இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரிய திருவடியும், சிறிய திருவடியும்

படம்
வைணவ ஸம்ப்ரதாயத்தில், கருத்மான் என்னும் பக்ஷிகளுக்குள் ராஜனாகப் போற்றப்படும் கருடாழ்வாரை எம்பெருமானின் பெரிய திருவடி என்றும், ஹநுமானை சிறிய திருவடி என்றும் கூறுவதுண்டு. இவர்களுக்குள் யார் பெரியவர் யார் சிறியவர் என்று குறிப்பதற்கான காரணங்கள் எதனால் ஏற்பட்டவை என்று விளங்குவதில்லை. மிகவும் ஸ்ரேஷ்டமான திவ்ய கைங்கர்யர்கள் இருவருக்குள் பெரிய /சிறிய போன்ற பேதம் தேவை தானா? நாமறிந்த வரையில், ராமாயணத்தில் இருவருமே திவ்ய பாத்திரர்கள். வயதினிலே பெரியவர் யார், சிறியவர் யார் என கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள். நித்ய சிரஞ்ஜீவியான அனுமனுக்கு வயது என்பது கிடையாது. இருவரும் எம்பெருமானுடைய கைங்கர்யத்தில் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். எம்பெருமானும் இவர்களுடைய கைங்கர்யத்தை பேதமின்றி அனுபவித்தவன்.  ஒரு சமயம், ஒருவர் பூமியில் வலம் வருவதையும், இன்னொருவர் உயர்ந்த வானத்தில் பறப்பதையும் காரணமாகக் கொண்டு, இந்தச் சிறிய /பெரிய திருவடி பேதம் உண்டானதோ? எப்போதும் உயர்ந்த வானத்தில் பறந்து கொண்டிருக்கும் கருடனை பெரிய திருவடி என்றும், எம்பிரான் ராமனுடன், வானத்தை விடத் உயரம் தாழ்ந்த பகுதிகளான நிலம், கடல், மலைகளில் தொடர்ந்த

வாக்கை விட கடமையே பெரிது

படம்
கோகுலத்தில் யசோதையின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்த மாயக்கண்ணனின் அட்டகாசத்தை கோபியர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் வீடுகளில் கண்ணன் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. உறியில் உள்ள வெண்ணெயைத் திருடுவது, தயிரைக் குடித்துவிடுவது என்று அட்டகாசம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய தொல்லைகளைக் குறித்து யசோதையிடம் முறையிட்டும் ஒன்றும் பயன் இல்லை. வந்திருப்பவன் பகவான் என்பதை அறியாத அந்த கோபியர்கள், எப்படியாவது கண்ணனின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட நினைத்தனர். ஆனால், அவன் வருவதும் போவதும் அவர்களுக்குத் தெரியாத நிலை. எனவே அவர்கள் கண்ணனை கையும் களவுமாகப் பிடிக்கவேண்டி ஒரு தந்திரம் செய்தனர். உறிகளில் மணிகளைக் கட்டிவிட்டால் - வெண்ணெய்ச் சட்டியை அவன் உறியிலிருந்து எடுக்கும்போது, மணி ஓசை எழுப்பும் அல்லவா? அப்போது திருட்டுக் கண்ணனை கையும் களவுமாகப் பிடித்துவிடலாமே! இந்த யோசனையை அனைத்து கோபியர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். உடனே செயலிலும் இறங்கிவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் உள்ள உறிகளில் மணிகளைக் கட்டி அலங்கரித்தனர். பின்னர் பரீட்சை செய்தும் பார்த்

ஏக்நாத் என்ற ஒரு மகான்

படம்
ஏக்நாத் என்ற ஒரு மகான். ஒரு சிறந்த பாண்டுரங்க பக்தர். ஒரு நாள் சிலருடன் சேர்ந்து யாத்ரை கிளம்பினார். அவர்கள் நடந்தே தான் அக்காலத்தில் செல்ல வேண்டும் அல்லவா?. காசி அயோத்யா, பிருந்தாவன், மதுரா, பிரயாகை என்றெல்லாம் சென்றார்கள். வழி எல்லாம் பஜனை, நாம சங்கீர்த்தனம், ப்ரவசனம் செய்து தாமும் மகிழ்ந்து அந்தந்த ஊரிலே உள்ளவர்களும் இதில் கலந்து கொண்டார்கள். ஒருவழியாக கிட்டத்தட்ட ஒரு வருஷம் போல் ஆகி புனித யாத்ரை முடிந்து தங்கள் ஊரான பைதான் (பிரதிஷ்டானபுரம்) கொண்டிருந்தார்கள். எல்லோர் கையிலும். பூஜைக்கு, மற்றோருக்கு கொடுக்க விசேஷ காலங்களில் உபயோகிக்க பாத்திரங்களில் கங்கை நீர். வழியில் ஒரு இடத்தில் குடிக்க தண்ணீரே இல்லை தாகம் தொண்டையை வரள செய்தது ஏறக்குறைய பாலைவனம் அவர்கள் இருந்த இடம். ஒருசிலர் கையில் இருந்த கங்கை ஜலத்தை குடித்துவிட்டார்கள். ஏக்நாத் தாகத்தில் தவித்தார். அவர்கள் அருகே ஒரு கழுதையும் கீழே விழுந்து மரண தருவாயில் கிடந்தது அதற்கும் தாகம். தவித்துகொண்டிருந்தது. ஏக்நாத் சற்றும் யோசிக்காமல் தன்னிடமிருந்த கொஞ்சம் கங்கை நீரை அந்த கழுதையின் வாயில் புகட்டினார். "என்ன ஏக்நாத், கங்கை நீரை ஒரு

