இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்னோர்கள் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்.

படம்
முன்னோர்கள் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள். காரணம் இதோ படியுங்கள்...  வடக்கே தலை வைத்து படுப்பது நல்லதல்ல “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது” பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது. இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்துவருகிறது. ஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச்செல்லும், ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும். நாம் வடக்கே தலை வைத்துபடுத்தால், நம் உடலின் வடக்கு திசையும், பூமியின் வடக்கு திசையும் இணையும்போது ஓட்டுவது இல்லை.  எனவே இரவு முழுவதும் நம் காந்தத் தன்மையில் விலகும் செயல் நடக்கிறது, எனவே நிம்மதியாகத் தூங்கமுடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.   தெற்கு தலை வைத்துப்படுத்தால் நம் வடதிசையும் பூமியின் தெற்கு திசையும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். எனவே நிம்மதியான தூக்கம் வரும். எனவே தெற்கில் தலை வைத்துப் படுப்பது மிகவும் நல்லது. “இரவில்

தூபங்களும் அதன் பயன்களும் .

தூபங்களும் அதன் பயன்களும் .நான் சொல்ல வரது நல்ல தூபமாக்கும் . சந்தனத்தில்- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம். சாம்பிராணியில்- தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும். அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும். துகிலி-தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும். துளசி_தூபமிட -காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும். தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும். வலம்புரிக்காய்- தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும். வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும். வெண்கடுகு --- தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும். நாய்கடுகு - தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர். மருதாணிவிதை -- தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும். கரிசலாங்கன்னி தூபமிட மகான்கள் அருள்கிட்டும். வேப்பம்பட்டை- தூபமிட ஏவலும் பீடையு நீங்கும். நன்னாரிவேர் - தூபமிட இராஜவசியம் உண்டாக்கும். வெட்டிவேர்-தூபமிட காரியங்களும் சித்தியாகும் வேப்பஇலைதூள் -- தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும். மருதாணிஇலைதூள் --- தூப

வீட்டில் பூஜை செய்யும் போது அவசியம் மணியோசை இருக்கவேண்டும்

துர்தேவதைகளை விரட்ட, வீட்டில் பூஜை செய்யும் போது அவசியம் மணியோசை இருக்கவேண்டும், அந்த மணிக்கும் தனி பூஜை செய்யவேண்டும். மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று.. அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன !  பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் எதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் அது வெளியே ஓடிவிடும். துர்தேவதை, போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் ஒருவேளை வந்து விடலாம். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தெய்வங்கள் வரமாட்டார்கள்! தினமும் பூஜா மணி அடிப்பதால் அந்த மணி துர் சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம்.  பூஜையின்போது, இறைவனுக்கு படையல் போட

உச்சிப் பிள்ளையாரும்... ஆழத்து விநாயகரும்!

படம்
கணபதியே சரணம்! நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன. ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மலையின் உச்சியில் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாராக அவர் காட்சியளிக்கிறார். இந்த கோவிலின் புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அசுரர் குலத்தைச் சார்ந்த இலங்கை யின் மன்னன் ராவணன். சீதையை சிறை எடுத்து வைத்தான். மகா விஷ்ணுவின் அவதார புருஷன் ஸ்ரீராமன். சீதையை மீட்க அனுமன், சுக்ரீவன் உதவி செய்தனர். அத்துடன் அசுரர் குலத்தைச் சார்ந்தவரும், ராவணனின் சகோதரனும் ஆன விபீஷணனும் உதவினார். அதன் பின்பு, அயோத்தி சென்ற ஸ்ரீ ராமன், பட்டாபிஷேகம்

விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் சிரத்தையுடன்

படம்
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும். விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சது

எண் ஏழின் சிறப்புக்கள்:

எண் ஏழு (Number 7) பெருமை  இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது.  உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி: ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.  ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.  ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.  காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.  ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது. எண் ஏழின் சிறப்புக்கள்: 1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007 2. எழு குன்றுகளின் நகரம் ரோம் 3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள் 4. மொத்தம் ஏழு பிறவி 5. ஏழு சொர்க்கம்(குரான்) 6. ஏழு கடல்கள் 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார். 7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR) 8. ஏழு வானங்கள். (Qur'an) 9. ஏழு முனிவர்கள் (Rishi) 10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி) 11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica) 12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆ

