அழிந்து வரும் வைகை ஆறின் பிறப்பிடமாக விளங்கும் மேகமலை

அழிந்து வரும் வைகை ஆறின் பிறப்பிடமாக விளங்கும் மேகமலை

இங்கிருந்து மூலவைகை ஆறு உருவாகி வைகை அணைக்கு வைகை ஆறாக வந்து சேர்கிறது.. தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்த மலைகள் என்று சொல்லப்படும் பச்சைக்கூமாச்சி மற்றும் வெள்ளிமலைகள் மீது ஏறியிறங்கிய அனுபவங்கள் ஏராளம். ”பச்சை மரகதப் பட்டு உடுத்தி படுத்துக் கிடக்குது இயற்கை”… என்ற வையம்பட்டி முத்துச்சாமியின் பாடல் வரிகளின் உயிர்ப்பை அங்குதான் கண்டேன். 

பச்சைமலைகளின் மீதான பயணங்களில் நாங்கள் அனைவரும் மனசெல்லாம் பசுமை பூசிக்கொண்டது போலொரு உணர்வில் வாழ்ந்த காலமது. பெயர் தெரியாத மரங்களின் பூக்கள்…… காய்கள்….. கனிகள்………. சில்லென்ற அருவிகளின் குளிர்தென்றல்…… என அணி நிழல்காடுகள் கொண்டது எனது பூமி……. ஆனால் தற்போது அழிந்து வருகிறது.

வருசநாட்டு மலைப் பகுதிக்குற்பட்ட மேகமலை வனப்பகுதியில் 26 ஆயிரத்து 910 எக்டேர் வனநிலம், வனவிலங்குகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு வகை வனப்பகுதியிலும், ஏதாவது ஒரு வகை அபூர்வ வகை விலங்குகள் காணப்படும். ஆனால் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் எல்லா வகை அபூர்வ விலங்குகளும் உள்ளன. 

சிங்கவால் குரங்கு, புலி, யானை, சிறுத்தை, செந்நாய், காட்டு எருது, புள்ளிமான், கடமான், கேழையாடு, சருகுமான். கரடி, கருமந்தி, மரநாய், கரடி, செந்நாய், வரையாடு போன்ற விலங்குகளும், பறக்கும் அணில், சாம்பல் அணில், மலபார் அணில், பழந்தின்னி வவ்வால்கள், பறக்கும் பல்லி, தேவாங்கு, ஆந்தை, போன்ற 180 வகையான பறவைகளும், 65 வகையான பாம்புகளும் உள்ளதாக வனத்துறையினர் கணக்குச் சொல்கிறார்கள்..

வருசநாட்டுப் பள்ளத்தாக்கில் கிழக்குப் பக்கமாக உள்ள மலைகள் சதுரகிரி மலைகள் 480 சதுர கி. மீ., பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்திலிருந்து நாலாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் உள்ளது. இது மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கிறது. இதில் சாப்டூர்- வத்ராயிருப்பு இடையே 230 ச.கி.மீ.,பரப்பில் மதுரை மாவட்ட மலை பகுதியில் 60 கிராமங்கள் உள்ளன.

தற்போது இங்கு பல மரங்கள் அழிக்கபட்டு வருகின்றன.. மேலும் பயன் தரும் மரங்களை வெட்டிவிட்டு தற்போது தேயிலை, காபி தோட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆக்கிரமித்து வருகிறது.. இதனால் மழை வளம் மிகவும் குறையும்.. மேலும் ஆறு வழி போக்கில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன.. இதனால் வைகை ஆறு மெல்ல மெல்ல அழிந்து வருகிறது..

கண்டிப்பா மேகமலை வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும்.. இந்த திட்டம் தற்போது வரை கிடப்பில் உள்ளது.. மேகமலை காக்க படுமா! வைகை ஆறு அழியாமல் காக்க படுமா!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,