ஒரு முறை மஹா பெரியவா பூஜை எல்லாம் முடிந்து விட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஒரு பந்தளில் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் புகைப்படம் எடுத்தார். பெரியவா உடன் இருந்த ஒருவரை அழைத்து அவர் காதில் ஏதோ சொன்னார்.
உடனே அவர் அங்கிருந்து புகைப்படம் எடுப்பவரிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பெரியவா சொல்கிறார்கள் தயவு செய்து புகைப்படம் எடுக்காதிர்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். புகைப்படம் எடுத்தவர்கோ பயம். நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்று உள்ளுர பயம் வந்து விட்டது.
சிறிது நேரம் கழித்து பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவரை அழைத்த மஹா பெரியவா மீண்டும் அவரிடம் ஏதோ சொல்ல அவர் விரைந்து சென்று இரண்டு பெரிய துணியை கீத்து கொட்டாய் மீது போட்டார்கள். எல்லோரும் பெரியவாளுக்கு வெயில் அதிகமாக இருப்பதால் தான் மேலே துணி விரிக்கிறார்கள் என்று நினைத்தார்கள்.
மீண்டும் பெரியவா அவர்கள் கைங்கர்யம் செய்பவரை அழைத்து ஏதோ சொல்ல அவர் சுற்றும் முற்றும் ஏதோ தேடினார். ஆம் அதோ தெரிகிறாரே அவர் தான் என்று ஓடி வந்து அவரிடம் பெரியவா உங்களை கையோடு அழைத்து வர சொன்னார்கள் என்று சொல்ல அவருக்கு இன்றைக்கு நமக்கு ஏதோ போறாத நேரம் போல் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். பெரியவா உத்தரவு ஆச்சே அதனால் கையை கட்டிக் கொண்டு பயத்துடனும் மரியாதையுடனும் பெரியவா முன் போய் நின்றார்.
அவர் யார் என்றால் யாரை புகைப்படம் எடுக்க கூடாது என்று சொன்னாறோ அவரே தான். அப்போது பெரியவா அவரிடம் இப்போது எவ்வளவு புகைப்படம் எடுக்க வேண்டுமோ எடுத்கோ என்றார். அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏன் முதலில் எடுக்க வேண்டாம் என்றும் இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோ என்று சொல்கிறார் என்று அவருக்கு புரியவில்லை.
சில நிமிடங்கள் கழித்து பெரியவா கை தட்டி என்ன என்று கேட்டார். புகைப்படக்காரர் திரு திருவென விழித்தார். உடனே உமாச்சி தாத்தா தன் திருவாய் திறந்து ஏன் முதலில் எடுக்க வேண்டாம் என்றும் இப்போது எடுக்க சொல்கிறேன் என்று சொல்கிறேன் என்று யோசிக்கிறாய் அதானே என்றார். புகைப்படக்காரருக்கு அடடா நாம் நினைப்பதை அப்படியே சொல்கிறாரே என்று வியப்பு. இருக்காதே பின்ன எதிரே இருப்பது ஸாக்ஸாத் பரமேஸ்வரனாச்சே! புகைப்படம் எடுத்த பிறகு உனக்கே புரியும் என்றார் பெரியவா.
அவரும் தனது கேமராவை எடுத்து சில புகைப்படங்களை எடுத்து கொண்டு சென்றார். ஆனால் அவரின் மனதில் ஏதோ தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது. {உடனே புகைப்படம் எடுத்ததை வாஷ் செய்ய எண்ணினார். அப்போது எல்லாம் பிளிம் தான், வாஷ் செய்து நெகட்டிவ் காபி கொண்டு தான் பிரிண்ட் போடுவார்கள்.} எல்லாவற்றையும் வாஷ் செய்து பிரிண்ட் போட்டு பார்த்தார். இவர் எடுத்த முதல் புகைப்படங்களில் கீத்து கொட்டாய்யின் மீது சூரிய ஒளி பட்டு பெரியவா உடலில் வட்ட வட்டமாக சூர்ய ஒளி இருந்பதை கண்டார். பிறகு எடுத்த புகைப்படத்தில் அது இல்லை. அவருக்கோ ஒரே ஆச்சரியம் எப்படி இது என்று.
உடனே இரண்டு புகைப்படத்தையும் எடுத்து கொண்டு பெரியவா முன் போய் நின்றார். என்ன இப்போது புரிந்ததா என்று கேட்டா. அவருக்கோ ஒன்றும் விளங்க வில்லை. நீ முதலில் போட்டோ எடுக்கும் போது உச்சி வெயில் அதனால் சூர்ய ஒளி என் மீது பட்டு போட்டோ எல்லாம் நன்றாக விழாது. அதனால் கீத்து கொட்டாய் மீது இரண்டு துணியை போட சொன்னேன் என்றார்.
அப்போது தான் அந்த புகைப்படக்காரருக்கு விஷயமே தெரிந்து. ஒரு புகைப்பட கலைஞரான எனக்கு தெரியாததை கூட இந்த பரப்பிர்மம் எவ்வளவு அழகாக எடுத்து காட்டி விட்டார். இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று அவருக்கு ஒரே ஆச்சரியத்துடன் மஹா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு வாங்கிக்கறேன் பெரியவா என்று சொல்லி விடைபெற்று சென்றார். அதான் நம்ம உமாச்சி தாத்தா.... பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்....
ஜய ஜய சங்கர ஹர ஹர!
No comments:
Post a Comment