இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரை ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான

படம்
மதுரை ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு உண்மையான காதல் கதையும் உண்டு. அதில் நிகழ்ந்த துரோகமும், அக்கதையின் நாயகி உடன்கட்டை மரணமும் நம்மை உலுக்குகின்ற ஒன்றாகும . மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்கின்ற செல்வந்தர்.  அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினான். நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார். கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய

Mahadevashtami Annadanam ceyyunkal. | மஹாதேவாஷ்டமி அன்னதானம் செய்யுங்கள்.

படம்
கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம். இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன? பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, முருகனை உருவாக்கினார். முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விட்டார். நியாயத்துக்காக செய்த கொலையானாலும், பாவம் வந்து சேரும்.  அந்தப் பாவத்திற்கு பரிகாரம் தான், அன்னதானம். சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர். இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோவில் வரலாறு கூறுகிறது. இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதை, 'வைக்கத்தஷ்டமி' என்பர். இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந

காமாட்சி அம்பாள் கும்பாபிஷேகம்

படம்
1944, பிப்ரவரி 7ம் தேதி காமாட்சி அம்பாள் கும்பாபிஷேகம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது... மகா பெரியவா, கும்பகோணத்திலிருந்து ஜனவரி 27ஆம் தேதி காஞ்சீபுரம் வந்தடைந்தார்.. கும்பாபிஷேகத்திற்கு சரியாகப் பத்து நாள் இருந்தபோது மகா பெரியவா காமாட்சி கோவிலுக்கு வந்து திருப்பணிகளை மேற்பார்வை செய்து விட்டு , குளக்கரையில் அமர்ந்து அம்பாள் விமானத்தைப் பார்த்தார்... விஜயநகர சக்கரவர்த்தியாக இருந்த ஹரிஹர மன்னன் சாலிவாகன சகாப்தம் 1 315 இந்த அம்பாள் விமானத்தைத் தங்கத் தகடு வேய்ந்து கும்பாபிஷேகம் செய்ததாக கல்வெட்டும், பட்டயங்களும் தெரிவிக்கின்றன.. 1840, விகாரி வருடம் தை மாதம் 10 ம் தே‌தி புதன்கிழமை காமகோடி பீட 64வது ஆச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தார்.. அதற்குப் பிறகு சுமார் நூறு வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறாததால் தங்க மூலம் கரைந்து இருந்தது... பொருளாதார வசதி போதாததால் 1944 கும்பாபிஷேகத்தில் செப்பு முலாம் பூசப்பட்டது... இதைக்கண்ட மஹாபெரியவா," நூறு வருடம் கழித்து கும்பாபிஷேகம் செய்கிறோம்.. ஆனால் தங்க விமானம் ஆக இருந்ததை செப்பாகச் செய்யலாமா?" என்று வினவினார்.. செப்புத் தகட்டை எடுத்து தங்க முலாம் பூச

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதால் கிடைக்கும் பலன்கள்

படம்
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதால் கிடைக்கும் பலன்கள் பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால், திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் - வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் - மலை என்றும் பொருள். எனவே, அருணாச்சலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும்... மாறி வந்துள்ளது. எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை... இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம்... தேவாரத்தில் புகழப்படும், ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை கிரிவலப்பாதையில் தான் அமைந்துள்ளது..

Alwarkurichi Athrimalai Gorakanath Temple | ஆழ்வார்குறிச்சி அத்ரிமலை கோரக்கநாதர் ஆலயம்

படம்
ஆழ்வார்குறிச்சி அத்ரிமலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் ஒருவர் ‘அத்ரி மகரிஷி’. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு ‘அத்ரிமலை’ என்றும் பெயருண்டு. திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி தபோவனத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம். அத்ரியின் முதன்மை சீடராக விளங்கிய கோரக்கர், பதிணென் சித்தர்களில் ஒருவராவார். இங்குள்ள மலையில் இன்றும் கோரக்கர் உலாவருவதாக நம்பப்படுகிறது. அதனால் ‘கோரக்கர் மலை’ என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது. (கோ+இரக்கன

sabarimalai seven amsangkal | சபரிமலையின் ஏழு அம்சங்கள்...!

படம்
சபரிமலை, எழில் மிகுந்த புனித பூமியாகும்.  இத்தகைய திருத்தலத்திற்கு யாத்திரை சென்று, தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை ஏழு அம்சங்களை கொண்டு திகழ்கிறது. சபரிமலை : பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில் சபரிமலை சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தியன்று ஜோதி உருவாய் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் காட்சி தந்து அருள்கிறார். பம்பை : பம்பை நதிக்கரையில் முனிவர்கள், குடில்கள் அமைத்து யாகம் செய்திருப்பதாக புராண வரலாறு கூறுகிறது. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாகும். இன்றும் ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்வதைக் காணலாம். மகிஷன் : ரம்பாசுரனின் மகனாக பிறந்த மகிஷன் தவம் மேற்கொண்டு, பிரம்மனிடம் அரிய பல வரங்களை பெற்றான். அதனால் விளைந்த ஆணவத்தால் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பராசக்தியை வேண்டினர். பராசக்தி, மகிஷனிடம் போர்புரிந்து அவளை வதைத்தாள். அதனால் பக்திமார்க்க தர்மயுத்தம் நடந்த பலி பூமியா

Parvathamalai | பருவதமலை

படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது. இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம். சிறப்புகள் பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜ

சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம்

சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை. பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரியாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு. ஸாக்ஷாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் கூட மஹத்துவம் உண்டு. பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்த்ரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது. ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்த

குருவாயூர் அப்பனின் நாராயணியம் உருவான அருமையான வரலாறு.

