ஐந்து நிமிடத்தில் பகவத் கீதையை சொல்ல முடியுமா

*ஸ்வாமி ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு, ஆபிஸிலிருந்து கிளம்ப!* 
*அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா ?*
அடியேன்:
'ஓ! இன்னும் ஐந்து நிமிடம் இருக்கா?
நமக்கு இரண்டே நிமிடம் போதுமே,
கீதையை சொல்லிவிட' என்று கூறி,

'பகவத் கீதை என்பது ஒன்றுமில்லை
*விடு - பிடி* அல்லது
*பிடி - விடு* அவ்வளவுதான்' என்று சொன்னதும்,
கேட்டவர் ஒரு கோபமான பார்வையுடன் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தார்!!

பிறகு விளக்கியபோது உணர்ந்தார்!

அடியேன் *விடு பிடி என்றால்,* 
இந்த உலக பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளிவிடு

அதேநேரம் பரந்தாமன் பாதங்களைப் இறுகப் பிடித்துக்கொள் அல்லது இறுகப் பற்றிக்கொள் என்று அர்த்தம் !


ஆனால் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு, இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை

பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் இறுகப் பற்றுவது ?!!!
அப்படியானால் கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது.

அதுதான் அடியேன் சொன்ன இன்னொன்று; 
அதாவது,
*பிடி விடு*
என்ன ஓய்! குழப்புகிறீர்!!
குழப்பம் ஒன்றும் இல்லை
*பிடி என்றால் முதலில் பரந்தாமன் பாதங்களைப் பிடி அல்லது பற்று*
*அந்தப் பிடி இறுக, இறுக இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்!!*
அது எப்படி பற்று தானாக விலகும்?
சரி உமக்கு இப்போ ஒரு உவமானம் சொல்லுகிறேன், கேளும்!
ஹோமத்துக்கான சில சமித்து குச்சிகள், ஒரு கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன
அதனை அவிழ்க்க முடியவில்லை
(இது நம்முடைய உலக பாசபந்தம் )

வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்ககட்டி ஒரு குலுக்கு குலுக்கி இறுக்கினால்
(இந்த புதிய கட்டு என்பது பகவானின் பாதத்தைப் பற்றிய நம் உறுதியான பிடிப்பு) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிற்று இறுக்கம் தானாகத் தளர்ந்து கழன்று விடும்

அது போல, நாம் பகவான் மீதான நம் பற்றை இறுக்கிக் கொண்டே சென்றால், உலகப் பற்று என்பது நம்மை விட்டு தன்னாலே விலகி விடும்!!
உலக பந்தங்களை விட்டு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞானிகளின் ஞான மார்க்கம் !
பரந்தாமன் பாதங்களைப் முதலில் பற்றி, தானாக உலக பந்தங்களை விட்டு விடுவது, பக்தி மார்க்கம் அதாவது சாமானிய மக்களான, நமக்கானது!!
*இவ்வளவுதான் கீதையின் தத்துவம்.*
*ஹரே க்ருஷ்ணா*


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...