சூடாமணிக்கு அபிமான தேவதை வாயு பகவான். சீதாதேவி சூடாமணியை அனுமனிடம் கொடுத்தார். இந்த ரூபத்தில் எப்படி கடல் தாண்டி வந்தார் என சீதம்மைக்கு சந்தேகம். விசுவரூபம் எடுத்துக் காட்டுகிறார். சீதம்மா சிரஞ்சீவியாக இரு என அனுக்கிரகம் செய்தார்கள்*
*வந்த காரியம் நல்ல படியாக முடிந்தது. இராம தூதனானத் தனக்கே எவ்வளவு பலம் எனக் காட்ட விரும்பினார். இராமனின் தாஸனான எனக்கே இவ்வளவு பலம் என்றால் இராமனுக்கு எவ்வளவு பலம் உள்ளது என்பதை உணர்த்த எண்ணினார். இராம சீதாதேவியரின் அருட்கடாக்ஷம் அனுமந்தனுக்கு உண்டு. ஹரி ஸ்மரணை லக்ஷ்மி கடாக்ஷத்தைக் கொடுக்கும்.*
*அசோகவனத்தை நாசம் செய்ய வேண்டும். கோடிக் கணக்கான படைகளை இராவணன் அனுப்ப அடித்து துவம்சம் செய்தார். பஞ்ச பிராணராக நம்முள் இருந்து வேலை செய்பவர், ஆயுதங்கள் ஏதுமின்றி அனைவரையும் அழித்தார். மந்திரி புத்ரர்கள், சேனாதிபதிகள் என்று அடித்து துவம்சம் செய்தார். மரங்களை பிடுங்கி எறிகிறார். இராவணனின் படைகளை மூன்றில் ஒரு பங்கைத் தானே அழித்தார். இராவணனின் மைந்தன், ராவணனுக்கு சமமானவன் என எண்ணப்படும் அக்ஷகுமாரனை தரையில் தேய்த்து அழிக்கிறார். இதன்மூலம் தன்னால் ராவணனையும் கொல்ல முடியும் என்பதையும் சூசகமாக உணர்த்தினார்*
*இந்திரஜித் பிரம்மாஸ்திரம் உபயோகப் படுத்தினான். இதேபோல் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் நாராயணாஸ்திரம் விட்டவுடன் கிருஷ்ணன், "சரணாகதி அடைவதே சரி, ஆயுதங்கள் கையில் ஏந்தாதவரை விட்டுவிடும், எல்லோரும் நமஸ்காரம் செய்யுங்கள்" என்றுரைத்தார்.
பீமன் மட்டுமே "பிராணன் போனாலும் பரவாயில்லை, ஸ்ரீஹரியைத் தவிர யாரையும் வணங்குவதில்லை" எனத் தனது த்ருட பக்தியை நிரூபித்துள்ளார். நாராயணஸ்திரத்துக்கு சமமானது பிரம்மாஸ்திரம். இந்திரஜித் பிரயோகம் செய்து ஒன்றும் செய்ய வில்லை.
ஏனெனில் இவரே பாவி பிரம்மா, வரக்கூடிய கல்பத்தில் பிரம்ம பதவிக்கு வரக்கூடியவர். பிரம்மாஸ்திரம் அனுமானை ஒன்றும் செய்யாது என்ற வரமும் உள்ளது. ஆனால் ராவணனைக் காண்பதற்காக, அதற்கு கட்டுப்பட்ட மாதிரி அனுமன் காட்டிக் கொள்கிறார். அமைதியாக கட்டுப்பட்ட ஆஞ்சநேயரை, அவரின் நோக்கம் புரியாமல் ராட்சசர்கள் கயிறு கொண்டு கட்டுகிறார்கள்.
