனை திருப்பித் தருவதாக உறுத்தியளித்து 16 லட்சம் ஸ்வர்ணராம முத்திரிக்கா எனும் தங்க நாணயங்களை கடனாகப் பெற்றார். பிரம்மனும், சிவபெருமானும் சாட்சி கை எழுத்து போடுகின்றனர். அப்போது சுக முனிவரும் அருகில் உள்ளார்.


திருமண நாள் வருகிறது. மாப்பிள்ளை அழைப்பின்போது, தேவர்களும்,முனிவர்களும் பின்தொடர சிவபெருமான்,பார்வதி தேவி, பிரம்ம தேவன்,சரஸ்வதி தேவி, முன் செல்ல ஸ்ரீனிவாசன் அன்னை வகுலமாளிகையுடன், திருமண ஊர்வலம் சேஷாசலத்திலிருந்து தொடங்கி மெல்ல நாராயனபுரம் வந்தடைகிறது.

திருமணம் வைகாசி மாதம் ,10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வளர்பிறை தசமி திதி,ஹஸ்த நட்சத்திரம்,ரிஷப லக்கினத்தில் ,பிரம்மா,வசிஷ்டர், சுகர், நாரதர்,அனுமன் ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.திருமண விழா 5 நாட்கள் நடைபெற்றது. திருமணத்திற்கு பட்சணங்கள் செய்ய மாவு அரைக்க பயன்படுத்திய மாவு அரைக்கும் கல் கோயிலின் உள்ளே சாட்சியாக உள்ளது.

நாராயணவனம் கல்யாண வெங்கடேஷ்வரர், பத்மாவதி ஆலயம் சென்று அருள் பெறுவீராக.திருமண தடை உள்ளவர்கள் இந்த ஆலயம் சென்று ஸ்ரீனிவாசன், பத்மாவதியை வணங்க விரைவில் திருமணம் கை கூடும்.


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...