ராமேஸ்வரம் | Rameswaram Temple

சிவசிவ சிவசிவ

ராமேஸ்வரம் ஆலயத்தைப் பற்றி......

ராமநாதசுவாமி....

மூலவர் – ராமநாதசுவாமி

( ராமலிங்கேஸ்வரர் ) , காசி விஸ்வநாதர்
அம்பாள் - பர்வதவர்த்தினி

( மலைவளர்காதலி ) , காசி விசாலாட்சி
தலமரம் –

தீர்த்தம் – கோயிலின் உள்ளே உள்ள 22 தீர்த்தங்கள் மற்றும் கோயிலின் வெளியே உள்ள 22 தீர்த்தங்கள் சேர்த்து மொத்தம் 64 தீர்த்தங்கள்

புராண பெயர் – கந்தமாதன பர்வதம் , திருவிராமேஸ்வரம்
ஊர் – ராமேஸ்வரம்
மாவட்டம் – ராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – அப்பர் , சம்பந்தர்

• தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 8வது தலம்

• 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம். இந்த ஜோதிர்லிங்க சிவனாரின் சந்நிதி மூல சிவனாரின் சந்நிதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. விபீஷணனுக்கு அருள் செய்த சிவனார் இவர்

• ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனாரை வழிபட்ட தலம்

• காசியில் இருந்து அனுமன் லிங்கம் கொண்டுவர தாமதமானதால் சீதை மணலால் அமைத்த லிங்க திருவடிவமே ராமநாதர். அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த காசி விஸ்வநாதர் ராமநாதசுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் உள்ளார்.

• அனுமன் கொண்டுவந்த மற்றொரு சிவலிங்க திருவடிவம் கோயில் நுழைவுவாயிலின் வலப்புறம் உள்ளது

• ராமர் வழிபட்ட தலமாதலால் சிவனார் சந்நிதியில் தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.

• சிவனாரின் மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிகலிங்கம் உள்ளது

• முதல்பூஜை காசி விஸ்வநாதருக்கே நடைபெறுகின்றது. அதன்பிறகு தான் ராமலிங்கசுவாமிக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன

• சிறந்த புண்ணிய யாத்திரைத்தலம் இது. காசி-ராமேஸ்வரம் யாத்திரை என்பது முதலில் ராமேஸ்வரம் வந்து கடலில் நீராடி , ராமநாதசுவாமியை வணங்கி , பின் இங்கிருக்கும் கடலில் இருந்து மண் மற்றும் அக்னி தீர்த்த நீரை எடுத்துக்கொண்டு ( கோடி தீர்த்த நீரை கொண்டு செல்லவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது ) காசிக்கு சென்று , அம்மண்ணை கங்கையில் கரைத்து அக்னி தீர்த்த நீரால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து , பின் கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்டு , அதன்பின் கங்கை நீரை எடுத்துக்கொண்டு திரும்பவும் ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமிக்கு அக்கங்கை நீரால் அபிஷேகம் செய்து ராமநாதசுவாமியை வழிபடவேண்டும். இதுவே முறையான காசி - ராமேஸ்வரம் யாத்திரை. தனுஷ்கோடி இத்தலத்தையடுத்துள்ளது. இங்கு வந்து முழுக்கு போட்டால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பது மரபாக உள்ளது

• கோயிலின் எதிரில் உள்ள கடலே புகழ்பெற்ற அக்னி தீர்த்தம். இக்கடலில் அலைகள் இல்லை என்பது வித்தியாசமான ஒன்று

• புகழ்பெற்ற மடங்களின் கிளைகளும் , ஏராளமான சத்திரங்களும் கோயிலை சுற்றி அமைந்துள்ளன

• இக்கோயிலின் நீண்டு , அகன்ற பிரகாரங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. மூன்றாவது பிரகாரமே உலகளவில் புகழ்பெற்ற மிக நீண்ட பிரகாரம். இப்பிரகாரத்தில் 12௦௦ தூண்கள் உள்ளன

• மிகப்பெரிய கலையழகு நிறைந்த கோயில்

• கோயிலின் உள்ளே 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இத்தீர்த்தங்களில் கோடி தீர்த்தம் மிகப்புனிதமானது. கோயிலிலுள்ள தீர்த்தங்களும் அவற்றில் நீராடுவதால் கிடைக்கும் பலன்களும் :

o 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

o 2. சாவித்திரி தீர்த்தம்,

3. காயத்ரி தீர்த்தம்,

4. சரஸ்வதி தீர்த்தம் :
இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

o 5. சேது மாதவ தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

o 6. நள தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

o 7. நீல தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

o 8. கவாய தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

o 9. கவாட்ச தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

o 10. கந்நமாதன தீர்த்தம் : சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

o 11. சங்கு தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

o 12. சக்கர தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

o 13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

o 14. சூர்ய தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

o 15. சந்திர தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

o 16. கங்கா தீர்த்தம்

17. யமுனா தீர்த்தம்

18. காயத்ரி தீர்த்தம் :
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

o 19. சாத்யாம்ருத தீர்த்தம் : திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

o 20. சிவ தீர்த்தம் : இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

o 21. சர்வ தீர்த்தம் : இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

o 22. கோடி தீர்த்தம் : இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது.

இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவ
தால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.

• கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

• இத்தலத்தை சுற்றியுள்ள தேவிப்பட்டினம் , திருப்புல்லாணி , பாம்பன் , தங்கச்சிமடம் , மண்டபம் முதலிய இடங்களில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் இக்கோயிலுடன் தொடர்புடையவையே. கோயிலின் உள்ளேயும் , வெளியேயும் என மொத்தம் 64 தீர்த்தங்கள் இருப்பதாக தலவரலாறு சொல்கிறது

• சிவனார் மற்றும் அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகின்றனர்

• சிவனார் சிறிய சிவலிங்கத் திருமேனியராக சிறிய ஆவுடையாருடன் திருக்காட்சி தருகிறார். கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

• சிவனாருக்கு தாழம்பூவை படைப்பது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று

• கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவர் எதிரில் பலிபீடம் இருப்பது வித்தியாசமான ஒன்று

• சிவனார் சந்நிதி பிரகாரத்தில் அம்பாள் தாசரான ராயர் பிரதிஷ்டை செய்த உப்புலிங்கம் தனிச்சன்னதியில் உள்ளது.

• பிரகாரத்தில் சீதை மணலால் லிங்கம் அமைக்க , ராமர் அச்சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சி சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகில் அனுமன் , சுக்ரீவன் முதலியோரும் , வானர வீரர்களும் உள்ளனர்

• நளன் , நீலன் , கவன் முதலியோரால் வழிபடப்பட்ட சிவலிங்கத் திருமேனிகளும் தனித்தனி சந்நிதிகளில் உள்ளன

• சிவனாரின் சந்நிதி பிரகாரத்தில் இரு சிவலிங்கத் திருமேனிகளுக்கு இடையில் சரஸ்வதி , சங்கர நாராயணர் , அர்த்தநாரீஸ்வரர் , ஏகாதச ருத்ரர் ( 11 லிங்க வடிவங்கள் ) ஆகியோர் திருக்காட்சி தருகின்றனர்

• அம்பாள் தனிக்கோயிலில் நின்ற கோலத்தில் திருக்காட்சி தருகிறார்

• அம்பாள் சந்நிதியில் உள்ள ஸ்ரீ சக்கரம் சிறப்புமிக்கது

• அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி சந்நிதிகள் உள்ளன

• அம்பாளுக்கான சக்திபீடங்களில் இத்தலம் சேதுபீடமாக திகழ்கிறது

• அம்பாளுக்கு சித்திரைப்பிறப்பன்று மட்டும் சந்தன அலங்காரம் செய்யப்படுவது சிறப்பான ஒன்று

• அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் சந்தான விநாயகர் , சௌபாக்ய விநாயகர் என இரு விநாயகர்கள் அடுத்தடுத்து அமைந்து அருள்பாலிக்கின்றனர்

• அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் ஏழுதலை ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட காலத்தில் ரங்கநாதர் கையில் தண்டத்துடன் திருக்காட்சி தருவது சிறப்பான ஒன்று

• பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் திருக்காட்சி தருகிறார். இவரின் சந்நிதி பின்னால் ஒரு கரம் மட்டும் உள்ளது. பதஞ்சலி முக்தி பெற்ற தலம் இது. நடராஜரின் முன்னால் நந்தி உள்ளது

• சேதுமாதவர் சந்நிதி மிக விசேஷமானது. இப்பெருமாளின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன. இவரது சந்நிதி அருகில் லட்சுமி நாராயணர் மற்றும் யோக நரசிம்மர் இருவரும் அருகருகே காணக்கிடைக்கின்றனர்

• ராமரை பற்றியிருந்த பிரம்மஹத்தியை பைரவர் பாதாளத்தில் அழுத்தியதாக வரலாறு சொல்லப்படுகிறது. இவர் பாதாள பைரவராக கோடி தீர்த்தம் அருகில் தனிச்சன்னதியில் திருக்காட்சி தருகிறார்

