ஹரிவராசனம் விஸ்வமோகனம் அத்தாழப்பூஜை முடிந்த பின் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கும்

சபரிமலையில் ஐயப்ப சாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறக்கப்பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கும்.

இந்த பாடலை இயற்றியவர் தமிழகத்தை சார்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர், இவர் 1920 ஆம் வருடம் இந்த பாடலை இயற்றினார். இவர் திரு நெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி எனும் ஊரில் பிறந்தவர் ஆவார். கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்த ஹரிவராசனம் கீர்த்தனம்.

இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார்.. ஒவ்வொரு வரிகளும் அய்யப்ப சாமியே அருளியதுபோல இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டபட்டாலும் இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோர்க்கும் இல்லாதவர்களுக்கு உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.

அப்போது புலிபாலை தேடி வந்த ஐயப்பன் மிகவும் களைப்புடன் இருந்தமையால் அந்த குடும்பத்தைபற்றி கேள்விபட்டு வந்து உணவு கேட்டுள்ளார்.
உனவு ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த கம்பு தானியத்தை கூழாக செய்து உணவளித்தனர். அதனாலதான் அவர்களது குடும்பம் கம்பங்குடி என அழைக்கப்பட்டது.
அந்த பூர்விகமான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஹரிவராசனம் பாடலை இயற்றிய கம்பங்குடி ஐயர்.
இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் மேல் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது.

1950 களில் சபரிமலை ஐயப்பன் கோவில் தீக்கிரையாகி பின் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு சபரிமலை கோவிலை மீண்டும் 1951புனரமைத்தனர்.

அப்போது கோவில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி ஹரிவரசனம் கீர்த்தனம் இரவு அத்தாழப்பூஜையில் அய்யப்பசாமி முன் நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை மாற்றினார். இது அய்யப்ப சாமியை உறங்கவைக்கும் பாடல்போல உள்ளதாக கருதி அத்தாழபூஜைஇரவு பூஜை)முடிந்து நடை சாத்தும் பாடலாக மற்றினார்.

கே ஜே யேசுதாஸ் 1975 ஆம் ஆண்டு தமிழ் மலையாளம் மொழிகளில் வெளிவந்த சுவாமி அய்யப்பன்"திரைப்படத்தில் முதன் முறையாக இந்தபாடலை பாடினார் அதற்கு தேவராஜன் என்பவர் இசையமைத்தார்.. அந்த மெட்டில் அமைந்த ஹரிவராசனம் பாடல்தான் இன்று வரை சபரிமலையில் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கிறது.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,