நெய்க்குள தரிசனம்

படம்
சிலர் கோவில்களில் நெய்க்குள தரிசனம் நடத்துவதுகுறித்தும் அதன் தத்துவங்கள் குறித்தும் கேட்டிருந்தனர்..  அண்மை காலமாக நெய்க்குள தரிசனம் என்னும் சிறப்பு வழிபாடு நம்மிடையே பிரபலமடைந்து வருகிறது. நெய்க்குள தரிசனம் என்பது பொதுவாக அம்மன் கோவில்களில் அதுவும் பிரசித்தமாக மாயவரம் அருகே உள்ள திருமீயச்சூரில் லலிதாம்பிகை கோவிலில் மாபெரும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.  விசேஷ நாட்களிலோ அல்லது அந்தந்த கோவிலுக்கென்று உள்ள சம்பிரதாயத்தில் குறிப்பிட்ட முக்கியமான நாட்களிலோ மூலஸ்தான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வர். பின்பு கருவறைக்கு முன் உள்ள அர்த்தமண்டபத்தில் பெரிய மர சட்டங்களை தயார் செய்து இருத்தி அதில் இடைவெளியின்றி வாழையிலையை பரப்பி அதன்மீது சர்க்கரை பொங்கலை நிரப்புவர். இப்பொழுது அந்த பொங்கல் குவியலின் நடுவே சுத்தமான நெய்யை ஊற்றி குளம்போல் அமைப்பர். சரியாக தீபாராதனை நடக்கும் நேரம் மூலஸ்தான அம்பாளின் அழகுத்தோற்றம் அந்த நெய்க்குளத்தில் பிரதிபலிக்கும் காட்சியை பக்தர்கள் கண்டுமகிழலாம். பின்பு அந்த பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.இதுவே நெய்க்குள தரிசனம்.  சரி விஷயத்திற்கு வரு

முருகனின் திருவுருவங்கள்

படம்
முருக பெருமான் - 60 சுவராசிய தகவல்கள் முருகனின் திருவுருவங்கள்: 1. சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 15. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும். 2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். 3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது. 4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும். 5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கி

கணபதியின் 16 வடிவங்கள்

படம்
விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும். 1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும். 2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும். 3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும். 4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். 5.

மூன்றாம் பிறை தரிசனம்

படம்
மூன்றாம் பிறை தரிசனம் மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள். மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். மூன்றாம் பிறை பிறந்த கதை : ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவான

திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோயில் சிறப்புத்தகவல்கள்

படம்
திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோயில் சிறப்புத்தகவல்கள். 1.செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துட னும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கியது. 2.கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது. 3.மேற்கு ராஜ கோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும். 4.முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. 5.மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்

சிதம்பர தில்லை நடராஜர் மதுரையில் தங்கி இருந்த வரலாறு

படம்
சிதம்பர தில்லை நடராஜர் மதுரையில் தங்கி இருந்த வரலாறு தில்லை ஸ்ரீ நடராஜப் பெருமான் கி.பி., 1648ம் ஆண்டில், முகலாய மன்னர் படையெடுப்பின்போது, தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள், நடராஜர், சிவகாமி விக்ரகங்களை இரண்டு மர பேழைகளில் (பெட்டி) பாதுகாப்பாக வைத்து, மதுரை கொண்டு வந்து சில காலம் தங்கி மதுரையில் வழிபாடு நடைபெற்றது.அன்று மதுரை மண்ணிலே சிதம்பர தரிசனம் செய்தவர்கள் மகா பாக்கியவான்கள். பின் மதுரையில் இரவு நேரங்களில் பயணம் செய்து, குடுமியாண்மலையை சென்றடைந்து தங்கினர்.  அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, கேரளா மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர்.அங்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து, பூமிக்கடியில் குழி தோண்டி சுவாமி வைக்கப்பட்டிருந்த பேழைகளை மறைத்து வைத்தனர். பின், அந்த இடத்தில் புளியமரம் ஒன்றையும் நட்டு வைத்து, தங்கள் ஊருக்கு திரும்பினர். நடராஜரை பிரிந்ததால், தில்லை வாழ் அந்தணர்கள் கவலையில் இருந்தனர். சிதம்பரத்தில் அமைதி திரும்பி, 35 ஆண்டுகளுக்கு பின், இளம் தீட்சிதர்கள் பல குழுக்களாக பிரிந்து, விக்ரகத்தை தேடினர்.அதில், ஒரு குழுவினர், புளியங்குடிக்கு சென்று, பல இடங்களில் தேடியும

சிவராத்திரி ஸ்பெஷல்

படம்
மஹா சிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் ! 1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும். 2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும். 3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும். 4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும். 5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும். 6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும். இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன. வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாயநம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க