இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யார் சத்தியம் செய்தது அந்த கிருஷ்ணனின் விளையாட்டுதான்

படம்
மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது.. சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேககம், சந்தோஷத்தின் எதிரி. இதற்கு மஹாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது. கவுவரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான். யுத்தம் வந்தால், கவுரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என, பரமாத்மாவுக்கு தெரியும். அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான். அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான். அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான். அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது.

இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்தே நிற்கும்

ஒரு வீட்டு வாசலில் யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்... அம்மா... தாயே... ஏதாவது தர்மம் பண்ணுங் கம்மா ! அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்து பார்த்தாள். அங்கே வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த, தனது ஐந்து வயது மகளை அழைத்து, அவளது கைகளால் அரிசியை, அள்ளி கொடுத்து, யாசகனின் பாத்திரத்தில் இட சொன்னாள். பெற்று கொண்ட யாசகனும், பக்கத்து வீட்டுக்கு சென்று பிச்சை கேட்க சென்றான். அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தனது மகளை கூப்பிட்டு, அவளது கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள். காலங்கள் உருண்டோடின.. இரண்டு பெண்மணி களுக்கும் வயது முதிர்ந்து போனது. இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர் களாகினர்... அவரவர்கள் தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன... ஒரு நாள், அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர். அங்கே, அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது.. மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது. உடனே, அவள்... இறைவனிடம் பதறிக் கதறியே முறையிட்டாள். இருவருமே, ஒரே மாதிரி தானே, தானம் செய்தோம், எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம், ஏற்ற இ

வெற்றி அடைவது, தோல்வி பெறுவது

படம்
வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? 'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம். யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள். அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான். பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாமோதரன் எனும் திருநாமம் உண்டு. தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத்தான் நாம் அறிவோமே! இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புக் கயிற்றுக்குக் கட்டுண்டு கிடந்தான். கயிற்றை எடுத்து

சேனா - கிருஷ்ண பகவான் பக்தியில் சிறந்தவன்

படம்
அவந்திபுரம் எனும் ஊரில் வாழ்ந்தவன் சேனா; கிருஷ்ண பக்தியில் சிறந்தவன். அரண்மனையில் பணி புரிந்த சேனா… மன்னரின் உடலில் எண்ணெய் தேய்ப்பது, அவரின் உடம்பை மென்மையாகப் பிடித்து விடுவது போன்ற பணிவிடைகள் புரிந்து வந்தான். இதற்காக அரசர், அவனுக்கு மானியம் கொடுத்திருந்தார். தவிர, சில விசேஷ நாட்களில் கூடுதலாக வெகுமதிகள் வழங்குவதும் உண்டு. நாட்கள் ஓடின. ஒரு கட்டத்தில்… அரசருக்குப் பணிவிடை செய்வது போக மற்ற நேரங்களில், கிருஷ்ணர் வழிபாட்டில் நாட்டம் செலுத்தினான். நாளாக நாளாக அவனது பக்தி அதிகரித்தது. சேனா, மன்னனின் நல் அபிப்பிராயத்தையும் பெற்றிருந்தான். இது, சேனாவுடன் பணிபுரியும் ஊழியன் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ‘சேனாவைப் போலவே தானும் மன்னரின் அபிமானத்தைப் பெற வேண்டும். அவரிடம் பொன்னும் பொருளும் பரிசு பெற வேண்டும்!’ என எண்ணினான். ‘அரண்மனையில் இருந்து சேனாவை வெளியேற்றினால் தான் தனது விருப்பம் பூர்த்தியாகும்’ என்று கருதியவன், அந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தான்! இந்த நிலையில், அரசருக்கு எண்ணெய் தேய்த்து விடும் நாட்கள் குறித்த கால அட்டவணை ஒன்றைத் தயாரித்து சேனாவிடம் வழங்கியிருந்தார்

சுயநலமற்ற ஏழைக் கிழவியின் பக்தியை

படம்
அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம் பதறியது. அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை? நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக்கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால் கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம். எத்தனையோ நாட்களாக இப்படி நடந்து கொண்டிருக்கிறது! யாரிடம் போய்ச் சொல்வது இதை! பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே! யார் உள்ளே வந்து இப்படி செய்கிறார்கள்? அர்ச்சகர் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தவாறே "கண்ணா! என் பக்தியில் ஏதும் கோளாறா? கோயில் பூட்டுக்கு வேறு சாவி கூடக் கிடையாதே! அதையும் வீட்டில் என் தலைமாட்டில் வைத்து தான் தூங்குகிறேன். அப்படியிருக்க, எப்படி இவ்வாறு நடக்கிறது? உனக்கு நாள்தோறும் சந்தனக் காப்புச் சாத்துகிறேன். காலையில் வந்துபார்த்தால் உன் காதோரத்தில் கொஞ்சம் பசுஞ்சாணம்! ஏன் இப்படி?'' என்று அரற்றினார். அபிஷேகத்தை முடித்து, கண்ணனுக்கு அலங்காரம் செய்தார். மக்கள் கோயிலுக்கு வரத்