பூதப்ருதே நம என்று தொடர்ந்து ஜபம் செய்து வாரும்

படம்
திருவரங்கத்தில் ஓர் ஏழை வைணவர் வாழ்ந்து வந்தார்.  அவருக்குப் பதினாறு குழந்தைகள்! திருவரங்கநாதன் கோயிலில் பிரசாதம் வழங்கப்படும் போதெல்லாம் அதைப் பெற்றுக்கொள்ள முதல் ஆளாக வந்து நின்றுவிடுவார்.  தான் ஒருவனுக்கு மட்டுமின்றித் தன் குடும்பம் முழுமைக்கும் பிரசாதம் வேண்டுமெனக் கேட்பார்.  அரங்கனுக்கு அன்றாடம் தொண்டு செய்யும் அடியார்களெல்லாம் அரங்கனின் பிரசாதத்தில் ஒரு துளி கிட்டுவதே பேரருள் என எண்ணிப் பெற்றுச்செல்ல, இவர் எந்தத் தொண்டும் செய்யாமல் பிரசாதம் மட்டும் நிறைய வேண்டுமெனக் கேட்பதைக் கோயில் பணியாளர்கள் விரும்பவில்லை. உரத்தகுரலில் அர்ச்சகர்கள் இவரை விரட்டுவதால் தினமும் கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்படும்.  ஒருநாள் பிரசாதம் பெற்றுக்கொள்ளத் தன் பதினாறு மெலிந்த குழந்தைகளுடன் வரிசையில் வந்துநின்று விட்டார் அந்த வைணவர்.  கோயில் பணியாளர்கள் அந்த வைணவரை விரட்டிக் கொண்டிருந்தார்கள்.  அச்சமயம் அங்கே வந்த ராமாநுஜர் அக்காட்சியைக் கண்டார். அந்த வைணவரை அழைத்து, “நீர் கோயிலில் ஏதாவது தொண்டு செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் சென்றால் யாரும் உம்மைக் கேள்வி கேட்க மாட்டார்கள்.  ஆனால், நீர் பிரசாதம் பெறவேண்டு

ராமரின் விரதத்தை சோதித்த பெண்!

படம்
சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை. அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது. ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் செறிந்த அறிவும் நாளுக்கு நாள் கொண்டே சென்றது. சென்றது. உயர்ந்து ஒரு முறை ராமரைப் ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்திதிருந்தாள். அவள் அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய நடனம்புரிய அனுமதி வழங்கினார். அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய

யமுனை வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள்.

படம்
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்!!! யமுனைக் கரையில் கண்ணனின் தோளில் சாய்ந்தவாறு கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்துக் கொண்டிருந்தாள். ஓவியமாக ராதை தன் தோளில் சாய்ந்துக் கொண்டிருந்த போதிலும், கண்ணனின் கவனம் அக்கரையிலேயே இருந்தது. "என்மேல் ஒரு சிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' என்றாள் பொய் கோபத்ததுடன்.  "எனக்குப் பசிக்கிறது!" என்றான் அந்த மாயாவி. இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?' என்றாள் ராதை.  "அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''. "யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள். அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. "துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன். "அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!'' என்றாள் ராதை.  "ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் பக்தர்!''  சரி... சரி... அவருக்கும் சே

அர்ஜுனன் மனதில் நம்மை ஏன் கீதை உபதேசம் செய்ய தேர்ந்தெடுத்தார்?

படம்
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என ஶ்ரீ கிருஷ்ணன் அருளியதை பற்றிய அழகான  அருமையான   பதிவு இது,  கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்? என்பதை விளக்கும் நிகழ்வு. குருஷேத்திரப் போர் முடிந்து ஒரு நாள் இருவரும் துவாரகையில் நகர் வலம் போகின்றனர். அப்போது அர்ஜுனன் மனதில் நம்மை ஏன் கீதை உபதேசம் செய்ய தேர்ந்தெடுத்தார் என சந்தேகம் தோன்றுகிறது . பலராமரிடம் சொல்லி இருக்கலாம். தாய் யசோதை இல்லை தேவகி இடம் சொல்லி இருக்கலாம். ராதை, பாமா, ருக்மணியிடம் சொல்லி இருக்கலாம்.? ஏன் என்னிடம் சொன்னார்.? காரணம் என்ன?! யோசித்த அர்ஜுனன், கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறார். . " கண்ணா கீதா உபதேசத்திற்கு ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள். பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் நீங்கள் புறக்கணித்தீர்கள்? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச்

