முன்னோர்கள் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்.

முன்னோர்கள் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்.
காரணம் இதோ படியுங்கள்... 
வடக்கே தலை வைத்து படுப்பது நல்லதல்ல “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது”

பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது. இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்துவருகிறது. ஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச்செல்லும், ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும்.

நாம் வடக்கே தலை வைத்துபடுத்தால், நம் உடலின் வடக்கு திசையும், பூமியின் வடக்கு திசையும் இணையும்போது ஓட்டுவது இல்லை.  எனவே இரவு முழுவதும் நம் காந்தத் தன்மையில் விலகும் செயல் நடக்கிறது, எனவே நிம்மதியாகத் தூங்கமுடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
 
தெற்கு தலை வைத்துப்படுத்தால் நம் வடதிசையும் பூமியின் தெற்கு திசையும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். எனவே நிம்மதியான தூக்கம் வரும். எனவே தெற்கில் தலை வைத்துப் படுப்பது மிகவும் நல்லது. “இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் அல்லவா? அதனால் கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது...

அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காவும், தொப்புளுக்கு கீழே தெற்காகவும் இருக்கும். ஆனால் குழந்தைக்கு தொப்புளுக்கு மேல்பகுதி தெற்காகவும்,  தொப்புளுக்கு கீழ் பகுதி வடக்காவும் இருக்கும். இப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல்நோக்கி இருக்க முடியும்.

பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.  அதாவது குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காவும், கீழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத்திசை, அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கி திரும்பும். அதனால்தான் தலை திரும்புகிறது.
எனவே தயவுசெய்து வடக்கே தலை வைத்துப் படுக்ககூடாது. தெற்குத்திசை மிகவும் நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,