Rahu ketu dosham pokkum parihara sthalam patriya pathivugal | ராகு,கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் பற்றிய பதிவுகள்

ராகு,கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் பற்றிய பதிவுகள்


தமிழ்நாட்டில் ராகு - கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் அதிகம் உள்ளது. 


1. ஸ்ரீகாளஹஸ்தி :

இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை.

மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது.

மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.

2. ராமேஸ்வரம் :

திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங் களிலும் ராகு ஈசனை வழிபட்டுள் ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.

3. திருப்பாம்புரம் :

அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.

4. நாகர்கோவில் :

இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.

5. திருச்செங்கோடு :

ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.

6. பேரையூர் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது.

கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன.

மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.

7. ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி :

புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம்.
ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.

8. ஸ்ரீஅரியநாச்சியம்மன் :

சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரிய நாச்சியம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.

9. காளி வழிபாடு :
சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

10. பஞ்சமிதிதி :
நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார்.
பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.

11. ஸ்ரீரங்கம் :
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன் களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.

rahu ketu


No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...