இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதாஷ்டமி ஸ்பெஷல்

எந்த மாதத்திலாவது பெளர்ணமிக்கு பிறகு அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் புதன் கிழமை அன்று அஷ்டமி திதியும் வருமானால் அது புதாஷ்டமி விரதம், அல்லது சற்கதி விரதம் என பெயர்படும். அன்றைய தினம் விரதம் தொடங்க வேண்டும். வெல்ல பாகு மட்டுமே சிறிதளவு உட்கொள்ள வேண்டும். உள்ளங்கையிலே கடைசி மூன்று விரல்கள் கவரும் அளவை போல எட்டு பங்கு சாதம் தான் அவன் உட்கொள்ள வேண்டும். மாவிலையை தைத்து அதன் மேல் சாதத்தை கொட்டி , தர்பையால் கிளறி ஆற விட வேண்டும். அம்பிகையை பரிவாரங்களோடு பூஜிக்க வேண்டும். கற்கண்டினால் கலந்து தயாரிக்க பட்ட அன்னத்தை தானம் அளிக்க வேண்டும். விரத கதையை பக்தியுடன் கேட்க வேண்டும். புதாஷ்டமி - அக்னி புராணம் 218 ம் பக்கம் உள்ள கதை. ஒரு சமயம் தீரன் என்னும் அந்தணன் வசித்து வந்தான். அவனது மனைவி ரம்பை . மகன் கெளசிகன், மகள் விஜயை. அவனிடம் ஒரு எருது இருந்தது. அதன் பெயர் தனதன். ஒவ்வொரு நாளும் மகன் கெளசிகன் மற்ற பசுக்களுடன் தனது எருதையும் மேய்த்து வர ஓட்டி செல்வான். ஒரு நாள் அவன் கங்கையில் நீராடிக்கொண்டிருக்கும் போது திருடர்கள் அங்கு வந்து எருதை கவர்ந்து சென்று விட்டனர். அவன் சகோதரி விஜையையும் அவனும் எருதை தே

தேவ இரகசியம்

ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருந்தாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி “அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்றான். இந்த எமதூதன் “ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக் கொண்டு போய் விட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று தாயின் உயிரைக் கவராமல் திரும்பி விட்டான். நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை, அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். எமதூதன் அந்த குழந்தைக்கு வேறு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய் விட்டான். ஆனால், எமராஜாவோ, “இதோ பார். உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை. கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்பதும் உனக்குத் தெரியவில்லை. அது தெரிகிற வரைக்கும் நீ பூமியில் போய் கிட” என்று கூறி அவனைத் தூக்கி பூமியில் போட்டு விட்டார். அவன் கன்னங்கரேலென்ற உருவில் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கிடக்க, அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன், “என்ன இது, இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே” என்று அவனைப் பார்த்து பரிதாபப்பட

மிருத்யுஞ்ஜய மந்திரம் மரணத்தை வெல்வார்

படம்
சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார். இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது. மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப்படுகிறது. எவர் ஒருவர் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார். அதாவது மரணத்தை வெல்வார்..... மிருத்யுஞ்ஜய மந்திரம்: ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம் பொருள்: நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அத

வியப்பின் உச்சம் மன்மதன் சிலை

படம்
இந்த மன்மதன் சிலையில் 6 அடியில் வில் உள்ளது. அந்த வில்லின் மேல் பகுதியில் உள்ள சிறு துளையின் வழியாக கடுகை போட்டால், அந்த கடுகு வில்லில் புகுந்து கீழே வந்து விழுகிறது. எந்த ஒரு தொழில்நுட்ப வசதியும் இல்லை, துளையிடும் கருவிகளும் இல்லாத காலத்தில், சிறு கடுகு செல்லும் அளவிற்கான துளையை போட்டிருக்கிறார்கள். இந்த துளையை எப்படி போட்டிருப்பார்கள்..?? அந்த கல்லின் மேல் பகுதியில் செதுக்கி விட்டு அதில் தேன் மற்றும் வெல்லத்தை வைத்திருப்பார்கள். தேன் மற்றும் வெல்லத்தால் ஈற்கப்படும் எறும்புகளை வைத்து தான் கடுகு செல்லும் அளவிற்கான துளையை உருவாக்கியிருக்கிறார்கள். யோசித்து பாருங்கள் சிற்பிகளின் புத்திகூர்மையை. ஒரு சிற்பம் பற்றியுள்ள வளைவான வில்லின் ஒரு முனையில் ஒரு குண்டூசியோ, அல்லது கடுகை போட்டால் மற்றோரு முனை வழியாக தரையில் விழுவது சிற்பிகளின் திறமைக்கு வலுவான சான்றாகும். இன்று இந்த சிற்பம் சற்று சிதைந்தும் வில்லின் ஒரு பகுதி பழுதுபட்டும் காணப்படுகிறது. இடம்: கிருஷ்ணாபுரம் வெங்கடாச்சலபதி_கோவில், திருநெல்வேலி மாவட்டம்

வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில்

படம்
அன்று பொன்னிறமான நெற்கதிர் அலங்காரம். அதில் அந்த மண்டபமே காணப் பொன்மண்டபமாக மாற்றியிருந்தது. பொன்னுக்கு நடுவில் மற்றொரு பொன்னாக அழகர் வீற்றிருந்தார். அழகர் தரிசனம் காண எண்ணிலடங்கா மக்கள் கூடிவிட்டனர். கூட்டம் எல்லை மீறுகிறது மக்கள் பக்தியிலும் மகிழ்ச்சியிலும் குதூகலிக்கிறார்கள். வெற்றுக் கூச்சல்கள்தானா அல்லது உள்ளார்ந்த அர்ப்பணிப்பு இவர்களுக்கு உள்ளதா என்று சோதிக்கப் பெருமாள் திருவுளம் கொண்டார் போலும்... மண்டபத்தில் தீ பற்றியது. காய்ந்த கதிர்கள் சடசடவெனப் பற்றிக் கொள்ளக் கேட்க வேண்டுமா... மொத்த மண்டபமும் தீப்பிழம்பின் பிடிக்குக் கணத்தில் மாறிவிட்டது. அரசர் முதற்கொண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் திகைத்தனர். இதுகாறும், 'கோவிந்தோ... அழகா' என்று சிலிர்த்தவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்தனர். அப்போது அங்கு ஒரு மனிதர் தீக்குள் பாய்ந்தார். பெருமாளைத் தன் கரங்களால் அள்ளி எடுத்தார். தீ அவர் முதுகில் படரத் தொடங்கியது. ஆனால், அது பற்றிய அக்கறை இன்றிப் பெருமாளைத் தூக்கிக்கொண்டு வெளியே மணல்வெளியில் பாய்ந்தார். மக்களும் மன்னரும் ஓடிவந்து பார்த்தனர். அந்த மனிதர் கீழே கிடக்கிறார். அவர் மார்ப

ப்ராணயாமம் என்னும் மூச்சுக்கலை

படம்
உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த சுவாசம்தான் வாழ்க்கை. இந்த உண்மையை நாம் அறிந்திருக்கும் அளவுக்கு அதை உணரவில்லை என்பதே உண்மை. ப்ராணன் என்றால் மூச்சு, யாமம் என்றால் ஒழுங்கு செய்தல் ஆகும். யோக நெறியில் நான்காவது படிநிலையாக ப்ராணயாமத்தை பதஞ்சலி முனிவர் அருளியிருக்கிறார். இந்த மூச்சு நமது உடலில் மூன்று கட்டமாய் நிகழ்கிறது. மூச்சை உள்ளே இழுத்தல், இதனை "பூரகம்" என்கின்றனர். மூச்சை உள்ளேநிறுத்துதல், இதனை "கும்பகம்" என்கின்றனர். மூச்சை வெளியேற்றுதல், இதனை "ரேசகம்" என்கின்றனர். இந்த மூன்று செயல்களும் தொடர்ந்து சீரான தாள கதியில் நம்முடலில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளின் ஊடே செய்யப் பட்ட பல்வேறு பரிசோதனைகளின் திரளே ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை. நவீன அறிவியலின் படி நமது உடலில் ஒரு நிமிடத்தில் 15 முதல் 20 முறை சுவாசம் நடக்கிறது. உறங்கும் போது இதன் அளவு 10 முதல் 12 ஆக குறைகிறது. ஆழ்நிலை தியானம் போன்றவைகளைச் செய

ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் பெரும் புண்ணியம்

படம்
ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் பெரும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம். மகாபெரியவரின் நினைவு நாளும் அதே துவாதசி திதியில் வந்திருக்கிறது. எவ்வளவு ஒற்றுமை. காஞ்சிமகாப் பெரியவர் 1907ம் ஆண்டு, தனது 13ம் வயதில் சந்நியாச வாழ்வை ஏற்றுக் கொண்டார். ஒருவர் சந்நியாச வாழ்வை ஏற்றபின் தாயைப் பார்க்கக் கூடாது என்பது விதி. அதன்படி மகா பெரியவரும் தன் தாயாரிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. 1932ல் ஆந்திராவில் சித்தூர் அருகிலுள்ள நகரி என்னும் ஊருக்கு பெரியவர் விஜயம் செய்திருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து ஒரு தந்தி காஞ்சிபுரத்திலுள்ள மடத்து நிர்வாகிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் மகா பெரியவரின் தாயாரான மகாலட்சுமி அம்மையார் சிவபதம் அடைந்த செய்தி இடம் பெற்றிருந்தது. தந்தியுடன் சித்தூர் வந்த மடத்தின் நிர்வாகியைக் கண்டதுமே மகா பெரியவர், "கும்பகோணத்தில் இருந்து தந்தி வந்திருக்கிறதா?'' என்று கேட்டார். "ஆம் சுவாமி'' என்ற நிர்வாகியிடம் மேற்கொண்டு மகா பெரியவர் அதைப் பற்றிக் கேட்கவில்லை. அப்போது மகா பெரியவருடன் உரையாடிக் கொண்டிருந்த சில பண்டிதர்கள் தந்தியைப் பற்றி அறிய முயன்றன

தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்!

படம்
இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் நிகழ்கிறது. பெங்களூரில் இருந்து சுமார் 350 கி. மீ தூரத்தில் உள்ள ஹம்பி என்னும் இடத்தில் அமைந்துள்ளது விருபாட்சர் கோயில். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலின் ராஜ கோபுரம் சுமார் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலை கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. நிழலானது தலைகீழாக விழவேண்டுமானால் அதற்கு கண்ணாடி போன்று ஏதாவது ஒன்று நிச்சயம் தேவை படும். ஆனால் எதுவுமே இல்லாமல் இந்த கோவிலின் நிழல் எப்படி தலை கீழாக விழுகிறது என்பதை எவராலும் அறிய முடியவில்லை. உள்ளூர் மக்கள் இதை இறைவனின் அருள் என்றும், அறிவியலாளர்கள் இதை கட்டிட கலையின் நுணுக்கம் என்றும் கூறுகின்றனர்.மேலும் சில விஞ்ஞானிகள், கோபுரத்திற்க்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்

ஒரு படைவீடு மட்டும் எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல்

படம்
ஐப்பசி மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா, கந்த சஷ்டிப் பெருவிழாதான். ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறுநாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும். முருக பக்தர்கள் அனைவரும் விரதம் அனுஷ்டித்து, சதா சர்வ காலமும் முருகப்பெருமானின் நினைவிலேயே லயித்திருப்பார்கள். முருகப்பெருமானின் துதிப்பாடல்களைப் பாடுவதும், அவன் குடியிருக்கும் ஆலயங்களைத் தேடித் தேடிச் சென்று தரிசிப்பதுமாக முருகன் நினைவிலேயே நாளும் பொழுதும் தங்களைக் கரைத்துக்கொண்டிருப்பார்கள். சஷ்டியின் நிறைவு நாளான ஆறாவது நாள், உணவும் நீரும் இல்லாமல் சிரத்தையுடன் விரதம் இருந்து, அன்று மாலை சூரபத்மனையும் அவனுடைய சகோதரர்களையும் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் அற்புதத்தைக் கண்டு மகிழ்வார்கள். அப்போதே அவர்களுடைய மனங்களில், 'இனி தங்கள் வாழ்க்கையில் தொல்லைகளும் துன்பங்களும் தொடராது; தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது' என்ற எண்ணம் ஏற்பட்டு, முருகப்பெருமானை பக்திப் பெருக்குடன் வழிபட்டு, மறுநாள் காலை விரதத்தை நிறைவு செய்வார்கள். அனைத்து முருகத் தலங்களி