இராமயணத்தில் கைகேயியின் பெரிய தியாகம்

படம்
இராமயணத்தில் கைகேயியின் பெரிய தியாகம் தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது. இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீஇராமரால் அனுப்பப்பட்டார். அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். பரதனும், “ஸ்ரீஇராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ.” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். “ஸ்ரீஇராமனை

மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம்

சிவபக்தன் ஒருவன், மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்தான். அவனது ஆயுட்காலம் முடிந்ததும், சிவ கணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர். மண்ணில் வாழும் காலம் வரைக்கும் பக்தனை விட்டு விலகாமல், தான் உடனிருந்ததை தெய்வீக சக்தியால் எடுத்துக் காட்டினார் சிவன். கடந்து வந்த பாதை எங்கும் அவனுக்கு பின்னால் இரண்டு பாதங்களின் தடம் இருப்பதைச் சுட்டிக் காட்டிய சிவன்,“பக்தனே... எப்போதும் உன் பின்னால் நான் தொடர்ந்து வந்ததைப் பார்” என்றார். உன்னிப்பாக பார்த்த அவனுக்கு மகிழ்ச்சியை விட கவலை மேலிட்டது. “ஏன் கவலைப்படுகிறாய் மகனே...” என்றார் சிவன். “சுவாமி....தாங்கள் சொல்வது உண்மை என்றாலும், சில இடங்களில் எனக்கு பின்னால் உங்களின் காலடிச் சுவடு தெரியவில்லை. அந்த காலம் நான் துன்பப்பட்ட நேரமாக இருந்ததை என்னால் உணர முடிகிறது. மகிழ்ச்சியில், உடனிருக்கும் நீங்கள் துன்பத்தில் காணாமல் போனது நியாயமா? இதற்காகவா நான், இமைப்பொழுது கூட மறக்காமல் தினமும் பக்தியுடன் சிவபுராணம் படித்தேன்” கேட்டான். அதைக் கேட்டு பலமாக சிரித்தார் சிவன். “அட...

ஒரு நாள் உண்ணா விரதம்

குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார். அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று. அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தி

பஞ்சபாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலியின் உயிர்பிரிதல்

படம்
வேடன்   ஒருவன் ஹஸ்தினாபுரத்தில் வந்து கிருஷ்ணன் இறக்கும் தருவாயில் இருக்கிறார். பஞ்ச பாண்டவர்களான தங்களைக் காண விழைகிறார் என்றான். தர்மர்  பணி நிமித்தமாக இருந்ததால் கிருஷ்ணனைக் காண செல்ல மாட்டார். கிருஷ்ணனைக் கண்டால் தொட்டுப் பேச வேண்டாம் என தம்பிகளிடம் தர்மர் சொல்லி அனுப்புவார். கிருஷ்ணனைக் கண்ட பார்த்தன் கண்ணீரை அருவி போலக் கொட்டிக் கதறி அழுதான். அனைத்துமாய்  உள்ள பரமாத்மாவான உனக்கே இந்தக் கதியா பரந்தாமா என்றான் அர்ஜீனன். என்னைக் கை தூக்கி உட்கார வையுங்கள் குந்தியின் புதல்வர்களே என்றார் மாயக் கள்வன் கிருஷ்ணன். அண்ணன் சொன்னது நினைவுக்கு வரவே யாரும் அவரைத் தீண்டவில்லை. எழுந்து உட்கார வேண்டும் என்பதற்காக அவரவர் ஆயுதங்களை நீட்டினர். அதைப் பிடித்து அதன் வழியாக அனைவரிடமும் இருந்த சக்திகளையும் பெற்று விட்டு உயிரைப் பிரித்துக் கொள்கிறார். சக்தி  அனைத்தும் பறிபோனதால், பராக்கிரமசாலியாக இருந்த அவர்கள் காட்டில் இருக்கும் சிங்கம் புலி மிருகங்களைக் கண்டு அஞ்சுகின்றனர். ஹஸ்தினாபுரம் வந்து நடந்ததை எல்லாம் தர்மரிடம் சொல்கின்றனர். அவர் இவர்கள் அனைத்து சக்தியையும் இழந்ததை அறிந்து கொள்கிறார். என