படம்
அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே. மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.  கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு. ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார். அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்

ஹரிவராசனம் விஸ்வமோகனம் அத்தாழப்பூஜை முடிந்த பின் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கும்

படம்
சபரிமலையில் ஐயப்ப சாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறக்கப்பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்த பாடலை இயற்றியவர் தமிழகத்தை சார்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர், இவர் 1920 ஆம் வருடம் இந்த பாடலை இயற்றினார். இவர் திரு நெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி எனும் ஊரில் பிறந்தவர் ஆவார். கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்த ஹரிவராசனம் கீர்த்தனம். இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார்.. ஒவ்வொரு வரிகளும் அய்யப்ப சாமியே அருளியதுபோல இருந்ததாக அவர் கூறியுள்ளார். இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டபட்டாலும் இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோர்க்கும் இல்லாதவர்களுக்கு உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். அப்போது புலிபாலை தேடி வந்த ஐயப்பன் மிகவும் களைப்புடன் இருந்தமையால் அந்த குடும்பத்தைபற்றி கேள்விபட்டு வந்து உணவு கேட்டுள்ளார். உனவு ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த கம்பு தானியத்தை கூழாக செய்து உணவளித்தனர். அதனாலதான் அவர்களது குடும்பம் கம்பங்குடி என அழைக்கப்பட்டது. அந்

மூன்று வேளையும் நிறம் மாறும் பழமை வாய்ந்த சிவலிங்கம்

படம்
மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்... இன்று வரை துலங்காத மர்மம்! இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது. தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின் பெயர் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். இந்த லிங்கமானது காலை, நண்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில்காட்சியளிக்கிறது. இந்த அதிசயமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது. காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் , நண்பகலில் காவி நிறத்தில்காட்சியளிக்கிறது, இரவில் கருப்பாக காட்சியளிக்கிறது. மீண்டும் காலையில் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில் இரவெல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கும் இறைவன் பகலில் சிவப்பு நிறத்தில் மாறி பக்தர்களை ஆசிர்வதிப்பதாக நம்புகின்றனர். மேலும் இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது , இந்த சிவலிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இ

Siddha Samadhi | சித்தர்கள் சமாதி

படம்
தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறை உணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணர முடியும். நம் மனதில் கோபம் ஆக்ரோஷம் குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் எனக் கூறுகின்றனர். நாம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் எனக் கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது, எட்டு ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து தீட்டா வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான். பதினெட்டுச் சித்தர்கள் அடங்கியிருக்கும் ஜீவ சமாதிப் பீடங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருவெற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக்

திருவாதவூர் கோயில்

படம்
நான் கோயிலுக்கு உள்ளே நுழையும் போது இடதுபுறம் ஒரு கிணறு போன்ற தோற்றம் கொண்ட ஒரு தெப்பக்குளமும், வலது பக்கத்தில் ஒரு பெரிய உயரமான கல் மண்டபமும் உள்ள பெரிய வெளிப் பிரகாரமும், அதற்கு அடுத்து இருந்த இரண்டாம் பிரகாரத்தில் இடது பக்கத்தில் பிரகாரத்தின் சுவரின் நடுவே இருந்த ஒரு வாயில் அம்மன் சன்னதி செல்லும் பாதை என்ற அறிவிப்புடன் இருந்ததையும் பார்க்க முடிந்தது. கொஞ்சம் படிகள் ஏறிச் சென்று தான் சிவன் சன்னதி அடைய முடியும் என்பதைச் சொல்லும் கல் படிக்கட்டுகள் இருந்தன. கோயிலில் மனித நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை. பணியாளர்களும் கூட யாரும் இல்லை என்று தான் தோன்றுகிறது.  விஸ்தீரமான பிரகாரத்தில் கல்தளம் எங்கும் வெளிச்சம் மற்றும் வெயிலையும் அமைதியையும் தனிமையையும் பரப்பி காவலுக்கு வைத்து விட்டுத் தான் பணியாளர்கள் அருகில் எங்கோ சென்றிருந்தனர் போலும். வெகுகாலம் அதே இடத்தில் அசைவின்றி இருந்ததால் இறுகிப் போயிருந்த அந்தப்படிக்கட்டுகளில் ஏறி சுவாமி சன்னதிக்கு உள்ளே நுழைந்த போது, அத்தனை நேரம் பழகிய வெயிலுடனான நட்பை சட்டென முறிக்க மணமின்றி என் கண்கள் தயங்குகையில், பிரகாரத்தின் வெளிச்சத்திற்கு ஈடு கொடுக்க முடி