மொட்டை பிள்ளையார்

மதுரையில் இருக்கும் ஒரு கணபதியை, மொட்டைப் பிள்ளையார், வியாபார விநாயகர் என்று அன்புடன் அழைக்கின்றனர் பக்தர்கள். சிவன் கணபதியின் தலையை வீழ்த்தியதின் உணர்வாக தலையே இல்லாத மொட்டை கணபதியாக இங்கு அருள்பாலிக்கிறார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ. தொலைவில் இருக்கிறது கீழ மாசி வீதி. இங்கே அமைந்திருக்கும் மொட்டை விநாயகர் கோயில், வெகுபிரபலம். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அழகிய ஆலயம் இது. மதுரையின் மையப்பகுதியில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்த பிள்ளையார் அமைந்துள்ளதால் இவரை வியாபார விநாயகர் என்றும் அழைக்கின்றனர். அந்நியர் படையெடுப்பின்போது, மீனாட்சியம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம்.


அப்போது, மொட்டை விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு, விபூதி பூசிக்கொண்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதைப் பார்த்து கோபமுற்ற அந்நிய தேசத்து மன்னன், பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி, ஆற்றில் தூக்கி வீசினானாம். பிறகு சிவனாரின் பேரருளால் அந்த சிரசு மீண்டும் அதே இடத்துக்கு வந்ததைக்கண்டு ஆடிப்போன அவன், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டான் என்கிறது கோயிலின் தல வரலாறு. ஆக, மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தையே காப்பாற்றிய விநாயகர் இவர் எனப்போற்றுகின்றனர் பக்தர்கள். புதிதாக வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பவர்கள், கடை திறப்பவர்கள் இங்கு வந்து மொட்டை விநாயகருக்கு அபிஷேகம் செய்து, 108 சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம்...



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...