கர்நாடகா மாநிலம் மகதி அருள்மிகு ஶ்ரீசோமேஸ்வரர் திருக்கோயில்

படம்
இந்த திருத்தலம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரூவிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் மகதி எனுமிடத்தில் அமைந்துள்ளது. சோலூர் 18 கி.மீ.தூரம் யஷ்வந்த்பூர் 50 கி.மீ.தூரம் பேரூந்து வசதி தனியார் வாகன வசதி உள்ளது. இறைவன் திருநாமம் : ஶ்ரீசோமேஸ்வரர்சுவாமி இறைவி திருநாமம் : ஶ்ரீபார்வதிதேவி மிகப் பெரிய நிலப்பரப்பில் நிறைய மண்டபங்களுடன் இத்திருக்கோயில் நிர்மானிக்கபபட்டுள்ளது. மண்டபங்கள் சிலது முகலாயர் படையெடுப்பில் இடிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள கோயிலில் பழுது நீக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது. சிற்பக்கலை கோயில் மண்டபங்களிலும் சுவர்களிலும் அருமையாக உள்ளது. 3 அடி உயரமான மூலவர் திருமேனியில் ஶ்ரீசோமேஸ்வரர் சுவாமி அருள் புரிகிறார். எதிரில் மண்டபத்தில் நந்திகேஸ்வர சுவாமியை காணலாம். 5 அடி உயரத்தில் ஶ்ரீபார்வதிதேவி மூலவருக்கு பக்கத்து சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஶ்ரீசத்யநாராயண சுவாமியும் இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தரிசன நேரம் : காலை 9 மணி முதல் 12 வரை  மாலை 6 மணி முதல் 8 மணி வரையும்   சனி, ஞா

ஸந்தாத்ரே நமஹ

படம்
ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார். “இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன். அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன். அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை. “தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது. இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன் சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர். இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை. மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.

நயினாதீவு நாகபூசணி அம்பாளின் தல வரலாறு

படம்
நயினாதீவு நாகபூசணி அம்பாளின் தல வரலாறு நயினையம்பதியிலே உறைந்திருக்கும் நாகபூசணி அம்பிகையை நாகம் பூசித்த வரலாறு அற்புதமானது. அனாதியானது. நாகபூசணி என்ற நாமகரணம் நாகம் பூசித்து வழிபாடு இயற்றியமையால் அம்பாளுக்கு ஏற்பட்டது என்பது வரலாறு. நாகபாம்பு ஒன்று நயினாதீவுக்கு வடக்காக அமைந்துள்ள புளியந்தீவிலிருந்து நாள் தோறும் பூக்களை எடுத்து வந்து அம்பாளை வழிபடுவதையே வழக்கமாக கொண்டிருந்தது. வழமை போலவே ஒருநாள் பூவை எடுத்து வருகின்ற வழியில் கருடனை தற்செயலாக சந்தித்தது. கருடன் தன்னுயிரை பறிக்கப்போகும் உண்மையை உணர்ந்தும் கொண்டது. அவ்விதமே கருடனும் நாகத்தின் உயிரை பறிப்பதற்கு முயற்சித்தது. இந்த சந்தர்ப்பத்தில் நாகம் பய உணர்வின் மேலீட்டோடு கடல் நடுவே இருந்த மிகப்பெரிய கல்லின் மீது தனது உடல்முழுவதையும் சுற்றிக்கொண்டது. கருடனும் இன்னொரு கல்லில் அமர்ந்த படி நாகத்தின் உயிரைப் பறிப்பதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. அந்த சந்தர்ப்பத்திலே கடல் வழியாக மரக்கல் ஒன்றிலே பண்டங்களை ஏற்றி வந்த வணிகன் இக்காட்சியை கண்டான். நாகத்தின் மீது கருசனை கொண்டுஅதனை காப்பாற்ற முயற்சித்தான். நாகத்தை கொன்று விடாதே என க