திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதால் கிடைக்கும் பலன்கள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதால் கிடைக்கும் பலன்கள்
பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு.
ஆனால், திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் - வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது.
அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும்.
அசலம் என்றால் கிரி என்றும் - மலை என்றும் பொருள்.
எனவே, அருணாச்சலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள்.
இம்மலையில் உயரம் 2,688 அடியாகும்.

அண்ணாமலையானது
  1. கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும்,
  2. திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,
  3. துவாபரயுகத்தில் பொன் மலையாகவும்,
  4. கலியுகத்தில் கல் மலையாகவும்...
மாறி வந்துள்ளது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது.
அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை...
  1. இந்திர லிங்கம்,
  2. அக்னி லிங்கம்,
  3. யம லிங்கம்,
  4. நிருதி லிங்கம்,
  5. வருண லிங்கம்,
  6. வாயு லிங்கம்,
  7. குபேர லிங்கம்,
  8. ஈசான்ய லிங்கம்...
தேவாரத்தில் புகழப்படும்,
ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை கிரிவலப்பாதையில் தான் அமைந்துள்ளது..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,