பிரம்மாஸ்திரத்திற்கு அவமானம் ஏற்பட்டதால் அது தன் நிலைக்கு திரும்பியது. இராவணனை உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கொண்ட ஹனுமான் ராக்ஷஸர்கள் கயிற்றினால் கட்டிய போதும் கட்டுப் பட்டதாகவே நடித்தார். ராவணனைக் கொல்ல சக்தி இருந்தும் அவன் ராமனால் கொல்லப்பட வேண்டியவன் என்று கொல்லவில்லை. இந்திரஜித்தை லக்ஷ்மணன் கொல்ல வேண்டும் என்பதால் அவனையும் விட்டு வைத்தார் ஹனுமான்*
*ராவணனின் சபையில் தன் பெருமையைச் சொல்ல வில்லை. இராமனின் தாஸன் எனத் தன்னை வினயத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டார். ராவணனுக்கு அறிவுரை உரைக்கும் விதமாகவும், எச்சரிக்கும் விதமாகவும் "இராமனிடம் சரணடைந்து சீதாதேவியை ஒப்படைத்து விட்டு சுகமாக வாழலாம். இல்லாவிட்டால் புத்தர்கள், பந்துக்கள், மித்ரர்கள் எனக் குலமே அழிந்து விடும்" என்றுரைத்தார். "இராம பாணத்தின் முன், பிரம்மன், ருத்ரன் முதலான தேவதைகள் கூட நிற்க முடியாத போது, நீ அல்பன், நீ எம்மாத்திரம் ?" என எச்சரித்தார்.*
*எதையும் காதில் கொள்ளாமல், அனுமனை கொல்லத் துணிந்தான் ராவணன். தூதனைக் கொல்லக்கூடாது, தர்மம் அல்ல என விபீஷணன் உரைக்க, அவமானப்படுத்த வேண்டுமென வாலில் நெருப்பு வைத்தார்கள். நெருப்போடு சேர்ந்து பறக்க, பற்ற வைக்க இலங்கை பூராவும் எரிகிறது. வாயு பகவானுக்கு அக்னியால் ஒன்றும் ஆவதில்லை. அக்னிக்கு இலங்காப்பட்டிணம் பூராவும் எரிந்தது. ஒரு க்ஷணம் யோசித்து பார்த்தார். சீதை அமர்ந்த இடத்திலும் விபீஷணன் கிரகத்தில் மட்டும் ஒன்றும் ஆக வில்லை. மீண்டும் சீதாதேவியை கண்டு வணங்கி விடைபெற்றார் அனுமான்.*
*தனக்காக காத்திருந்த வானரப் படைகளின் நடுவில் சென்று திரும்பினார். அப்போது வரை அனைவரும் ஜெபம் செய்து கொண்டு இருக்கின்றனர். அனைவரையும் அழைத்துக்கொண்டு சுக்ரீவனுக்கு இந்த நற்செய்தியை உரைத்தார். சுக்ரீவனுக்கு சந்தோசம். ஆனந்தம். வானரக் கூட்டம் மது வனத்தை நாசம் செய்து தேனைக் குடித்து குதூகலித்தனர். பின்னர் அனுமான் இராமருக்கு நமஸ்காரங்கள் செய்தார். சூடாமணியை பாதமதில் சமர்ப்பணம் செய்தார்.
இராமர் அனுமனைக் கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டார். ஸஹபோகத்தை கொடுத்தருளினார் ராமன். திடமான பக்தி ஒன்றே வேண்டும் என்று கேட்கிறார் ஹனுமான். பின்னர் சேதுவைக் கட்டி, யுத்தம் புரிந்து, ராவணன் கும்பகர்ணன் முதலானவர்களை அழித்து, சீதையுடன் அயோத்தி சென்று, பட்டாபிஷேகம் செய்து கொண்டு அனைவருக்கும் அருள் புரிந்தான் ஸ்ரீராமன்.*
*நமக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஆச்சாரிய ஸ்ரீமத்வரின் சேவைகள் செய்ய வேண்டும். ஸ்ரீராமன் இடத்தில் த்ருடமான பக்தியை வேண்டுவோம் ஐனங்களுக்கு சேவை மற்றும் ஜனார்தனனுக்கு சேவை செய்திட வேண்டும். சுந்தர காண்டம் படிப்பது துக்க நிவாரணம். இக்கதையை கேட்ட படித்த ஸ்மரணை செய்த அனைவருக்கும் ஐஸ்வர்யம் ஞான பக்தி வைராக்கியம் பெருகட்டும்.
No comments:
Post a Comment