உச்சிப் பிள்ளையாரும்... ஆழத்து விநாயகரும்!

கணபதியே சரணம்!
நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.
ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர்.
தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மலையின் உச்சியில் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாராக அவர் காட்சியளிக்கிறார்.
இந்த கோவிலின் புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அசுரர் குலத்தைச் சார்ந்த இலங்கை யின் மன்னன் ராவணன். சீதையை சிறை எடுத்து வைத்தான். மகா விஷ்ணுவின் அவதார புருஷன் ஸ்ரீராமன். சீதையை மீட்க அனுமன், சுக்ரீவன் உதவி செய்தனர். அத்துடன் அசுரர் குலத்தைச் சார்ந்தவரும், ராவணனின் சகோதரனும் ஆன விபீஷணனும் உதவினார். அதன் பின்பு, அயோத்தி சென்ற ஸ்ரீ ராமன், பட்டாபிஷேகம் முடிந்ததும், விபீஷணனுக்கு ரங்கநாதர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக கொடுத்தார். அதை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் பொழுது வழியில் மிகவும் அழகிய சோலைகள் நடுவே அகண்ட காவிரி நதியில் நீராடி, பூஜை செய்ய நினைத்தார்.
அச்சமயம் அங்கு வந்த சிறுவனிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு சென்றார். சிறுவன் உருவில் வந்தது விநாயகப் பெருமானே.
விபீஷணன் சென்ற பின்பு சிலையை அந்த இடத்திலேயே வைத்துவிட்டு, அருகிலிருந்த மலையின் மீது சென்றுவிட்டார். திரும்பி வந்த விபீஷணன் சிறுவனை காணாது திகைத்து நின்றார். சிலை மண்ணில் இருப்பதை கண்டு, அதை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இதன் காரணத்தால், இலங்கைக்கு செல்ல இருந்த ஸ்ரீரங்கநாத பெருமான் ஸ்ரீரங்கத்தில் எழுந்து அருளியதாக வரலாறு.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உள்ள பகையின் காரணத்தால், எவ்வளவுதான் விபீஷணன் நல்லவனாக இருந்தாலும், ஸ்ரீ ராமனுக்கு உதவி செய்தாலும், ஸ்ரீ ரங்கநாத பெருமான், அசுரர் பூமிக்கு செல்வதை விரும்பவில்லை. எனவே, விநாயகரை வேண்டிக் கொண்ட படியால் அது தடுக்கப்பட்டது.
சிலையைப் பெற்ற சிறுவன் மலையின் மீது இருப்பதை கண்டு, விபீஷணன் கோபத்துடன் தலையில் ஒரு கொட்டு வைத்த அடையாளம், இன்றும் உச்சிப்பிள்ளையாரின் தலையில் வடு உள்ளது என்கின்றனர். பின்பு தான் செய்த தவறுக்கு விநாயகரிடம் மன்னிப்பு கேட்டாராம்.
இப்படி சிறப்பு பெற்ற விநாயகர் தான், தமிழகத்துக்கு பெருமை தருகின்ற ஸ்ரீ ரங்கநாதருடன் பக்தர் களின் நலனுக்காக உச்சிப்பிள்ளை யாராக அருள் பாலிக்கின்றார். 
உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே...
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினிலே..
சில தலங்களில், மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருப்பவராகவும் விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். 
காளஹஸ்தி சிவாலயத்திலும், விருத்தாசலம் திருக்கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. 
பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை.இங்கு 
முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும் இவரை வணங்கினால் எல்லக் குறைகளும் நீங்கி நல்ல வாழ்வு அமையும் என்பதால் பக்தர்கள் இங்கு வந்து இவரை வணங்குகின்றனர். விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். 
திருவும் கல்வியும் சீருண்ட் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையை காய்க்கவும்
பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்து பிள்ளையை தொழுவோம்!
நன்றி -இணையதளம்.
கஜமுக பாத நமஸ்தே !




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,