இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குளிகை | குளிகன் நேரம்

படம்
`குளிகன்’ ... அது என்ன குளிகை நேரம்... யார் அந்தக் குளிகன்? `குளிகன் என்ற மாந்தன், சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வன்’ என்கிறது புராணம். குளிகனுக்கு, மாந்தி என்ற தங்கையும் உண்டு. குளிகனின் தாயார் ஜேஷ்டாதேவி `தவ்வை’ என்று தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறார். மூத்த தேவி, மாயை, ஏகவேணி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும், எளிய மக்களால் `மூதேவி’ என்றே இவர் அழைக்கப்படுகிறார். திருமகளான ஸ்ரீதேவியின் அக்கா என்பதால், இவர் `மூத்த தேவி’ எனப்பட்டார். குளிகை நேரம்... சுபச் செயல்களை செய்யலாமா?... வாங்க தெரிஞ்சுக்கலாம்...!! குளிகை நேரம்...!! 🌟  நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சரி. 🌟  குளிகை நேரம் என்றால் என்ன? யார் அந்த குளிகன். குளிகை நேரத்தில் நாம் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? தினந்தோறும் வரும் குளிகை நேரம் எப்போது வரும். இப்படி பல தகவல்களை இங்கு பார்ப்போம். 🌟  சூரியன் முதலான கிரகங்கள் ஏழிற்கும் ஏழு நாட்களின் பெயர் சூட்டினார்கள். ரா

எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம் | ஒன்னும் பிரயோஜனம் இல்லை

எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” – பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. அவர்களுக்கு மட்டுமல்ல பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று தெரி(புரி)யாதவர்களுக்காகவும் தான் இந்தக் கதை! படிப்பதோடு நின்றுவிடாமல் இது உணர்த்தும் நீதியை மறக்காமல் பின்பற்றி பலனடைவோமாக. ஒரு பரிகாரத் தலத்தில் பரிகாரம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள். அறியாமல் செய்த தவறுக்கு சகல வல்லமை படைத்த மன்னன் செய்த பிராயச்சித்தம் என்ன? ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பணத்தை செலுத்தினான். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது. ஏதோ ஒரு

63 சீடர்களுடன் ஒரு சித்தர் தலம்

படம்
63 சீடர்களுடன் ஒரே இடத்தில்  ஐக்கியமான ஒரு சித்தர் தலம் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது. சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார். முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்

இஷ்ட காமேஸ்வரி | Ista Kameswari Temple

படம்
நம் நியாயமான கோரிக்கைகளை, அபிலாஷைகளை நிறைவேற்றும் தேவி. ஸ்ரீ சைலக்ஷேத்ர வனத்தின் நடுவே பூமிக்கு அடியில் காட்சியளிக்கிறாள் இந்த அற்புததேவி. கோயில் காட்டுப் பகுதியில் புலிகள் சரணாலயத்தின் நடுவே இருப்பதனால் இங்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. ஒரு நாளைக்கு பத்து ஜீப்களில், தலா ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஜீப்களில் செல்வதற்கு முந்தைய நாளே பதிவு செய்து கொள்வது உசிதம். அடர்ந்த காட்டுப் பகுதி, முறையான சாலைகளோ, உணவுப் பொருட்களோ கிடையாது. காட்டுக்கு நடுவே இயல்பாக ஏற்பட்டுள்ள பாதைகள் வழியே 11 கி.மீ., பயணம். தூரம் என்னவோ 11 கி.மீ.,தான். ஆனால், செல்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகிறது. தண்ணீர், உணவுப் பொருட்கள், பூஜை சாமான்கள் எல்லாம் காட்டுக்குள் செல்வதற்கு முன் கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். காலையில் 9.30 மணிக்குதான் ஜீப்கள் காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஜீப்கள் நகரத் துவங்கியதும் நம் கண்முன் விரியும் இயற்கையின் அழகு நம்மை மெய்மறக்கச் செய்யும். ஆள் அரவமற்ற காடு, பருத்து, உயர்ந்து சூரியனையே மறைக்கும் மரங்கள், சட்டென்று நம் கண்முன் தோன்றும்

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

பர்வதமலை வரலாறு 3500 அடி உயரம் நம்ம ஊரு புகழ்பெற்ற பர்வதமலை (சிவன் கோயில்) *பர்வதமலை* திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வதமலை. இம்மலை மிகவும் தொன்மையானது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார்ஜுனரும் அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். சிவபெருமான் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல்காலடியை பர்வதமலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகச் செவிவழிச் செய்திகள் உள்ளன. மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான பச்சையம்மன் கோவில்... இந்தக் கோவிலின் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார்கள். இத்திருக்கோவிலில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி பக்தர்களுக்கு அருளாசி வழங்கு கிறாள். இவளை வணங்கி மலையேறினால் வீரபத்திரர், துர்க்கையம்மன், ரேணுகாதேவி, சப்தகன்னியர் போன்றோரை தரிசிக்கலாம். விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தால், மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும

நவராத்திரி விழா ஸ்பெஷல்

பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும் ! தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்கள் மிக அரிதுதான். இந்தத் திருநாமத்தில் அருள்பாலிக்கும் தலம் திருமீயச்சூர் திருத்தலம் மட்டுமே என்கிறார்கள் பக்தர்கள். சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்க ஹீனம் கொண்டவன். அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரைத் தரிசிக்கவேண்டும் என்பதே நீண்டகால ஆசை! சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான். சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான். அங்கே, மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன்தான் வாலி. இறைவனைத் தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதும் ஒருவரது அங்கக் குறைபாட்டை சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டு பாவங்களையுமே செய்தார்! திருகயிலாயத்தில்… சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். ‘மோகினிப் பெண்ணாகவா? உ

தமிழகத்தில் மூகாம்பிகை வீற்றிருக்கும் ஒரே ஆலயம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே திருவிடைமரூதூர் வீற்றிருக்கும் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது. வேறு எங்கும் இல்லை. தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் (பாபா கோவில் போல) அமைந்து விளங்குகிறது. இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, தோஷம் நீங்க இங்கு வந்து சிவனை வழிபட்டாள். சிவன் விமோசனம் அளித்ததோடு, திருமணம் செய்து கொண்டார். வைகாசி உத்திரத்தன்று இத்திருமணம் நடக்கும். இதற்காக மூகாம்பிகா 3 நாட்கள் தவம் இருப்பாள். அதற்காக அந்த சன்னதி அருகில் தனி மண்டபம் உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்கள்.

நமது நாட்டில் பெண் தெய்வங்கள் அதிகம் வணங்கப்படுகிறது. பெண் தெய்வங்களில் மிகவும் புகழ் பெற்ற தெய்வம் அம்மன். நம்முடைய தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த பல அம்மன் கோவில்கள் உள்ளன. அப்படி மிகவும் புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம். *1.மீனாட்சி அம்மன் திருகோவில் மதுரை* மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவில் வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் மனைவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே. *2.காஞ்சி காமாட்சி திருக்கோவில்* காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். *3.திருச்சி சமயபுரம் திருக்கோவில்* சமயபுரம் மாரியம்மன் கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி மாவட