இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Ulakileye alakana naṭarajar virrirukkum konerirajapuram | உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

படம்
புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம். அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள். படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான். இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டி

Complete secrets of the rare constellations that the world is searching for told in rare leaf prints |அபூர்வ ஓலை சுவடிகளில் சொல்லப்பட்ட உலகமே தேடி கொண்டிருக்கும் அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள்.

அபூர்வ ஓலை சுவடிகளில் சொல்லப்பட்ட உலகமே தேடி கொண்டிருக்கும் அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள். ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஒரு மாபெரும் ரகசியத்தை உலகம் அறிய நீண்ட நாட்களாக தொகுத்து இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன். நக்ஷசத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம். நட்சத்திர மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27 நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. நட்சத்திர பெயர்கள்:- ------------------------------------- 1.அஸ்வினி 2. பரணி 3.கிருத்திகை 4.ரோஹிணி 5.மிருகசீரிடம் 6

Transportation Information Routes for Sabarimala pilgrims | சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்து தகவல் வழிகள்.

படம்
பூலோக சொர்க்கம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்து தகவல் வழிகள். ஒவ்வொரு ஐயப்பன் பக்தர்களும் தெறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் அடர்ந்த காட்டு வழியாக ஆபத்தான பயணம் செய்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டி இருந்தது. எனவே மண்டலபூஜை-மகரவிளக்கு நடைபெறும் சமயத்தில் , மன்னரகுளஞ்சி-சாலக்கயம் சாலை வழியாக 5000 பக்தர்களே தரிசனம் செய்து வந்தனர். ஆனால் இப்போது சபரிமலைக்கு செல்ல எருமேலி, வண்டிபெரியார், சாலக்கயம் ஆகிய மூன்று பாதைகளும் சரிசெய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 கோடிக்கும் மேலான பக்தர்கள் இந்த மூன்று வழிகளில் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். 1. எருமேலி வழியாக பெரிய பாதையில் நடந்து செல்பவர்கள் அடர்ந்த காடு மற்றும் மலை வழியாக 61 கி.மீ. பயணம் செய்தால் சபரிமலையை அடையலாம். 2. குமுளியிலிருந்து கோட்டயம் செல்லும் வழியில் 94. கி.மீ தூரத்தில் வண்டிப்பெரியார் உள்ளது. அங்கிருந்து 12.8 கி.மீ. தூரம் சென்றால் சபரிமலையை அடையலாம். 3.சாலக்கயத்திலிருந்து சபரிமலை செல்வது தான் மிக எளிதான வழி. சாலக்கயத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. ப

Tiruvannamalai Thirukarthigai Deepam tirunalil jothi etruvathu yar | திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் திருநாளில் ஜோதி ஏற்றுவது யார்?

படம்
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் திருநாளில் ஜோதி ஏற்றுவது யார்? அந்த உரிமை அவர்களுக்கு எப்படி கிடைத்தது? தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை அண்ணாமலையில் ஏற்றுவதுதான் எத்தனை பாக்கியம்! நினைத்தாலே மெய் சிலிர்க்க செய்யும் இத்திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றும் பெருமையை பெற்றிருப்போர் பருவத ராஜகுலத்தினர். திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள் அவர்கள். திருவண்ணாமலை நகரில் மட்டும் அவர்களின் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர். இறைஜோதியை ஏற்றும் உரிமை இவர்களுக்கு எப்படி கிடைத்தது? பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தார் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் எ