எந்த நல்ல காரியத்துக்கும் ராமாயண பாராயணம்

வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீமத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும், சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால் ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.


  1. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
  2. குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி பாயாஸதான பாராயண கட்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
  3. சுகப்பிரசவத்திற்கு பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாவதாரத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  4. கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ராமா ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  5. அரச காரியங்களiல் வெற்றி கிட்ட அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  6. ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க சுந்தர காண்டத்தில் லங்கா விஜயத்தை மாலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  7. பித்தம் தெளிய சுந்தர காண்டத்தில் ஹுனுமத் சிந்தையை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  8. தரித்திரம் நீங்க சுந்தர காண்டத்தில் சீதா தரிசனத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  9. பிரிந்தவர் சேர சுந்தர காண்டத்தில் அங்குலீயக பிரதானத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
  10. கெட்ட கனவுகள் வராமலிருக்க சுந்தர காண்டத்தில் திரிஜடை ஸ்வப்னத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  11. தெய்வ குற்றம் நீங்க சுந்தர காண்டத்தில் காகாசுர விருத்தாந்தத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  12. ஆபத்து நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷண சரணாகதியை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  13. சிறை பயம் நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்த்ததை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  14. மறு பிறவியில் சகல சுகம் பெற யுத்த காண்டத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  15. குஷ்டம் போன்ற நோய்கள் தீர யுத்த காண்டத்தில் ராவண கிரீட பங்கத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
  16. துன்பம் நீங்க யுத்த காண்டத்தில் சீதா ஆஞ்சநேய ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  17. மோட்ச பலன் கிடைக்க ஆரண்ய காண்டத்தில் ஜடாயு மோட்சத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
  18. தொழிலில் இலாபம் அடைய அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,