திருவடிகளை நினைத்தே துவங்குவதால் ஸர்வ மங்களம் உண்டாகட்டும்

லக்னம் எதுவாயினும், தினம் எதுவாயினும், நக்ஷ்த்திர பலம் எதுவாயினும், சந்திர பல லக்னம் எதுவாயினும், வித்யா பலம், தெய்வ பலம் எந்த அளவாயினும் லக்ஷ்மி நாதனுடைய (ஸ்ரீமந் நாராயணனது) திருவடிகளை நினைத்தே துவங்குவதால் ஸர்வ மங்களம் உண்டாகட்டும்.

ஓம் அச்யுதாய நம: ( பர நிலை )
ஓம் அநந்தாய நம: ( வியூஹ நிலை )
ஓம் கோவிந்தா3ய நம: ( விபவ நிலை )
ஓம் கேசவாய நம: ( அந்தர் யாமித்வ நிலை )
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: ( அர்ச்சா நிலை )

இதில் ஓம் அச்யுதாய நம: என்றதினால், பரமபத நாதனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன்னை அண்டியவர்களை அகலவிடாமல் ரக்ஷிப்பவன், அழிவற்றவன், அடியார்களை நழுவவிடாமல் மோக்ஷத்தை அளிப்பவன், ஸகல புவனங்களுக்கும் ஆதாரமாய் உள்ளவன் என்கிறபடி பரநிலை விவரிக்கப்படுகிறது.

அடுத்ததாக ஓம் அநந்தாய நம: என்றதினால் பரமபதத்தில் எழுந்தருளியுள்ள பரவாஸு தேவனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன்னிடமிருந்து மூன்று வியூஹ மூர்த்திகளை தோன்றுமாறு ஸங்கல்பித்தார். அதன்படி ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய மூன்று பேரும் அவரிடமிருந்து தோன்றினர். அந்த பரம புருஷனின் ( அநிருத்தனிடமிருந்து ) நான்காவது ஹம்சம் இவ்வுலகில் திருப்பாற்கடலில் அவதரித்தது. அந்த அவதாரமானது ஆதிசேஷன் மீது மோனநிலையில் பள்ளிகொண்டு ஜீவர்களின் ரக்ஷணத்தையே கருத்திற்கொண்டு விஸ்வக்ஷேனர், கருடர், நாரதர், தும்புரு போன்ற நித்யஸூரிகளால் துதிக்கப்பெற்றும் ஸ்ரீயாகிய லக்ஷ்மியுடன், ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதரராய் க்ஷீராப்தி நாதருக்கு அனந்தன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள வியூஹ நிலையை குறிக்கிறது.

பிறகு, ஓம் கோவிந்தா3ய நம: என்றதினால் கோ என்ற பசுக்களுக்கு நாயகன் என்பதாகவும், கோ எனும் பூமியை (அவதாரங்களின் மூலம் ) பிரளய ஜலத்தில் அமிழ்ந்து விடாமல் ரக்ஷிப்பவராகவும், கோ எனும் (பன்னிரு ஆதித்யர்களாகிய) பசுக்களை (குடத்தின் சக்கரத்தின் நாபியில் ஆரங்கள் இணைக்கப்பட்டிருப்பது போல்) கட்டி நடத்துபவராகவும் உள்ள விபவ நிலையை குறிக்கிறது.

பின்பு ஓம் கேசவாய நம: என்றதினால் 'க' எனப்படும் பி3ரம்மனாகவும் 'அ' எனப்படும் விஷ்ணுவாகவும் 'ஈஸ' எனப்படும் ருத்3ரனாகவும் முறையே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரமாகிய முத்தொழிலை மேற்கொள்பவராய் இருத்தலால் கேசவன் என்றும் ஸப்3ரஹ்ம, ஸசிவ, ஸஹரி என்று நாராயண ஸூக்கத்தில் கூறியுள்ளபடி ஸகல ஜீவராசிகளின் ஹ்ருத3ய ஆகாயத்தில் அந்தர்யாமியாய் எழுந்தருளி அருள்பாலிப்பதாலும் அந்தர்யாமித்வ நிலை உணர்த்தப்படுகிறது.

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: என்றதினால் எவரெவர்கள் எந்தெந்த வடிவில் என்னை வணங்குகிறார்களோ அவரவர்களுக்கு அந்தந்த வடிவில் நானே நின்று அருள் பாலிக்கிறேன் என்று பகவத் கீதையிலும் "அவரவர் தமதமது அறிவறி வகை வகை ..." என்று ஆழ்வார்கள்பாடிய படியே அர்ச்சா நிலையம் உணர்த்தப்படுகிறது. (கிருஷ்ணாய - க்ருஷி எனப்படும் பயிர் போன்ற பூமியில் 'ண' எனப்படும் விதையாகிய ஆத்மாவை விதைத்து பலனை அறுவடை செய்பவர்).





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,