திருமாலின் சயனத் திருக்கோலங்கள்!

திருமாலின் சயனத் திருக்கோலங்கள்!

1. ஜல சயனம்

2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம் [உத்தான ]
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்


1 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம் 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.


2 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தல சயனம் மாமல்லபுரம், கடல மல்லை 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் கடல மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.


3 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்) முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.


4 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்) 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.


5 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான வீர சயனம் 59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் (வீரராகவப் பெருமாள்) வீர சயனத்தில் காட்சி தருகிறார்.


6 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான போக சயனம் 40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.


7 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம் 105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.


8 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான பத்ர சயனம் 99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள்) வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள்.


9 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான மாணிக்க சயனம் 61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார்.


இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.


No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...