இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலியுகமும், சந்திர ரேகையும்!

படம்
சித்தர்களின் தர்ம ஆட்சி மீண்டும் பூமியில் ஏற்பட போகர் மீண்டும் பூமிக்கு திரும்பி வர போகிறார். நம்பிக்கை இல்லையானால் முற்றாக இன்று சித்தர்களின் குரலில் இந்த பதிவை படியுங்கள். உங்களுக்கே புரியும். கலியுகமும், சந்திர ரேகையும்! ************************************ சமீபத்தில் எனது புத்தக அலமாரியை ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது... அநேகமாய் அழிந்து விட்ட நிலையில் இருந்த நூலொன்று கிடைத்தது. புத்தகத்தின் பெரும் பகுதி அழிந்துவிட்ட நிலையில் மிச்சமிருந்த நூலின் பாடல்களை சேகரிக்க முயற்சித்த போது, அது கோரக்க சித்தர் அருளிய ”சந்திர ரேகை” என்று தெரிந்தது. என்னிடம் இருக்கும் இந்த புத்தகம் 1826ம் ஆண்டில் அச்சில் பதிப்பிக்கப் பட்ட நூல். இன்றைக்கு அந்த நூல் முழுமையான வடிவில் பல இடங்களில் கிடைக்கிறது. நாம் வாழ்ந்து வரும் இந்த கலியுகத்தின் பிறப்பு முதல் கடைசிவரையிலான நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னென்ன நிகழ்வுகள் நிகழும் என்பதை என்றைக்கோ கோரக்கர் தனது நூலில் விவரித்திருப்பது ஆச்சர்யமான ஒன்று. இந்த நூலில் நான் சேகரித்த சில பாடல்களையும் அதன் தெளிவுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். க

கண்ணபிரான் மீது குற்றம் சாட்டினார் உதங்க முனிவர்.

படம்
மகாபாரதப் போர் முடிந்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணர் துவாரகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உதங்க முனிவர் எதிர்பட்டார். அவர் கண்ணனை வணங்கி, “நலமா?” என்று விசாரித்தார். “உலகில் எல்லாரும் நலமாக இருந்தால், நானும் நலமாகவே இருப்பேன்” என்று கூறினார் கண்ணபிரான். அதைக் கேட்டதும் உதங்கரின் குரலில் கோபமும் ஆதங்கமும் எட்டிப் பார்த்தன. “அது எப்படி எல்லோரும் நலமாக இருக்க முடியும். குருசேத்திரப் போரில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள். அதற்குத் தாங்களும் தானே காரணம்?” என்றார். கண்ணன் புன்னகை தவழும் முகத்துடன், “நான் யாருடனும் போரிடவில்லை. யாரையும் தாக்கவில்லை. பின் எப்படி இறப்புகளுக்கு நான் பொறுப்பாக முடியும்?. மேலும் பிறப்பும், இறப்பும் இயல்பானது என்பது உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டார். “நீங்கள் போரிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் மனது வைத்திருந்தால் போரே நடைபெறாமல் தடுத்திருக்கலாம். ஒரு இறப்பு கூட இல்லாமல் தவிர்த்திருக்கலாம். இயல்பான இறப்பாக இருந்தால் சரி. ஆனால் இப்போது நடைபெற்ற இறப்பு அப்படியல்லவே!” என்று மீண்டும் கண்ணபிரான் மீது குற்றம் சாட்டினார் உதங்க முனிவர். அர்ச்சு

கடுவளி சித்தர்

படம்
கடுவளி சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் பாடிய பாடல் இது. "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும்.  ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது.  இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று "நா + லாறு மாதமாய்க்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக் கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கிறான்.  ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது.  இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டு

கண்ணகி வாழ்ந்த வீடு

படம்
மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.  'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன். மழை குறையத் தொடங்கியது. தாவார

அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்.

படம்
அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர். ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை ராமரின் சேவகனாகவே, முன்நிறுத்திக்கொண்டவர். ராமாவதாரம் முடிந்து போன நிலையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து, ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன்.  அவர் அமர்ந்திருந்த அகோபில தலமானது நரசிம்மமூர்த்தியின் அவதார தலம் என்பது குறிப்பிடத்தக்கது. தவத்தின் போது அனுமனுக்கு ஒரு ஆசை உண்டானது, தன் நெஞ்சில் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும், ராமச்சந்திரமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது.  வேறு என்ன ஆசை ஆஞ்சநேயருக்கு இருந்து விடப் போகிறது. அதே எண்ணத்துடன் ராமரை நினைத்து கண்ணை மூடி தியானித்துக் கொண்டிருந்தார். அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்தார் ராமபிரான். மேலும் தன் அன்புக்குரிய அடியவனான அனுமனுடன், சற்று விளையாடவும் நினைத்தார் ராமபிரான். அதன்படி அனுமனுக்கு காட்சி கொடுக்க அவர் முன் தோன்றினார். ஆனால் அந்த உருவத்தைப் பார்த்து அனுமன் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனெனில் அனுமன் முன்பு அவர் ராமபிரானாக காட்சி தருவதற்கு பதில், நரசிம்மமூர்த்தியாகவே தோன்றியிருந்தார்.  இதனால் மகிழ்வதற்கு பதிலா

Jeevasamadhis in Madurai district | மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

படம்
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் மாயாண்டி சுவாமிகள் அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி திருக்கூடல் மலையடிவாரம் சென்றால், இவரது ஜீவசமாதி உள்ளது. அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சீடர் அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் விலாசம் திருக்கூடல் மலை, புசுண்டர் மலை,  திருப்பரம்குன்றம், மதுரை -625005 சோமப்ப சுவாமிகள் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது, அருள்மிகு மூக்கையா சுவாமிகள் ஜீவசமாதி மதுரை மூக்கையா ஜீவசமாதி  மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.அவனியாபுரம் - திருப்பரம்குன்றம் சாலையில் இருந்து தியகராஜர் கல்லுரி செல்லும் சாலை திருப்பத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில் உள்ளது. mookaiya jeeva samadhi  அருள்மிகு மூக்கையா சுவாமிகள் ஜீவசமாதி அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள

Othimalai Murugan Thirukovil | ஐந்து முக முருகன் வீற்றிருக்கும் ஓதிமலை ஆண்டவர் கோவில்

படம்
ஐந்து முக முருகன் வீற்றிருக்கும் ஓதிமலை ஆண்டவர் கோவில் ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா! கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம். திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும். சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை. இங்கு பழைமையான முருகன் கோயில் உள்ளது. ஓதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து திருமுகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகப்பெருமானைத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு "ஆதிபிரம்ம சொரூபம்' எனப்படுகிறது. இத்திருக்கோயிலை 1800 படிகளைக் கடந்த பின்னரே அடையமுடியும். இந்தப் படிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளதால் மலை ஏறுவதற்குச் சற்றுச் சிரமமாகவே இருக்கிறது. வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும். இம்மலையின் அடிவாரத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. அங்கிருந்தே மேலே மலைக்குச் செல்லும் படிகள் ஆரம்பம் ஆகின்றன. புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை- மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறை ஊரில் இந்த மலை அமைந்துள்ளது. இது மிகவும் பழை

Piranmalai Kodunkundranathar Thirukovil | பிரான்மலை

படம்
பிரான்மலை / பறம்புமலை சின்ன கொடைக்கானல் அழகிய தோற்றம். சிவகங்கை மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தளம். பறம்பு மலை 10°14'38.44"N சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. "ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது பறம்புமலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்ன