Thiruvannamalai Kovil adi mudi | அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது

அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது என்றால் கேட்க மிக ஆச்சர்யமாக இருக்கிறது தானே...!!

அது எப்படி அவ்வளவு பெரிய திருவண்ணாமலையை மறைக்க எதனால் முடியும், மலை உச்சியில் தீபம் ஏற்றினால் சுற்றி இருபது கிலோமீட்டர் தாண்டி தெரியும். அப்படிப்பட்ட மலையை மறைக்க யாரால் முடியும் என்று தான் நினைக்க தோன்றும். நமக்கும் அவ்வாறே நினைக்க தோன்றியது ஆரம்பத்தில், கிரிவல பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்க்கும் போது அண்ணாமலையார் மலை சுற்றிலும் மறைந்து விடுகிறது. நின்று பார்க்கும் நமக்கு கொஞ்சம் கூட தெரியாமல் ஒரு சிறு மலை மறைத்து விடுகிறது.

அடியையும் பார்க்க முடிவதில்லை
முடியையும் பார்க்க முடிவதில்லை..

அப்படி மறைத்தவாறு நிற்கும் மலையின் பெயர் என்ன தெரியுமா?
உண்ணாமலை அம்மன் பெயரில் அழைக்கப்படும் மலை தான் அது. இதன் பின்னால் ஒரு கதையே இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்....

சிவனை சக்தி தனக்குள் நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சுமம் நிறைந்த இடமாகும் அந்த இடம். அந்த இடம் தான் கண்ணப்பனார் கோயில் அமைந்திருக்கும் இடம். இதைப் பற்றி எழுத நேர்ந்தால் நிறைய சொல்ல வேண்டும். ஒற்றை பாறையில் ஒரு கோயில் அமைந்துள்ளது திருவண்ணாமலையில் என்றால் அது கண்ணப்பனார் கோயில் தான்.

ஆரம்ப காலத்தில் ரமணர் இங்கு அதிகம் இருந்து இருக்கிறார். உள் கிரிவல பாதை முடியும் இடமும் இதுவே எனலாம்‌‌. இந்த கோயில் அமர்ந்திருக்கும் பாறையின் கீழ் ஒரு குகை இருந்திருக்கிறது. அந்த குகையில் அமர்ந்து சித்தர்கள் தவம் செய்து வருவார்கள்.

அந்த குகையின் பெயர் புலிப்புகா குகையாம். அதற்கான ஆதாரம் இந்த பதிவில் இருக்கும் கல்வெட்டை பார்த்தாலே தெரியும். பல லட்சம் பக்தர்கள் மாதம் தோறும் கிரிவலம் வந்தாலும், யாரோ ஒரு சிலர்க்கு தான் இந்த கோயிலில் உள்ள கண்ணப்பனாரை வணங்கும் பாக்கியம் கிட்டும் என்பது அதிசயமே!!

ராகு கேது தோஷம் போக்க ஸ்ரீ களஸ்த்ரி போக முடியாதவர்கள் இந்த கோயிலில் வந்து வணங்கினாலே தோஷம் போகும் என்கிறார்கள் சித்தர்கள். இந்த கோயில் அமைவிடத்தில் நின்று பார்த்தால் கார்த்திகை மஹா தீபம் ஏரிவதை பார்க்க முடியாது. நூறு மீட்டர் தாண்டி சென்று பார்த்தால் தான் அண்ணாமலையின் தோற்றமே தெரியும் . அப்படிப்பட்ட அற்புதம் நிறைந்த இடங்கள் திருவண்ணாமலை யில் நிறைய இருக்கிறது.

Tiruvannamalai Raja Gopuram





No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...