Tiruvotu tan enru elanamaka enna ventam | திருவோடு தானே என்று எளனமாக எண்ண வேண்டாம்:

திருவோடு தானே என்று எளனமாக எண்ண வேண்டாம்: 
இதைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.


இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.

இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய அளவு, தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். அடேங்கப்பா அங்கு இருந்து எப்படி இங்கு வந்தது..?

இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது. இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன.

பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.

மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. இவற்றின்விதை பரவும்முறை கடல் நீரோட்டத்தின் மூலமே.. விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.

இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு.

தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும். இத்தனை சிறப்பு பெற்றது திருவோடு..!



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...