மதுரை மாநகரம் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டது. இதில் புராதான பெருமை வாய்ந்த மலைகளாக அமைந்திருப்பது யானைமலை, பசுமலை மற்றும் நாகமலை ஆகும். நாகமலையில் இருந்து நிறைய நீர் ஊற்றுகளும் ஓடைகளும் உருவாகின்றன. குறிப்பாக, நாக தீர்த்தம், காக்கா ஊற்று, புல் ஊற்று ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நாகமலையின் பின்புறம் நாக தீர்த்தம் அமையப் பெற்றுள்ளது.
இந்த மலையை தொலைவில் இருந்து பார்ப்போருக்கு இது கிடைமட்டத்தில் படுத்துறங்கும் நாகம் போல காட்சி அளிப்பதால் இம்மலைக்கு நாகமலை என்று பெயர் ஏற்பட்டது. இது தவிர இந்த மலைக்கு பல பெயற்க்காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. நகமலைக்கு வெகு அருகில் வரலாற்று சிறப்பு மிக்க சமணர் மலை அமைந்துள்ள்து. இந்த மலையடிவாரத்தில்தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் வெள்ளைச்சாமி நாடர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன. கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள இந்த மலையில் ஒரு கணவாயும் அமைந்துள்ளது.
நாகமலைக்கு நேர் எதிர் திசையில் புராதான சின்னங்களான சமணர் படுகைகள் அமைந்துள்ளன. தமிழ் நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் இந்த சமணர் குகைகள் கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
மதுரையின், யானைமலை
இந்த மலையை தூரத்திலிருந்து பார்ப்பதற்கு, ஒரு பெரிய யானையொன்று மதுரையை பார்த்தவாறு, அமர்ந்திருப்பது போல தோன்றும்.. யானை அமர்ந்திருக்கும் இரண்டு படங்களை அருகில் இணைத்து பார்த்தபோது.. நமது யானைமலை உண்மையில் ஒரு மஹா பெரிய யானை சிற்பமோ எனக் கருதத் தோன்றுகிறது.. மதுரையின் பெருமை, யானைமலை போற்றுவோம்.
யானை மலையின் உச்சியில், குகை தளம் உள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள சமணர் கல் படுகைகள் இன்றளவும் புதியதாய், பளபளப்போடு கூடிய மெருகுடன் காணப்படுகிறது.
குகைக்குள் குளிர்ச்சியாகவே எந்நேரமும் இருக்கிறது.
-
குகைத் தளத்தின் முன்பாக, கி.பி. ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பாதாமி கல்வெட்டு
No comments:
Post a Comment