கர்நாடக மாநிலத்தில் உள்ள சிர்ஷி என்ற ஊரில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆறு வந்துவிடும். வற்றாமல் ஓடும் இந்த ஆற்றின் நீரை நம்பி அங்கு பல்லாயிரம் மக்கள் வாழ்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு தென்மேற்கு பருவமழையின் போது வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதை வெறும் சாதாரண ஆறு என்று நினைத்த மக்களுக்கு 1969 ஆண்டு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
வறட்சி காரணமாக கடந்த 1969 ஆண்டு இந்த ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. அப்போது அதன் மையப்பகுதியில் இருந்து பல அதிசயங்கள் வெளிவர ஆரமித்தன.
முதலில் ஆங்காங்கு சில பாறாங்கற்கள் தெரிய ஆரமித்தது. அந்த பாறாங்கற்களை உற்று நோக்குகையில் பல்லாயிரம் லிங்கங்கள் தெரிய ஆரமித்தன. அதோடு ஒவ்வொரு லிங்கத்திற்கும் அருகே நந்தியின் சிலையும் வடிக்கப்பட்டிருந்தன. எப்போதும் வற்றாமல் ஓடு
ம் இந்த ஆற்றில் ஆயிரக்கணக்கில் லிங்கங்கள் வடிப்பதென்பது அறிவியலுக்கு எட்டாத ஒரு விடையாம். அப்படி இருக்கையில் அங்கு எப்படி இவளவு லிங்கங்கள் வடிக்கப்பட்டது? அதை யார் வடித்தார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆராய்ச்சியாளர்களால் இதுவரை அறியமுடியவில்லை.
ம் இந்த ஆற்றில் ஆயிரக்கணக்கில் லிங்கங்கள் வடிப்பதென்பது அறிவியலுக்கு எட்டாத ஒரு விடையாம். அப்படி இருக்கையில் அங்கு எப்படி இவளவு லிங்கங்கள் வடிக்கப்பட்டது? அதை யார் வடித்தார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆராய்ச்சியாளர்களால் இதுவரை அறியமுடியவில்லை.
ஒரு காலத்தில் இந்த பகுதி சிற்பக்கலை கூடமாக இருந்திருக்கலாம் என்றும், நதியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு அந்த கலைக்கூடம் ஆற்றில் மூழ்கி இருக்கக்கூடும் என்றும் ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். அனால் இவை அனைத்தும் வெறும் யுகமே தவிர அதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. எப்படி இருந்தாலும் நந்தியோடு ஆயிரக்கணக்கில் லிங்கங்கள் செதுக்குவதென்பது சாதாரணம் இல்லை. அந்த மாபெரும் சிற்பிகளின் திறன் நிச்சயம் பாராட்டத்தக்கது.
இங்கு உள்ள லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை எதுவும் செய்யப்படுவதில்லை. ஓடும் ஆற்றின் ஆற்றின் நீரினால் லிங்கத்திற்கு தினம் தினம் அபிஷேகம். ஆண்டுதோறும் மகா சிவராத்திரியின் போது மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும். இறைவன் எங்கும் இருக்கின்றான் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
இதேபோன்று கம்போடியா நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவில் தான் அங்கோர்வட். இந்தக் கோவிலில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கபால் சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில் இதேபோன்ற ஆயிரம் கணக்கான லிங்கங்கள் அழகாக காட்சி அளிக்கின்றது.
காடு மலைகளை சூழ்ந்திருக்கும் இந்த ஆற்றில் சிவலிங்கம் தவிர ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி போன்ற சுவாமி சிலைகளும் காணப்படுகிறது. இந்த ஆற்றுக்கு காடு மலைகளை தாண்டி தான் செல்ல வேண்டும். ‘கபால் சியான்’ என்றால் பாலம் என்று பொருள். இங்கு இயற்கையாகவே அமைந்துள்ள இந்தப் பாறை பாலத்தின் வழியாகத்தான் இந்த ஆற்றிர்கு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இங்கு 50 அடி உயரமுள்ள ஒரு நீர்வீழ்ச்சியும் உள்ளது.
இந்தியாவில் ஒரு பகுதியில் உள்ள கர்நாடக மாநிலத்திலும், பல மைல் தூரத்திற்கு தாண்டி உள்ள கம்போடியா நாட்டிலும் ஒரே அமைப்பினைக் கொண்ட ஆயிரம் சிவலிங்கங்கள் உள்ளதை வைத்து பார்க்கும்போது, இரண்டிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் இருந்து வருகிறது
No comments:
Post a Comment