1. 108 திவ்ய தேசத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டுமே நவக்கிரகங்கள் உள்ளது.
2. பஞ்ச பூத தலங்கள் மதுரை மாநகரிலேயே உள்ளது.
3. சிவபெருமானுக்கு & அம்பாளுக்கும் பட்டாபிசேகம் இங்கு மட்டுமே செய்யப்படுகிறது.
4. ஆறுபடை வீட்டில் மதுரை திருப்பரங்குன்றம் முருகனுக்கு மட்டுமே பட்டாபிசேகம் செய்யப்படுகிறது.
5. சமத்துவபுரம் முதல் முதலில் மதுரை மாவட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது
6. வேற்று வர்ணத்தவர்களும் அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர் ஆக ஆனது முதல் முதலில் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவிலில் தான்.
7. சிவபெருமானுக்கு மனித உருவம் மதுரையில் இரண்டு இடத்தில் உள்ளது (திருப்பரங்குன்றம் & இம்மையில் நன்மை தருவார்).
8. சுதந்திர பெற்ற பின் மாநகராட்சி ஆனது மதுரை தான்.
9. சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளை மதுரையில் மட்டும் உள்ளது.
10. ஆதீன மடம் முதல் முதலில் உருவானது மதுரையில் தான்.
11. சொக்கநாதர், கள்ளழகர் கிட்ட மட்டும் தான் இடுப்பில் கத்தி இருக்கும் வேறு எந்த சிவபெருமானிடமும், பெருமாளிடமும் இருக்காது.
12. ஒரே ஊரில் இரண்டு கலெக்டர் அலுவலகம் இருந்தது மதுரையில் தான் (மதுரை & இராமநாதபுரம்).
13. நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தது மதுரை திருவாதவூர்.
14. 276 தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் 3 மதுரையில் உள்ளது.
15. மகாத்மா காந்தி மதுரைக்கு 5 முறை வந்துள்ளார்.
16. மகாகவி சுப்ரமணிய பாரதியார் மதுரை சேதுபதி பள்ளியில் பணிபுரிந்தார்.
17. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படித்தது மதுரை திருநகர் முக்குலத்தோர் பள்ளி & மதுரை பெரியார் யூனியன் கிறிஸ்டியன் பள்ளி.
18. இரமணா மகரிசி படித்தது மதுரை ஸ்காட் பள்ளி.
19. மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு.
20. பல்லவநாடு போதிதர்மர் போல் பாண்டியநாடு போதிசேனா பற்றி யாருக்கும் தெரியாது இவர் மதுரையில் பிறந்த போதிதர்மர் போல புத்த மதத்தை சீனா & ஜப்பானில் பரப்பினார்.
21. சாம்ராஜ்யம் மாற்றினாலும் தலைநகராக மதுரையே இருந்துள்ளது (இந்தியாவிலேயே வேறு எந்த ஒரு ஊரும் இருந்தது இல்லை).
22. மதுரையில் இரண்டு முறை திருத்தாண்டவம் ஆடி உள்ளார் நடராசர் & வலது கால் மாற்றி ஆடியதும் இங்கு மட்டுமே.
23. மதுரை பிறக்க, வாழ, இறக்க, தரிசிக்க, நினைக்க, கேட்க, சொல்ல முக்தி தரும் திருத்தலம்.
24. இந்து மதத்தின் 6லில் நான்கு உட்பிரிவுகள் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம்) உட்பட சமணம், புத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் சர்வ மதத்திற்கும் முக்கியத்துவம் தந்த ஊர் மதுரை.
No comments:
Post a Comment