இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Madurai Famous Chithirai Thiruvizha | உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு

படம்
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் குரு மூலமாக உபதேசம் பெற்று, இறைவனின் அருள்பெற வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றது. அவ்வாறு உபதேசம் பெற இயலாதவர்கள், “சாம்பவி தீஷை” என்று சொல்லக்கூடிய இறைவன், இறைவி இருவரும் ஒரு சேர திருவீதி உலா வரும்பொழுது தரிசித்தால் அவர்களுக்கு இறைவனே குருவாக இருந்து உபதேசம் அளிக்கிறார் என்பது இங்கு ஐதீகம். அனைத்து ஆன்மாக்களுக்கும் உய்வு பெற ஏற்பட்டதே இந்த “இறைவன் இறைவி திருவீதி உலா”. எங்கும் நிரம்பிய செம்பொருளாகிய இறைவன் அருளுருக் கொண்டு 64 திருவிளையாடல்களைச் செய்தருளியதும், ‘பூலோக கயிலாயம்’ என அழைக்கப்படுவதுமான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 தமிழ் மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இவ்விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் “திருக்கல்யாணம்” உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. மதுரை மாநகரில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். முதல் நாள் திருவிழா – வழக்கம்போல காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, இரவு சுவாமியும், பிரியாவிடை அம்மனும், கேட்டதைத் தரும் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் நான்