மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள் மற்றும் வளர்ந்த திருத்தலம்

1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7. அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில்.

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம். சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. உலக அதிசியங்களுள் ஒன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்றே கூறலாம் . இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி. நவராத்திரி 4ம் நாள் இன்று நமது சிவகங்கை விஸ்வநாதர் ஆலயத்தில் விசாலாட்சி மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலிககிறார்.

16. மீனாட்சி அம்மன் மொத்தம் 6 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள். சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.

17. முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்த பின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும்_அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்குவர்.


18. மதுரையில் பல அதிசயங்கள் நடக்கும். அதன்படி, மீனாட்சி அம்மன் தினமும் 8 விதமான சக்திகளாக உருவகப்படுத்தி ஆராதிக்கப்படுகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். 

19. இனி அந்த 8 வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்
6 - 8 நாழிகை வரையில் புவனேஷ்வரியாகவும்,
12 - 15 நாழிகை வரையில் கௌரியாகவும்,
மதியானத்தில் சியாமளாகவும்,
சாயரட்சையில் மாதங்கியாகவும்,
அர்த்த ஜாமத்தில் பஞ்சதசியாகவும்,
பள்ளியறைக்கு போகையில் ஷோடசியாகவும் அன்னையை உருவகப்படுத்தி ஆராதிக்கப்படுகிறாள்.

20. அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு_ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருவாள். அன்னையின் ஒவ்வொரு காட்சியையும் காண கண்கோடி வேண்டும். ஒரேநாளில் இந்த அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது.

21. எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் சுவாமி சன்னதியிலிருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி மூக்குத்தி தீபாராதனை நடக்கும். அதன்பின்னரே அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படும். மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ - சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.


22. மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.


23. பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை பலன் தருவாள் என்கின்றனர். வியாபார நஷ்டத்திற்கு தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் முன்னேற்றம் பெறலாம் என சொல்கின்றனர்.




மதுரையில் வசிக்கும் உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்?
மதுரை அன்னை மீனாட்சி வளர்ந்த திருத்தலம் குறித்து?

அவனியாபுரத்தில் ஸ்ரீ பாலமீனாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் என்பது தான் அந்த ஆலயம்.

இது 7ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இந்த கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வருகை புரிந்துள்ளார்.
மீனாட்சி திருக்கல்யாணத்தன்று, அதே திருவிழா இங்கும் நடைபெறுகின்றது.

 


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...