மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். ஆறாம் காலம் பள்ளியறை பூஜை மிகவும் விஷேசமான பூஜை.
இரவு 9:00 மணியளவில் சுந்தரேஸ்வரர் முலஸ்தானத்தில் பள்ளியறை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம், புஸ்பங்கள் சாத்தப்பட்டு, முலஸ்தானத்தில் திரையிடப்பட்டு பள்ளியறை சுவாமி சிவவாத்தியம், திருமுறைகள் முழங்க தூபம், சாம்பரம் பேடப்பட்டவாறு வெள்ளி மூடு (திரையிடப்பட்ட) பல்லக்கில் எழுந்தருள்வார்.கதவுகள் அடைக்கப்படும்.
சுவாமி சன்னதி 1ம் பிரகார வலம் பின் பல்லக்கு புரப்பட்டு சுவாமி சன்னதி எஜஸ்தம்பம் (கொடிமரம்) முன் நிருத்தப்பட்டு ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களை பட்டர் ஓதுவார்.
பின் முக்குறணி விநாயகர் முன் பல்லக்கு நிறுத்தப்பட்டு ஏகதீபம், அலங்காரதீபம், 1 முக சூடத்தட்டு சமர்பிக்கப்படும். பின் கிளிகுண்டு மண்டபத்தில் ஏகதீபம், அலங்காரதீபம், 1 முக கர்பூரம் சமர்பிக்கப்படும்.
பின் பல்லக்கு புரப்பட்டு அம்பாள் சன்னதி கிளிகுண்டு மண்டபத்தில் உள்ள பலிபீடம் முன் பல்லக்கு நிருத்தப்பட்டு சாம்பரம், ஆலவட்டம் வீசப்படும், தூபம் பேடப்படும்.
அம்மன் சன்னதியில் இருந்து பாதுகாநாதரை அடியார் ஒருவர் எடுத்து வந்து பல்லக்குக்கு நேர்கீழே வைப்பார். பாதுகாநர் படங்களை கீழே இனைத்துள்ளேன்.
மீனாட்சிக்கு மூக்குத்தி தீபாராதனைனை பின் அம்பாள் பிரதினிதியாக பட்டர் திருநீறுக்கொடுத்தவாறு வருவார். பள்ளியறை பூஜையின் பொழுது மட்டுமே அம்மன் சன்னதியில் திருநீறு பிரசாதம் தரப்படும். பின் பாதுகாநாதருக்கு பன்னீர்ரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனம், மல்லிகை புஸ்பங்கள் சாத்தப்படும்.
பின் 1 முக கர்பூரம் சமர்பிக்கப்பட்டு பாதுகாநாதர் மீண்டும் அம்பாள் சன்னதிக்கு ஏழுவார். பின் பல்லக்கு புரப்பட்டு கொலுமண்டபம் எதிரே உள்ள திருமலை நாயக்கர் சிலைகளுக்கு முன் நிருத்தப்பட்டு ஏகதீபம், அலங்காரதீபம், 1முக கர்பூரம் சமர்பிக்கப்படும்.
பள்ளியறையில் அம்பாள் ஷோடசியாக பாவிக்கப்படுகிறாள். பின் பள்ளியறை சுவாமி பல்லக்கில் இருந்து பட்டர் கைகளில் எழுந்தருளி பள்ளியறைக்கு ஏழுவார். தூபங்கள் பேடப்படும். புஸ்பங்கள் சாத்தப்பட்டடும். மதுரையில் பள்ளியறை திரட்டுப் பால் மிகவும் விஷேசமான பிரசாதம் ஆகும். சுவாமி அம்பாளுக்கு பால், வாழைப்பழம், பெரிச்சம்பழம், பெரிகடலை, நைவேத்யம் மாக சமர்பிக்கப்படும் பின் ஏகதீபம், 1 முக கர்பூரம் சமர்பிக்கப்படும்.
பென்ஊஞ்சல் பாடி சுவாமி அம்பாளை தூங்கவைப்பர். பின் சண்டிகேஸ்வரி, சண்டிகேஸ்வருக்கு, பைரவருக்கு பூஜை நடைபெறும். இத்துடன் பள்ளியறை பூஜை முடிவடைகிறது.
No comments:
Post a Comment