வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் பரமபதநாதர்

திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் பரமபதநாதர் (சிவப்பு வண்ண கட்டமிடப்பட்டிருப்பது), மற்றும் ஆனந்த நிலைய விமான வெங்கடேஸ்வரர்!

ஆனந்த நிலைய விமான வெங்கடேஸ்வரர்! தரிசிக்க ஆனந்தம் கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார்.
அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரா!

நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார். கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார்.

வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.
பரமபதநாதர் (சிவப்பு வண்ண கட்டமிடப்பட்டிருப்பது), அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரா!

ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டு இருக்கும் இந்த திருக்கோலம் தான் பரமபதநாதர் எனப்படுகிறது.

இது ஒரு வெள்ளை அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும். இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.
அதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும். இது ஒரு சிவப்பு அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும்.

"..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்களை சொல்ல முடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு.., இவருகிட்ட நமது வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வர ..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.."

இனிமே, திருப்பதிக்கு போறவங்க..ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செஞ்சிட்டு வந்துடாம, அவருக்கு பக்கத்தலயே இருக்குற பரமபதநாதரையும் வணங்கிட்டு வாங்க..

இவர எப்போ தரிசனம் செஞ்சாலும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு பெருமாள் தரிசனம் செஞ்ச பலன் கிடைக்கும்னு ஆகமங்கள்லயே சொல்லியிருக்கு.

வைகுண்ட ஏகாதசி அன்று புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரில் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதகராக விசேஷமான திருவாபரணங்கள் அணிந்து மாடவீதி வலம் வருவார் என்பது விசேஷம்.."

மாசத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி, இரண்டு பர்வங்கள், திருவோண நட்சத்திரம் இந்த ஐந்தும் விஷ்ணு பஞ்சகம் என்று மஹாவிஷ்ணுவிற்கு பீரீத்தியான நாட்கள்.

அன்று மட்டும் மற்ற வைணவ கோயில்களில் வடக்கு துவாரம் வழியாக உற்சவர் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் வடக்கு துவாரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், திருமலை திருப்பதியில் வடக்கு துவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது.

அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது.

ஓம் நமோ வெங்கடேசாய..






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,