பௌர்ணமி பூஜை


⇭ பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கிறது.
⇭ ஏழு கிரகங்களுக்குரிய நாட்கள் சேரும்போது அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ⇭ ஒவ்வொரு நாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை :

🌕 அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூஜை செய்பவரை எந்த நோயும் அண்டாது.

திங்கட்கிழமை :

🌕 அம்பிகைக்கு ஆரஞ்சு நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை :

🌕 அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, பலவகை சாதங்கள், தேன், பழங்கள் நிவேதனமாக வைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோஷங்கள், பில்லி, சூனியம் தீரும்.

புதன்கிழமை :

🌕 பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிடைக்கும்.

வியாழக்கிழமை :

🌕 அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை :

🌕 அம்பிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

சனிக்கிழமை :

🌕 அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மரிக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்ச்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன், தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். நவகிரக தோஷம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிடைக்கும்.

🌹 பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூஜை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,