ஸ்ரீ பாதம் தாங்கிகள்

படம்
ஸ்ரீரங்கம்  போயிருந்த பொழுது அங்கு பெருமாள் புறப்பாடு நடப்பதைக் காண வாய்த்தது. புறப்பாட்டில் பல்லக்கைத் தூக்கி வந்த இளைஞர்கள் வழியெங்கும் தங்கள் நடையை விசித்திரமான ஒரு நடனத்தைப்போல ஆடித் தூக்கி வந்தது, ஏதோ ஸ்ரீரங்கத்து பிராமண இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று மட்டுமே அப்போது நான் எண்ணிக் கொண்டேன். வேளுக்குடி சொன்ன பிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயப் பெயர்களும் அதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு பார்த்து அனுபவிக்கும்பொழுது அதிலுள்ள சுவாரஸ்யமே தனிதான்! உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். இருந்தாலும் மற்றவர்களுக்காக ஓரிரு வார்த்தைகள். சுவாமியின் பல்லக்குக்கு தோளுக்கினியான்  என்ற பெயர் இருப்பதும், பல்லக்குத் தூக்கிகளுக்கு ஸ்ரீபாதம் தாங்கிகள்  என்று பெயர் என்பதும் எனக்கு இத்தனை நாளாகத் தெரியாது! பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப்  பறக்குமோ  அப்படிப்  புறப்படுமாம் . அப்பாங்கை  கருடகதி  என அழைப்பார்களாம்! அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்க

விதுரா கவலை எதற்கு என் பசியை ஆற்றிவிட்டாய் நீ

படம்
வீட்டுக்கு வந்தவரை, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது?' என்று தன்னைத் தானே நொந்து கொண்டவன்... ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து, அமரச் சொன்னான். முன்னதாக, அந்த ஆசனத்தைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே இருந்தான். 'என்னடா இது? நம் வீட்டுக்கு ஒருவர் வந்துவிட்டால், அவரை நாற்காலி அல்லது சோபாவில் உட்காரச் சொல்லி விடுவோம். ஆனாலும் இந்த விதுரன் ஏன் இப்படி அந்த ஆசனத்தை இவ்வளவு நேரம் தடவித் தடவிப் பார்த்தபடி இருக்கிறான்?' என்று குழப்பம் வருகிறதுதானே, நமக்கு?! 'நான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறவன். அவன்தான் எனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கண்ணன் தூது வந்தபோது, மிகப்பெரிய பள்ளம் தோண்டி, அதன் மேல் கம்பளம் விரித்து, அந்தக் கம்பளத்தின் மீது ஆசனமிட்டு கண்ணனை உட்காரச் செய்தான் துரியோதனன். ஸ்ரீகிருஷ்ணரின் பாரம் தாங்காமல், அந்த இருக்கை முறியவே... அவன் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்தான். அங்கிருந்த வீரர்கள் அவனைச் சிறைப்பிடிப்பதற்காக நின்றிருக்க... அப்போது கண்ணபிரானின் திருவடியானது பூமியைத் தொட்டபடி இருக்க, அவன் திருமுடியோ... அ

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பத ஏன் தெரியுமா?

படம்
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டான் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்வதுண்டு. அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விவகாரத்தை உண்டு பண்ணுகிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு இந்த உதாரணம் பொருந்தும். ஆனால் அந்தப் பழமொழி உண்டான விதம் எப்படி என்பதை மகாபாரதத்திலிருந்து சில நிகழ்ச்சி .. ஸ்ரீகிருஷ்ணனிடம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும். அவை என்னென்ன? சங்கு,சக்கரம்,வில்,வாள், கதை ஆகிய ஐந்தும் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருக்கும். பக்தியுடன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் ஆபரணங்களாகத் தெரியும். எதிரிகளுக்கு இதெல்லாம் ஆயுதங்களாகத் தெரியும். சக்கரம், வில், வாள், கதை இதெல்லாம் ஆயுதங்கள் என்று சொன்னால் சரி ஒப்புக் கொள்ளலாம். சங்கு இருக்கிறதே அது எப்படி ஆயுதமாகும்? இப்படித்தான் துரியோதனன் நினைத்தான் ஏமாந்து போனான்... கண்ணபிரானுடைய உதவி வேண்டும் என்பதற்காக அர்ஜுனனும் துவாரகைக்குப் போனான். துரியோதனனும் துவாரகைக்குப் போனான்.அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார். அவர்கள் இருவரும் தனித்தனியாக வர இருக்கும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவியாக

ஒரு தாய் சிட்டுக் குருவி - அபயம் அளித்ததை

படம்
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.  குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது. தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “ கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது. நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.  எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்  என்றது குருவி! "காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிற