வியப்பின் உச்சம் மன்மதன் சிலை

இந்த மன்மதன் சிலையில் 6 அடியில் வில் உள்ளது. அந்த வில்லின் மேல் பகுதியில் உள்ள சிறு துளையின் வழியாக கடுகை போட்டால், அந்த கடுகு வில்லில் புகுந்து கீழே வந்து விழுகிறது. எந்த ஒரு தொழில்நுட்ப வசதியும் இல்லை, துளையிடும் கருவிகளும் இல்லாத காலத்தில், சிறு கடுகு செல்லும் அளவிற்கான துளையை போட்டிருக்கிறார்கள்.

இந்த துளையை எப்படி போட்டிருப்பார்கள்..??
அந்த கல்லின் மேல் பகுதியில் செதுக்கி விட்டு அதில் தேன் மற்றும் வெல்லத்தை வைத்திருப்பார்கள். தேன் மற்றும் வெல்லத்தால் ஈற்கப்படும் எறும்புகளை வைத்து தான் கடுகு செல்லும் அளவிற்கான துளையை உருவாக்கியிருக்கிறார்கள். யோசித்து பாருங்கள் சிற்பிகளின் புத்திகூர்மையை.

ஒரு சிற்பம் பற்றியுள்ள வளைவான வில்லின் ஒரு முனையில் ஒரு குண்டூசியோ, அல்லது கடுகை போட்டால் மற்றோரு முனை வழியாக தரையில் விழுவது சிற்பிகளின் திறமைக்கு வலுவான சான்றாகும். இன்று இந்த சிற்பம் சற்று சிதைந்தும் வில்லின் ஒரு பகுதி பழுதுபட்டும் காணப்படுகிறது.

இடம்: கிருஷ்ணாபுரம் வெங்கடாச்சலபதி_கோவில், திருநெல்வேலி மாவட்டம்



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...