Tomb of Thirumalai Nayakkar | திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திய திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது?


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பலநூற்றாண்டுகளாக பல முன்னோர்களால் கட்டப்பட்டது. அதை நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்தியது திருமலைநாயக்கர். இந்த விசயம் உலகறிந்த ஒன்று.


தஞ்சைபெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழரின் சமாதி இருக்கும் இடம் அனைவருக்குமே தெரியும்.


Map Location :


ஆனால் தஞ்சைபெரிய கோவிலுக்கு நிகரான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திய திருமலைநாயக்கரின் சமாதி இருக்குமிடம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.


மதுரையை சேரந்த ஒருவர் திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது என்பது தொடர்பாக தனது தேடல் வேட்டையை ஆரம்பித்து அவருக்கு கிடைத்த அனுபவங்களை அவரே சொல்வது போல பதிவிட்டுள்ளார்.


அவரது தேடுதல் அனுபவங்கள் கீழே! திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது என்பதை கண்டறியும் நோக்கத்துடன் எடுக்கபட்ட எனது முயற்சிகளின் போது பல கட்டுக்கதைகள் மட்டுமே கிடைக்க பெற்றேன். இறுதியில் எனது கோரிக்கையை பிரபஞ்சத்திடம் முன்வைத்தேன்.



சிலவாரங்கள் கழிந்தது. எனது நண்பர் வீட்டு விசேடத்திற்காக இருசக்கரவாகனத்தில் அருப்புக்கோட்டை என்ற ஊருக்கு சிலைமான் ரிங்ரோடு வழியாக சென்றுகொண்டிருந்தபோது சித்தர்கோவிலுக்கு செல்லும் வழி என்று ஒரு விளம்பரப்பலகை தென்பட்டதை பார்த்தேன்.


அந்த கோவிலுக்கு சென்று வருமாறு எனது உள்ளுணர்வு சொல்ல சித்தர்கோவிலை நோக்கி பயணித்தேன். புலியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அந்த சித்தர் கோவிலுக்குள் சென்று பார்த்தால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன்னதி என்று எழுதப்பட்டு இருந்தது.


இந்த சித்தர் கோவில் யுகம் பல கடந்தது என்பதை உள்ளே செல்லும்போதே அங்கே நிலவும் அதிர்வு அலைகளால் உணர்ந்தேன்! பேராவலுடன் அந்த சித்தர் கோவிலில் இருந்த சித்தரின் திருவுருவைப்பார்த்தால். அது ஒரு மன்னரின் சிலைஉருவம் போன்று தோன்றியது.


அந்த உருவ சிலையை பார்த்த நேரத்தில் என் மனது என்னிடம் இல்லை. அந்த கோவிலின் பூசாரியிடம் சென்று அந்த சிலையை பற்றியும்,கோவிலைப்பற்றிய தகவல்களை கூறும்படியும் கேட்டுகொண்டேன்.



அவர் இந்த புலியூர் என்ற ஊர் தோன்றவதற்கு முன்பாகவே இந்த சித்தர் கோவில் இருந்ததாகவும். இந்த கோவிலை அவரது மூதாதையர்கள் தான் முதலில் இந்த சிலையையும், கோவிலையும் கண்டுபிடித்ததாக கூறினார்.

அவரது மூதாதையர்கள் முதலில் இந்த கோவிலை கண்டுபிடித்த போது இந்த சிலை பாம்பு புற்றால் மூடப்பட்டிருந்ததாம். ஒரு நாள் கனமழையின் போது புற்று கரைந்து இந்த சிலை வெளிப்பட்டதாவும் கூடவே சில ஓலைச்சுவடிகள் இருந்ததாகவும் கூறினார்.


அந்த சுவடிகளை பார்க்கலாமா? என நான் கேட்கவே அவர் கருவறையின் பின்பகுதிக்கு என்னை அழைத்து சென்று அந்த ஒலை ஏட்டுச்சுவடிகளை என்னிடம் காண்பித்தார்.



