மதுரை மீனாட்சி அம்மன் - பசுவனுக்கு மண் எடுத்தல்

மதுரை மீனாட்சி அம்மன் - ஐப்பசி கந்தசஷ்டி கோலாட்ட உற்சவம் 2020 - இரண்டாம் நாள்

ஆறு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒரு விசேஷம் “பசுவனுக்கு மண் எடுத்தல்” என்ற சடங்கு !!! ஐப்பசி மாதம் அடைமழை பெய்து ஊர் செழிக்க வேண்டி, பெண்கள் (குறிப்பாக சிறுமியர்) ஆற்றங்கரை ஓரம் மண் எடுத்து அதில் பசுவன் (நந்தி) உருவம் செய்து அதனைச்சுற்றி கோலாட்டம் ஆடி, இறுதியாக அதனை ஆற்றிலோ குளத்திலோ விஸர்ஜனம் (கரைத்து) செய்து கொண்டாடுவார்கள் !!!

இதன் தொடர்ச்சியாகத்தான் திருக்கோவிலில் இருக்கும் நந்தியைச்சுற்றி தொட்டி அமைத்து மழை வேண்டி நீர் நிரப்புதல் எல்லாம், என்று எண்ணுகிறேன் ...
மதுரையிலே அம்பிகையே கோலாட்டம் ஆடுகிறாள் !!! உற்சவம் தொடங்கும் முன் இன்றும் பசுவனுக்கு மண் எடுக்கும் வைபவம் நடைபெறுகிறது !!! வீதி சுற்றி ஆடி வந்தபின்னர் அம்மன் சன்னதி திருவிழா செட்டி மண்டபத்தில் பத்தி உலாத்தலும் ஒருகாலத்தில் நடந்துவந்தது !! (இதில் மேலும் சிறப்பு யாதெனில் அம்பிகைக்கென்றே கொண்டாடப்படும் நான்கு உற்சவங்களிலும் பத்தி உலாத்தல் நடைப்பெற்றது !!! இன்றும் அதனை ஆடி உற்சவத்தில் நாம் கண்குளிர தரிசிக்கலாம் !!! )

எது எப்படியோ சர்வ லோகத்தையும் ஆட்டிப்படைக்கும் அம்பிகை, ஒன்றும் தெரியாத சிறுமியைப்போன்று கையில் கோலேந்தி ஆடுவதைக்காணும் பொழுது, அதனைக்கண்டு மயங்காதார் உலகில் யார் இருக்க முடியும் ?!?!

மான மாத்ரு மேயே !! மாயே !!!
மீனலோசனி பாசமோசனி !!!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,