கேட்ட வரம் அருளும் தமிழகத்தின் பஞ்ச கிருஷ்ண தலங்கள்!

கேட்ட வரம் அருளும் தமிழகத்தின் பஞ்ச கிருஷ்ண தலங்கள்!


பஞ்ச பூதங்கள் எவையென்று உங்களுக்குத் தெரியும். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இந்த ஐந்து முக்கியமான இயற்கை சக்திகள் இவ்வுலகில் உயிர்கள் வாழ அத்தியாவசியமானது. இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகளை பஞ்ச பூத சக்திகள் என்கிறோம்.

பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவபெருமானின் ஆலயங்களான சிதம்பரம் நடராஜர், திருவண்ணாமலை அண்ணாமலையார், காளஹஸ்தீயில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரநாதர், திருச்சி ஜம்புகேஸ்வரர் போன்றவை பஞ்ச பூதலங்களாக போற்றப்படுகிறது.

இதே போல் வைணவத்திலும் பஞ்ச கிருஷ்ண தலங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இந்த கிருஷ்ண தலங்கள் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ‌ ஆலயங்கள். இந்த கிருஷ்ண ஆலயங்களில், திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் தான் இந்த ஆலயங்களை, கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் என்றும் கொண்டாடுகிறோம்.

இத்தலங்களில் கிருஷ்ணனின் லீலைகள் நடைபெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன. இத்தலங்களில் அடியவர்கள் திருமாலின் தரிசனத்தைப் பெற்றுள்ளனர். திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் பஞ்ச கிருஷ்ண தலங்கள் அமைந்திருக்கின்றது.

திருக்கண்ணங்குடியில் லோகநாதப் பெருமாள்,
திருக்கண்ணபுரத்தில் நீலமேகப் பெருமாள்,
திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாள்,
கபிஸ்தலத்தில் கஜேந்திர வரதப்பெருமாள்,
திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள்

கோவில் ஆகிய ஐந்து ஆலயங்களை பஞ்ச கிருஷ்ண ஆலயங்கள் என்றழைக்கிறோம்.

பதவியை இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், தள்ளிப் போய் கொண்டே இருக்கும் திருமணம் எளிதில் கைக்கூடுகின்ற வரம், குழந்தை வரம் இல்லாத தம்பதியருக்கு குழந்தைச் செல்வத்தை ஆசிர்வதிக்கின்ற தலம் என்று இந்த பஞ்ச கிருஷ்ண ஆலயங்களை வழிபட்டு வர, வேண்டும் வரத்தைக் கொடுக்க வல்லது. நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்களுக்குச் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.


Krishna

No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...