இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாரநாடு கருப்பணசாமி

படம்
அரண்மனை அந்தப்புரம். அரசி, இளவரசி, சேடியர் தவிர வேறுயாரும் உள்ளே செல்ல முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. வேறுயாரேனும் உள்ளே தெரிந்தால் உடனடியாகத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அவ்வளவு கடுமையான தண்டனை. இராமநாதபுர சமஸ்தானத்தின் இளவரசி பருவமடைந்து அந்தப்புரத்தில் இருந்தாள். மறவர் குல மாணிக்கம் அவள். அழகு என்றால் அழகு அவ்வளவு அழகு. பார்த்தோரைப் பரவசப்படுத்தும் அழகு. மக்களுக்கு மகாலெட்சுமி போல் காட்சியளிப்பாள். இதனால், சமஸ்தான மன்னர்களுக்குள் கடும் போட்டாபோட்டி. அவளை மணந்து கொண்டால், இராமநாதபுர சமஸ்தானத்திற்கு மன்னனாகி விடலாம், வீரமிக்க மறவர் குலத்திற்குச் சொந்தமாகிவிடலாம். ஆளுக்கு ஆளும் ஆச்சு, பேருக்குப் பேரும் ஆச்சு, ஊருக்கு ஊரும் ஆச்சு. அதனால் "நான் நீ" என்று போட்டி போட்டுக் கொண்டு, பெண் கேட்டுத் தூது அனுப்பிக் கொண்டிருந்தனர். அரசனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. நல்லவனாக, வல்லவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். பெண்கேட்டுப் போட்டாபோட்டி போட்டதால், அரசனுக்குக் கொஞ்சம் பெருமையும் கூடியது. தன் பெண்ணை எண்ணிப் பூரிப்படைந்திருந்தான். ஆனால், விதி