• சிவராத்திரி அபிஷேகங்கள் , திருக்கல்யாண உற்சவம் , தெப்போற்சவம் , வெள்ளிக்கிழமைகள
ில் தங்கப்பல்லக்கு புறப்பாடு , வசந்தோற்சவம் , ராமலிங்கப்பிரதிஷ்டை திருவிழா முதலான அனைத்து உற்சவங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன

• ஆனி , ஆடி , மாசி மாதங்கள் நடைபெறும் உற்சவங்கள் மிக விசேஷமானவை

• கிழக்கு கோபுர முகப்பில் உள்ள சேதுபதி மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது

• கிழக்கு கோபுர நுழைவுவாயில் அருகே ஆஞ்சநேயர் சந்நிதி

• பள்ளிகொண்ட பெருமாள் , சந்தான கணபதி , மகா கணபதி , முருகர் , நடராஜர் , மகாலட்சுமி , நந்திதேவர் முதலானோரின் சந்நிதிகளும் உள்ளன

• ராமர் , லட்சுமணர் , சீதை முதலியோரின் உற்சவ மூர்த்தங்கள் தனிச்சன்னதியில் உள்ளன. ஆனி மாதத்தில் நடைபெறும் ராமலிங்கப் பிரதிஷ்டை , வைகுண்ட ஏகாதசி , ராம நவமி மற்றும் ஆடி அமாவாசை முதலான உற்சவங்களின் போது இந்த ராமர்-சீதை-லட்சுமணர் உற்சவ மூர்த்தங்களின் புறப்பாடு நடைபெறுகிறது

• ராமலிங்கப்பிரதிஷ்டை விழாவின்போது ராவணன் சீதையை கவந்து செல்லுதல் , ராவணனை ஜடாயு தடுத்தல் , ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல் , ராமர் ராவணனை வதைத்தல் , விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தல் , ராமலிங்கப்பிரதிஷ்டை செய்தல் முதலான வைபவங்கள் நடைபெறுகின்றன

• மூர்த்தி , தலம் , தீர்த்தம் என மூன்றாலும் சிறப்புபெற்ற தலம்

• முற்காலத்தில் ஊர்ப்பெயர் – சேது எனவும் , கோயில் பெயர் – ராமேஸ்வரம் என விளங்கியதாகவும் வரலாறு

• மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , பங்குனி உத்திரம் , திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள் சிறப்புடன் நடைபெறுகின்றன

• மழலை பாக்கியம் கிடைக்கவும் , செல்வ வளம் பெறவும் , நாக தோஷங்கள் நீங்கவும் வழிபடவேண்டிய தலம்

• பிதுர் காரியங்கள் செய்ய மிகச்சிறந்த தலம்

• தீர்த்தமாடுதல் முதலில் தனுஷ்கோடியில் ஆரம்பித்து கோடி தீர்த்தத்தில் முடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

• வாலில்லாத ஆஞ்சநேயர் கோயில் ராமநாதர் கோயிலில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட ஆஞ்சநேயர் திருவடிவில் சிப்பி ஒன்று இருப்பதைக் காணலாம்

• இங்கிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள கந்தமாதன பர்வதத்தில் ராமர் பாதம் உள்ளது. இங்கு அமைந்துள்ள தீர்த்தம் ஜடா தீர்த்தம் எனப்படுகிறது

• வாலியைக் கொன்ற பாவம் தீர சுக்ரீவன் தீர்த்தம் உண்டாக்கி சிவனாரை வழிபட்ட கோயில் சுக்ரீவன் கோயில் என்ற பெயரில் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ளது

• தனுஷ்கோடி செல்லும் வழியில் சுமார் 5 கிமீ தொலைவில் கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது

• தனுஷ்கோடி சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

• ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் சுமார் 12 கிமீ தொலைவில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியில் உள்ள தீவில் வைத்து தான் ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததாக சொல்லப்படுகிறது, இந்த இடத்தில் கோதண்டராமர் கோயில் ஒன்று உள்ளது. ராமருக்கு அருகில் விபீஷணன் வணங்கியவாறு உள்ளார். ஆஞ்சநேயரும் அருகில் காட்சி தருகிறார்.

மதுரையில் இருந்து சுமார் 2௦௦ கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 5௦ கிமீ தொலைவில் அமைந்துள்ளது நான்குபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக விளங்கும் இப்புகழ்பெற்ற ராமேஸ்வரம் சிவத்தலம்

ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மரகத நடராஜர் புகழ்பெற்ற உத்தரகோசமங்கை கோயில் அருகே உள்ளது....

நமச்சிவாய வாழ்க


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...