அதில் எழுதியிருந்த எழுத்துவடிவம் வட்டஎழுத்துக்களாக இருந்தது. அந்த சுவடியில் எழுதப்பட்டிருந்த வட்ட எழுத்துக்கள் நான் ஏற்கனவே தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தில் பார்த்த பாம்பாட்டி சித்தர் ஓலைச்சுவடிகளின் எழுத்துக்களோடு ஒத்து இருந்தது..



நான் கோவிலின் பூசாரியிடம் பாம்பாட்டி சித்தர் சன்னதி என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் இங்குள்ள திருவுருவம் மன்னரின் சிலைபோல் உள்ளதே என கேட்டேன். அவர் இது மன்னர் திருமலைநாயக்கரின் உருவம் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை விவரிக்கலானார்.


திருமலைநாயக்கருக்கு மது மாது என அனைத்து பழக்கமும் உண்டு. அவரது காலத்தில் சைவ வைணவ பிரச்சனை நடந்துகொண்டிருந்தது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகளையும், கும்பாபிஷேக வேலைகளையும் தனது நேரடி பார்வையில் மேற்கொண்டு வந்த மன்னர் திருமலைநாயக்கர் ஒரு நாள் மிதமிஞ்சிய போதையில் மூர்ச்சையடைந்து தனது உயிரை விட்டுவிட்டாராம்.


இதையறிந்த போகர் சித்தர தலைமையில் சித்தர்கள் சதுரகிரி மலையில் ஒன்றுகூடி கூடி பேசினார்களாம். இந்த யுகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணி வேலைகளும், கும்பாபிஷேகமும் முழுமையடையாவிட்டால் அடுத்த கலியுகத்தில் இந்த கோவில் அழிந்தே போய்விடும்.



எனவே பாம்பாட்டி சித்தரிடம் நீ சென்று அந்த கோவிலின் திருப்பணியை முடித்துவிட்டுவா என போகர் கட்டளையிட்டாராம். பாம்பாட்டி சித்தர் சில தைலங்களால் தனது உடலை பதப்படுத்தி தன் உடலை இந்த சித்தர் கோவிலில் வைத்துவிட்டு


திருமலைநாயக்கரின் உடலுக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்தாராம். பின்பு கோவிலின் கும்பாபிஷேக திருப்பணி வேலைகளை பாம்பாட்டி சித்தர் திருமலைநாயக்கர் மன்னர் உருவில் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்.


பாம்பாட்டி சித்தர் திருமலைநாயக்கர் மன்னர் உருவில் இரவில் நகர்வலம் செல்வதுபோல் சுரங்கப்பாதை வழியாக சென்று இந்த சித்தர் கோவிலுக்கு வந்து தனது உடலை பார்த்து வந்துள்ளார்.

இந்த சுரங்கப்பாதை. மீனாட்சிஅம்மன் கோவிலில் இருந்து மதுரை தெப்பக்குளம் வரை இருந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை இன்றும் உள்ளது. (மதுரையை சேர்ந்தவர்களுக்கு இந்த சுரங்க பாதை பற்றிய விபரங்கள் தெரியும்).


இந்த பாம்பாட்டி சித்தர் கோவிலும் தெப்பக்குளத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. மதுரை மீனாட்சி கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த பிறகு திருமலைநாயக்கர் உருவில் இருந்த பாம்பாட்டி சித்தரை காணவில்லை.



இந்த சித்தர் கோவிலுக்கு வந்த பாம்பாட்டி சித்தர் திருமலை நாயக்கரின் உடலை கல்லாக்கிவிட்டு மீண்டும் தனது உடலுக்குள் புகுந்து கொண்டார். பாம்பாட்டி சித்தர் தனது உடலை வைத்த இடமே இந்த சித்தர் கோவில் திருத்தலம்.


திருமலை நாயக்கரின் உடல் கல்லானதும் இந்த திருத்தலத்திலேதான். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இந்த சித்தர் கோவிலுக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.


இந்த சித்தர்கோவிலின் முகவரி.

மதுரை தெப்பக்குளத்தில் இருந்து சிந்தாமனி ரிங்ரோடு வழியாக சென்றால் புலியூர் என்ற கிராமத்தில் சித்தர் கோவில் அமைந்துள்ளது.


Map Location :







No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...